கடையநல்லூர் அருகே காட்டு யானைகள் அட்டகாசம் : தென்னை, வாழை சேதம்

கடையநல்லூர் அருகே காட்டு யானைகள் தென்னை, வாழை, பலா மரங்களை சேதப்படுத்தியதால் விவசாயிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகினர். மலை பகுதியில் இருந்து வடகரை பகுதியினை ஒட்டி யானைகள் நடமாட்டம் காணப்படுவதால் பொதுமக்கள் பெரிதும் அச்சமடைந்துள்ளனர்.
கடையநல்லூர் அருகேயுள்ள வடகரை, மேக்கரை, பண்பொழி பகுதியினை ஒட்டி அமைந்துள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் யானை, மிளா, காட்டு மாடுகள் உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் வசித்து வருகின்றன. கோடை காலத்தில் காட்டு பகுதிகளில் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக வன விலங்குகள் மலைப்பகுதிகளை ஒட்டி அமைந்துள்ள தோப்பு மற்றும் விவசாய நிலங்களிலும் வந்து செல்வதுண்டு. இருந்தபோதிலும் கடந்த சில ஆண்டுகளாக கோடைகாலம் மட்டுமின்றி இடைப்பட்ட காலங்களிலும் வனவிலங்குகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருவதாக புகார் கூறப்பட்டு வருகிறது. இத்தகைய நிலையில் வன விலங்குகளிடமிருந்து பயிர்களை பாதுகாக்க அமைத்திட்ட மின்வேலிகள் பழுதடைந்துவிட்டதாக கூறப்பட்டு வரும் நிலையில் விவசாய நிலங்களை வனவிலங்குகள் கடந்த சில மாதங்களாக சேதப்படுத்தி வருவது அதிகரிக்கிறது. இந்நிலையில் வடகரை பகுதியில் அமைந்துள்ள வடகாடு, சீவலங்காடு, அணைக்கட்டு பகுதிகளை ஒட்டி பயிரிடப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான தென்னை, வாழை, பலா மரங்களை நான்கு யானைகள் கொண்ட கும்பல் வேரோடு சாய்த்தும், மரங்களை சேதப்படுத்தியும், விவசாயிகளுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன. இப்பகுதியை சேர்ந்த வாவாமைதீன், சாகுல்ஹமீது, ஜாகீர்உசேன், காதர்முகைதீன், அப்துல்காதர் உள்ளிட்ட விவசாயிகள் சிலரது தோப்புகளுக்குள் யானை கூட்டங்கள் புகுந்ததோடு மட்டுமின்றி பல ஆயிரக்கணக்கான மதிப்புள்ள பயிர்களை சேதப்படுத்தியிருப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர். வனவிலங்குகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்திட வைக்கப்பட்ட மின்வேலி சீராக இயங்காமல் இருந்து வரும் நிலையில் வன விலங்குகளின் நடமாட்டம் கோடை காலம் நடப்பதால் மீண்டும் அதிகரிக்க கூடும்மென விவசாயிகள் தரப்பில் கூறப்படுகிறது. இதனை கட்டுப்படுத்திட மாவட்ட வனத்துறை போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண நிதி வழங்கிட வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Buy cheap Cialis

Add Comment