மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை துணைவேந்தரின் துபாய் நிகழ்ச்சிகள்

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் கல்வியாளர் பேரா. டாக்டர் சபாபதி மோகன் அவர்களும், இப்பல்கலைக் கழகத்தின் தொலைதூர கல்வித் திட்டத்தின் இயக்குனர் பேரா.டாக்டர் மணிகுமார் அவர்களும் 3 நாட்கள் சுற்றுப்பயணமாக ஜூன் 04ம் தேதி, வெள்ளிக்கிழமை அன்று துபாய் வருகை புரிந்தார்கள். அமீரகங்களில் அபுதாபி, துபாய், ஷார்ஜா ஆகிய இடங்களைத் தொடர்ந்து ராசல்கைமா-வில் புதிதாக தொடங்கப்படவுள்ள பயிற்சி மையத்தை பார்வையிட்டார்கள்.

தங்களுடைய சுற்றுப்பயணத்தின் போது பல்வேறு தமிழக அமைப்புகளையும், தமிழ் ஆர்வலர்களையும் சந்தித்து உரையாடினார்கள். ஜூன் 05ம் தேதி தமுமுக மற்றும் அமீரக வாழ் மதுக்கூர் நண்பர்களை சந்தித்த துணைவேந்தர் அவர்கள் தமிழகத்தில் நிலவும் கல்வி மற்றும் அரசியல் சூழ்நிலைகள் குறித்து கலந்துரையாடினார். இதில் தமுமுக நிர்வாகிகள் அப்துல் ஹாதி, ஹுசைன் பாஷா, அப்துல் காதர், உமர் பாருக் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

மக்கள் உரிமை மற்றும் தமிழ் சாரல் மீடியா-விற்காக துணைவேந்தர் மற்றும் இயக்குனர் அவர்கள் அளித்த சிறப்பு நேர்காணலை www.tamilsaral.com என்ற இணையதளத்தில் கேட்டு no prescription online pharmacy பயன்பெறலாம்.

Add Comment