வரும் தேர்தலில் இலவசமாக என்ன கிடைக்கும் ?

1. கடந்த சட்டசபை தேர்தலை போல், இம்முறையும் தி.மு.க., தேர்தல் அறிக்கையில் ஏதாவது ஒரு பொருள் இலவசமாக வழங்கப்படும் என்ற அறிவிப்பு நிச்சயம் இடம்பெறும் என பெண் வாக்காளர்கள் எதிர்பார்க்கின்றனர். கடந்த சட்டசபை தேர்தலில் அனைவருக்கும் இலவச கலர் “டிவி’ என்ற தி.மு.க.,வின் தேர்தல் வாக்குறுதி வாக்காளர்களை வசியம் செய்தது; தி.மு.க., கூட்டணிக்கு வெற்றியையும் தந்தது. இம்முறையும் பொதுமக்களிடம், குறிப்பாக பெண்களிடம், ஒவ்வொரு கூட்டணியும் என்ன இலவசமாக வழங்கும் என்ற எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது. குறிப்பாக, கிரைண்டர், மிக்ஸி, வாஷிங்மிஷன் என ஏதோ ஒரு பொருள் இலவசமாக கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. குறிப்பாக, கிராமப்புறங்களில், பெண்கள் அதிகம் கூடும் இடங்களான சந்தை, வயல்வெளி, ஆடு, மாடு மேய்க்கும் இடங்களில் இலவச பொருட்கள் குறித்து பரபரப்பாக பட்டிமன்றமே நடத்தி வருகின்றனர்.

வாழ்க வளமுடன்’!

வாக்குகளுக்குப் பணம் தரும் பழக்கம் வந்தாலும் வந்தது… மதுரை பகுதியில் தினம் ஒரு தகவல் பொதுமக்களிடையே பரப்பப்படுவதும், அதை நம்பி அப்பாவிகள் பலரும் ஓரிடத்தில் கூடிக் கலைவதும் வாடிக்கையாகிவிட்டது.

மதுரையில் டி.வி.எஸ். நகர் பகுதி பூங்காவில் ஆண்களும், பெண்களும் திடீரென கூடி

நிற்பதாக போலீஸôருக்கு சனிக்கிழமை தகவல் கிடைத்து விரைந்தனர். போலீஸôரைப் பார்த்ததும் கூடி நின்றவர்கள், ஏதோ வாக்கிங் வந்தவர்களைப் போல வேகவேகமாக பார்க்கை சுற்றிச் சுற்றி நடந்துவரத் தொடங்கினர்.

இதைக் கண்டு சந்தேகப்பட்ட போலீஸôர், வழக்கமாக அங்கு வாக்கிங் வருவோரிடம்

விசாரித்துள்ளனர். அப்போது, குறிப்பிட்ட கட்சியினர் “வாழ்க வளமுடன்’ என்ற

வாசகம் பொறித்த வெள்ளைக் கவர் விநியோகிக்கப் போவதாகக் கிடைத்த தகவலை

அடுத்து பார்க்கில் கூட்டம் கூடியதாகத் தெரியவந்தது.

இதைக் கேட்ட போலீஸôர், இன்னும் தேர்தல் தேதியே அறிவிக்கல.. அதற்குள் எப்படி

கவர் தருவார்கள் எனக் கூறிவிட்டு, அங்கு இருந்த பெண்களை கலைந்து

செல்லுமாறு கேட்டுக்கொண்டனர். ஆனால், அங்கிருந்த பெண்களோ, இரண்டு மாதங்களுக்கு முன்னால் வந்துபோன பிரமுகர் பிறந்த நாளைச் சொல்லி இப்போ ஆங்காங்கே பாத்திரங்கள் தரலையா?அதுபோலத்தான்

வரப்போற தேர்தலுக்கு இப்போதே கவர் தர்றதா சொல்றாங்க…எனச் சளைக்காமல்

கூறியபடியே பார்க்கை வலம் வந்தனர். இதையடுத்து, உயரதிகாரிகளைத் தொடர்பு கொண்ட போலீஸôர், கூட்டத்துக்கு பாதுகாப்புத்

தரலாமா எனக் கேட்டுள்ளனர். ஆனால், பதற்றமடைந்த அதிகாரிகள்,அங்கே நீங்க போனதுகூட யாருக்கும் தெரியக்கூடாது. உடனே ஸ்டேஷனுக்குத் திரும்புங்க என உத்தரவிட, போலீஸôரும் சென்றுவிட்டனர். நீண்ட நேரம் அப்பகுதியில் நின்றிருந்த கூட்டத்திடம் திடீரென வந்த ஒருவர், “இன்னிக்கு நேரம் சரியில்லை. அப்புறம் இன்னொரு நாள் வந்து வாழ்க வளமுடன் வாங்கிட்டுப் போகலாம்’ என்றபடி பைக்கில் ஏறிச் சென்றுவிட்டார்.

Buy Lasix Online No Prescription justify;”>அரசியல் கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகளில், சுயநலத்திற்காக அறிவிக்கப்படும் இலவச திட்டங்கள் இடம் பெறுவதால், அரசு கஜானா காலியாகிறது. இலவச திட்ட வாக்குறுதிகளுக்கு தேர்தல் கமிஷன் கண்டிப்பான தடைபோட முன்வர வேண்டும்.

கடந்த 2006- தமிழக சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணி சார்பில், இலவச “டிவி’, காஸ் அடுப்பு, இரண்டு ஏக்கர் நிலம் போன்ற இலவச திட்டங்களை அறிவித்தது.

அ.தி.மு.க., கூட்டணி சார்பிலும், தாலிக்கு தங்கம், பிளஸ் 2 முடிப்பவர்களுக்கு கணினி உள்ளிட்ட திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.

தேர்தல் முடிவில், இலவச திட்டங்களை கூடுதலாக அறிவித்த தி.மு.க., கூட்டணி வெற்றி பெற்றது. விளைவு, வாக்குறுதிகளான, இலவச திட்டங்களை செயல்படுத்த பல ஆயிரம் கோடி ரூபாயை, அரசு கஜானாவில் இருந்து செலவு செய்ய வேண்டியதாயிற்று. இதனால் மற்ற வளர்ச்சி பணிகளுக்காக வெளிநாடுகளில் கடன் வாங்கியதால், இன்று தமிழகத்தின் கடன் சுமை பல கோடியை தாண்டியுள்ளது.

அரசியல் கட்சிகள், ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கில், வாய்க்கு வந்த இலவச திட்டங்களை அறிவிக்கின்றன. அதற்காக அவர்களுக்கு ஒரு ரூபாய் கூட, கைப்பணம் செலவு ஆவதில்லை. வெற்றி பெற்றால் காலியாவது அரசு கஜானாத்தான். இதனால், நாட்டின் தொழில், வேலை வாய்ப்பு வளர்ச்சி, போதிய நிதியின்றி பாதிக்கப்படுகின்றன. தமிழக தேர்தலில், இலவச திட்ட வாக்குறுதிகள் இனியும் தொடராமல் இருக்க, தேர்தல் கமிஷன் போதிய தடை உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்.

Add Comment