கலெக்டரிடம் மனு கொடுக்கத் தேவையில்லை. ஒரு எஸ்.எம்.எஸ் போதும்

கலெக்டரிடம் மனு கொடுக்கத் தேவையில்லை. ஒரு எஸ்.எம்.எஸ் போதும். 24 மணி நேரத்திற்குள் பதில் வந்துவிடும். (மக்களின் சேவைக்கு முன் உதாரணம்)
“ஒரு மாதமாக, எங்க வீட்டு ஏரியா கார்ப்ரேஷன் குழாயில் தண்ணீர் வரவில்லைங்க. அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்கவில்லை. கலெக்டருக்கு மனு மூலம் தெரியப்படுத்தலாம் என்று கலெக்டர் அலுவலகத்திற்குச் சென்றால் கூட்டம் அதிகமாக இருக்கிறது. வேலைக்கு செல்லாமல், கூட்டத்தில் நின்று மனுவை கொடுத்து online pharmacy no prescription வந்தேன். ஆனால், பதிலும் வரவில்லை. தண்ணீரும் வரவில்லை. வேலைக்கு செல்லாமல், மனுவை கொடுத்து என்ன பலன்”. என்று ஒரு இளைஞரின் ஆவேசம். இதுபோன்று நிறைய மக்கள், “கலெக்டரிடம் மனு கொடுத்தோம், பதிலும் இல்லை, நடவடிக்கையும் இல்லை” என்று சொல்லி வரும் மக்களுக்கு, ஒரு சந்தோஷமான செய்தி.
எதற்காக மனு கொடுக்க கலெக்டர் அலுவலகத்திற்குச் செல்ல வேண்டும். (ஆன்ட்ராய்ட்) ஸ்மார்ட் மொபைலை பயன்படுத்தாதவர்களே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். தமிழகத்தில் மட்டும் 75 சதவிதம் பேர் ஸ்மார்ட் மொபைலை பயன்படுத்துகிறார்களாம். அதில், வாட்ஸ்அப் மற்றும் ஃபேஸ்புக் அப்ளிகேஷன் இருக்கும். அதன்மூலம், கலெக்டருக்கு ஒரு எஸ்.எம்.எஸ் செய்தால் போதும். 24 மணி நேரத்திற்குள் பதில் வந்துவிடுகிறது. பதில் மட்டும் இல்லைங்க?. அதற்கான நடவடிக்கைகளையும், உடனே அப்டேட் செய்கிறார். (ஸ்மார்ட் மொபைல் இல்லாதவர்கள், கணினியை பயன்படுத்தியும் ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் மூலம் எஸ்.எம்.எஸ் அனுப்பலாம்).
எந்த ஊர் கலெக்டர்?.
தற்போது, ஈரோடு கலெக்டர். டாக்டர். எஸ்.பிரபாகரன் மட்டுமே இந்த சேவையை செய்து வருகிறார். இவரைப் பார்த்து, மற்ற கலெக்டர்களும் இந்த சேவையை பின்பற்றுவார்கள் என்று நம்புகிறோம்.
என்ன செய்ய வேண்டும்?.
வாட்ஸ்அப் பயன்படுத்துபவர்கள் +917806917007 என்கிற மொபைல் நெம்பருக்கு எஸ்.எம்.எஸ் செய்யலாம்.
ஃபேஸ்புக் பயன்படுத்துபவர்கள் “District Collector Erode” என்கிற பெயரில் இருக்கும் பக்கத்தில் பிரச்சனைகளை பதிவு செய்யலாம்.
குறிப்பு: சிறிய பிரச்சனைகளுக்கு 24 மணி நேரத்திற்குள் பதில் வந்துவிடும். பெரிய பிரச்சனைகளாக இருந்தால் பதிலுக்கு தாமதம் ஏற்படலாம்…
-மாலை முரசு

Add Comment