தபால் நிலையங்களில் பாஸ்போர்ட் சேவை மையம்

தபால் நிலையங்களில் பாஸ்போர்ட் சேவை மையம்: மத்திய அரசு புதிய திட்டம்—————-
பரிசோதனை பணிக்கு போலீசாருக்கு பதில் போஸ்ட்மாஸ்டர்…

பால் நிலையங்களில் பாஸ்போர்ட் சேவை மையங்கள் ஏற்படுத்தவும், பரிசோதனை பணி போலீசாருக்கு பதில் போஸ்ட்மாஸ்டருக்கு வழங்கவும் மத்திய அரசு புதிய திட்டம் தீட்டி வருகிறது. நாடு முழுவதும் உள்ள தபால்நிலையங்களை பாஸ்போர்ட் சேவை மையங்களாக மாற்ற மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. பாஸ்போர்ட் விண்ணப்பங்களை நிரப்புவுதற்கு சிரமப்படுகின்றவர்கள் தபால் நிலையங்களுக்கு சென்றால் அவர்களுக்கு அதற்கான வசதியை ஏற்படுத்திக்கொடுக்கும் வகையில் தபால் நிலையங்களை மாற்ற ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக தபால் துறையுடன் வெளியுறவுத்துறை அமைச்சகம் பேச்சு நடத்தி வருகிறது. போஸ்ட்மாஸ்டர்களை ‘பாஸ்போர்ட் வெரிபிகேஷன் ஆபீசர்’ ஆகவும் நியமிக்க ஆலோசிக்கப்படுகிறது.பாஸ்போர்ட் பெறுவதற்காக விண்ணப்பித்தல் முழுவதும் ஆன்லைன் மயமாக்கப்பட்டுள்ளது. இதற்காக விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் பலரும் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். பாஸ்போர்ட் விண்ணப்பம் பூர்த்தி செய்து வழங்குகின்ற மையங்கள் இதற்காக பொதுமக்களிடம் இருந்து அதிக கட்டணம் வசூலிக்கவும் செய்கின்றன என்ற புகார்கள் எழுந்துள்ள நிலையில் இதுபோன்ற ஒரு முடிவு மத்திய அரசால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. buy Lasix online பாஸ்போர்ட் பெறுவதில் இடைத்தரகர்களை ஒழிக்க ஆன்லைன் முறை கொண்டுவரப்பட்ட போதிலும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வழங்குகின்ற பெயரில் ஏஜென்டுகளும், பாஸ்போர்ட் சேவா கேந்திராவை மையப்படுத்தி இடைத்தரகர்களாக செயல்படுகின்றனர் என்பது போன்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில் மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.தற்போது பாஸ்போர்ட்களை விநியோகம் செய்ய மட்டுமே தபால்துறையின் உதவி நாடப்படுகிறது. இந்தநிலையில்தான் சேவை மையமாக செயல்பட செய்ய இயலுமா என்ற கோணத்தில் தற்போது ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் தட்கல் முறையில் விரைவாக பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிக்கின்றவர்களிடம் போலீசாருக்கு பதிலாக போஸ்ட்மாஸ்டரை கொண்டு விசாரணை நடத்திடவும், திட்டமிடப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் வசிக்கின்ற மக்களை போஸ்ட்மாஸ்டர்களுக்கு நன்கு தெரியும் என்பதால் அவர்களை விசாரணை அதிகாரியாக கொண்டு திட்டத்தை செயல்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக விரைவில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

‪#‎கூட்டுக்கொள்ளை‬ அடிக்கும் காவல்துறையிடமிருந்து விடுபட்டால் போதும்,, பாவிகள் இறக்கமின்றி ஈனத்தனமான வழிப்பறி செய்ராங்க , Passport Enquiry னு சொல்லிக்கொண்டு ….

தினகரன்

Add Comment