கடையநல்லூர் நகராட்சியில் ஊழல்?

தகவல் அறியும் உரிமை சட்டம் (R.T.I,) நமது நாட்டில்அமுல் படுத்தப்பட்டு பத்து ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் இருந்து வருகிறது. சாமானிய மக்களின் ஆயுதமாக கருதப்படும் இச்சட்டத்தின் மூலம் அரசுத் துறைகளில் நடக்கும் பல்வேறு ஊழல்களும், முறைகேடுகளும் வெளிச்சத்திற்கு வந்த வண்ணம் உள்ளது.

இந்த சட்டத்தை முடக்கவும், நீர்த்துப் போக செய்யவும்   சில அதிகாரிகள் மட்டத்தில் கடும் முயற்சிகள் நடந்து வருகிறது. சரியான தகவல்களை உரிய காலத்திற்குள் தராமல் இழுத்தடிப்பது, முன்னுக்கு பின் முரணான தகவல்களை தருவது, பொருத்தமற்ற தகவல்களை தருவது என்பது போன்ற செயல்களில் பல்வேறு அரசு அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பல்வேறு முறைகேடுகள் வெளிச்சத்திற்கு வராமல் போய்விடுகிறது. இருப்பினும் பல்வேறு NGO க்களின் முயற்சியால் இச்சட்டம் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இச் சட்டத்தை கிள்ளு கீரையாக மதிக்கும் கடையநல்லூர் நகராட்சி நிர்வாகம் குறித்து கீழ் Buy cheap Levitra கண்ட தகவல்களை பதிவு செய்ய விரும்புகிறேன் .

கடையநல்லூர் நகராட்சியில் கடந்த 31.07.2015 அன்று சுமார் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 50க்கும் அதிகமான வளர்ச்சி பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டது. இதில் 20 சதவீதம் கமிஷன் குடுப்பவர்களுக்கு மட்டும் தான் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக புகார் எழுந்ததால் இந்த டெண்டர் குறித்து நான்  கடையநல்லூர் நகராட்சி பொது தகவல் அலுவலரிடம் , அந்த பணிகளுக்கான டெண்டர்  அறிவிப்பு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மூலம் வெளியாகும் ஒப்பந்த புள்ளி மலரிலோ, தினசரி நாளிதழ்களிலோ வெளியானதா? பதிவு செய்த அனைத்து ஒப்பந்த காரர்களுக்கும் அனுப்பப்பட்டதா என்பது உட்பட சில தகவல்களை கேட்டிருந்தேன்.

அதற்கு, பொதும் தகவல் அலுவலர் தகவல்கள் வினாக்கள் அடிப்படையில்கோரப்பட்டுள்ளதால் பதில் வழங்க வழிவகை இல்லை என பதில் அனுப்பியிருக்கிறார். இதனை தொடர்ந்து நகராட்சி மேல் முறையீட்டு அலுவலருக்கு மனுச்செய்தேன். அவரும்  பொது தகவல் அலுவலர் தெரிவித்தது போல தகவல்கள் வினாக்கள் அடிப்படையில் உள்ளதால் தகவல்கள் வழங்க வழிவகை இல்லை என பதில் அளித்துள்ளார்.

வினாக்கள் அடிப்படையில் கோராமல் எப்படி கேள்வி கேட்பது என்பது எனக்குப் புரியவில்லை. எப்படிப்பட்ட வார்த்தைகளை பயன்படுத்தினாலும் அது வினாவாகத்தானே இருக்கும்?  ஒரு வேளை அன்புள்ள அதிகாரி அவர்களுக்கு, நலம் நலமறிய ஆவல் என்று சொந்த பந்தக்களுக்கு கடிதம் எழுதுவது போல எழுத வேண்டுமா?என்று தெரியவில்லை.

இப்படி பச்சையாய் பதில் சொல்வதை தவிர்ப்பது என்பது முறைகேடுகள் நடந்திருப்பதை ஊர்ஜிதப்படுத்துகிறது. மேலும் தகவல்களை மறைக்க திட்டமிட்டு கால தாமதப்படுத்தவே நகராட்சி நிர்வாகம் தகவல் தர மறுப்பது பட்டவர்த்தனமாகத் தெரிகிறது.

இது குறித்து மாநில தகவல் ஆணையத்திலும் முறையிட்டுள்ளேன்.

மாநில தகவல் ஆணையம் நான் கேட்ட தகவலை 29. 12. 15க்குள் வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. ஆனால் திட்டமிட்டு காலதாமதம் பண்ணிய கடையநல்லூர் நகராட்சியின் எண்ணம் நிறைவேறியிருக்கும். ஆமாம். முறைகேடாக டெண்டர் நடந்த பணிகளுக்கு இதற்குள் பில் எழுதி பங்கு போட்டிருக்க மாட்டார்களா? இருப்பினும் தகவல் ஆணையம் உத்தரவு மூலம் வழங்கப்படும் தகவல் நான் ஏற்கனவே மதுரை உயர் நீதி மன்றத்தில் இது குறித்து தொடுத்துள்ள வழக்கிக்கிற்கு உறுதுணையாக இருக்கும் என கருதுகிறேன்.
அத்துடன் தமிழக அரசு உள்ளாட்சி அமைப்புகளில் நடைபெரும் ஊழல்களை விசாரிக்க அமைக்கப்பட்ட local bodies ombudsman கும் புகார் தெரிவித்தேன். அவர்களும் எனது புகாரைப் விசாரணைக்கு ஏற்றுக்கொணப்வ்்டுள்ளதாக தெரிவித்திருப்பது நீதி கிடைக்கும் எனது நம்பிக்கையை அதிகரித்துள்ளது.
வே.கணபதி பாலசுப்பிரமணியன், கடையநல்லூர்.

Add Comment