ஆட்சி மாற்றம் வேண்டும் ஆனால் யார் தமிழகத்தை ஆளவேண்டும் இதோ இந்த பதிவு…

70 களை கடந்து கொண்டிருக்கும் ஜெயலலிதாவும் 90 களை கடந்து கொண்டிருக்கும் கருணாநிதியும் 60 களை கடந்து கொண்டிருக்கும் ஸ்டாலினும் அரசியல் பணிக்கு தயவு செய்து ஓய்வு கொடுத்து நல்ல துடிப்பும் அறிவாற்றலும் செயலாற்றலும் கொண்ட இளையோருக்கு முதல்வர் பதவியை வழங்குவோம் தமிழக மக்களே

செய்த தவறையே திரும்ப திரும்ப செய்ய வேண்டாம்

40 ஆண்டுகள் தமிழகத்தை ஆண்டவர்கள் நமக்கு செய்தது பச்சை துரோகம்

பஞ்சம்

வெள்ளம்

வறட்சி

வறுமை

விவசாயத்தை நசுக்கினார்கள்

ஏரி குளங்கள் நம் கண் முன்னே சூரையாடப்பட்டு கல்வி வல்லல்களின் கைகளில் அகப்பட்டது

ஆறுகள் மலடாக மண்ணை வாரி பொன்னை Cialis online சேர்த்தனர்

இலவசங்களையும் சாராயத்தையும் கொடுத்து சமூக சீர்கேட்டுக்கு வழி செய்தனர்

அரசின் அதிகாரிகள் ஆண்ட கட்சிகளின் ஏஜன்டுகளாகி மக்கள் வயிற்றில் அடித்து பெரும் பொருள் ஈட்டுகின்றனர்

லஞ்சமும் ஊழலும் கோலோச்சுகிறது எல்லா துறைகளிலும்

காவல் துறை ஆட்சியாளர்களின் ஏவல் துறை ஆனது

குற்றம் செய்தவனை தப்பு விக்க அரசு ஊழியனுக்கு சங்கம்

பட்டா சிட்டா ஆவணப்பதிவு ரேஷன் கார்டு எல்லாவற்றுக்கும் நீங்கள் தான் அரசு அலுவலங்களுக்கு தேடி சென்று பெற வேண்டும்
அதுவும் அவ்வளவு எளிதாக அல்ல

விவசாயம் செய்து வாழுதல் கேவலமாக்கப்பட்டது

கல்வி நிலையங்கள் யாவும் ஆண்ட கட்சிகளின் குண்டர்களின் சொத்தனது

சரியான திட்டமிடுதல் இன்றி தமிழகத்தில் மின் வெட்டு அமலுக்கு வந்து நம்மை கற்காலத்துக்கு அழைத்துச்சென்று விட்டனர்

திட்டமிட்டு
சென்னையை சுற்றியே குவியும் வேலை வாயய்ப்புகள் இதனால் மக்களுக்கு ஏற்படும் நேரடி மற்றும் மறை முகமான இழப்புகள்

லஞ்சம் ஊழலில் சாலைகள் அதனால் உருவாகும் தரமற்ற
சாலைகள்

பள்ளி செல்லும் மாணவ மணிகள் குடியின் பிடியில்

தரமற்ற அரசு பள்ளிகள் அதனால் பெருகும் தனியார் பள்ளிகள் கல்விக் கொள்ளையில்

தொழில்கள் நசிந்தது பணப்புழக்கம் குறைந்தது

கேள்வி கேட்கும் சாமானியன் தாக்கப்படுகிறான்

பஞ்சாயத்தின் பிரதிநிதிகள் பணத்தில் புரளுகிறார்கள்
மக்கள் சேவை பின்னுக்கு தள்ளப்படுகிறது

நெல் கரும்பு தானியம் தோட்டப்பயிர் வாழை மரவள்ளி என எந்த பயிருக்கும் பாதுகாப்பில்லை

விலைவாசி விண்ணை முட்டுகிறது சாமானியனுக்கு மூச்சு முட்டுகிறது

தண்ணீருக்ககாக பிற மாநிலங்களின் கடைக்கண் பார்வைக்கு ஏங்குகிறோம்
ஒரே ஒரு மழை நீர் சேமிப்புத்திட்டம் அதுவும் பல ஆண்டுகளுக்கு முன்னால் அதையும் சரியாக செயல்படுத்த வில்லை

விவசாயிகளின் உற்பத்தி பொருட்களுக்கான சேமிப்பு கட்டமைப்புகள் எங்கே?

நெல் 1000 ரூபாய் அரிசி 2500 ரூபாயா?

ஆலயங்கள் அனைத்தும் கொள்ளை கூட்டத்தின் பிடியில் பழனி போன்ற ஆலயங்களில் மொட்டை அடித்தவனுக்க குளிக்க தண்ணீர் இல்லை

கூட்டத்தில் அடித்து பிடித்து பயணிக்க கட்டை வண்டிகளை விட கேவமான பேருந்துகள் ஆன.னால் கட்டணமோ பச்சை போர்டு சிவப்பு போர்டு வெள்ளை போர்டுனு கொள்ளையோ கொள்ளை

மீனவர் நெசவாளர் இன்னும் பிற தொழில் செய்வோரின் நிலையோ படு மோசமாக யார் காரணம்

தனியே பெண்கள் வயதானோர் வசிக்க முடியாதபடி தாலி பறிப்பு செயின் பறிப்பு எங்கும் கொலை கொல்லை என்ன செய்கிறது காவல் துறை

எத்தனை சட்டமன்ற பாராள மன்ற அமைச்சர்களின் வீடுகளில் மின்வெட்டு இருக்கிறது?

தமிழகத்தில் தொழில் தொடங்க வந்தவர்கள் எல்லாம் வேறு மாநிலங்களுக்கு செல்கின்றனர்

ஓட்டலில் டீ காபி கூட பார்த்து பார்த்து குடிக்கும் அளவுக்கு விலை வாசி உச்சம்

இளைஞர்கள் வளம்பெற என்ன திட்டம் தந்தீர்கள்?

ஆடும் மாடும் டிவியும் வாழ்க்கைக்கு போதுமா?

தமிழக வாக்காளர்களே சிந்திப்போம் அதிமுக திமுக வினரை விரட்டி அடிப்போம் அரசியலில் கட்டாய ஓய்வளிப்போம்

மீண்டும் இலவசங்களுக்கு மயங்கி வாக்களித்தால் தயவு செய்து நல்வாழ்வை மறந்து விடுங்கள்

-Vimalathithan Subramanian by Fb

Add Comment