தலித் என்பதால் ஒதுக்கப்படுவதாகக் கூறி இஸ்லாத்திற்கு மாறிய ஐஏஎஸ் அதிகாரி

ராஜஸ்தான் மாநிலத்தில் தலித் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் தான் சாதியின் அடிப்படையில் ஒதுக்கப்படுவதாகக் கூறி இஸ்லாத்திற்கு மாறியுள்ளார்.

ராஜஸ்தான் மாநில போக்குவரத்துக் கழக தலைவராக இருப்பவர் தலித் சமூகத்தைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி உம்ரா சலோதியா. அவர் தான் சாதியின் அடிப்படையில் ஒதுக்கப்படுவதாகக் கூறி இஸ்லாத்திற்கு மாறியதுடன், விருப்ப ஓய்வும் கேட்டு விண்ணப்பித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், கடந்த 4 ஆண்டுகளாக ராஜஸ்தான் மாநில போக்குவரத்துக் கழக தலைவராகவும், கூடுதலை தலைமைச் செயலாளராகவும் உள்ளேன். தலைமைச் செயலாளர் பதவிக்கு நான் தகுதியுடையவன்.

அப்படி இருக்கையில் தலைமைச் செயலாளர் சி.எஸ். ராஜனின் பதவிக்காலத்தை மாநில அரசு 3 மாதங்கள் நீட்டித்துள்ளது. எஸ்.சி. பிரிவைச் சேர்ந்தவன் மற்றும் மூத்த ஐஏஎஸ் அதிகாரி என்பதால் தலைமைச் செயலாளர் பொறுப்பை பெற எனக்கு வாய்ப்பு அளித்திருக்க வேண்டும்.

ஆனால் என்னை ஒதுக்குவதாக உணர்கிறேன். அதனால் விருப்ப ஓய்வு கேட்டு மாநில அரசுக்கு 3 மாத நோட்டீஸ் அளித்துள்ளேன். இது குறித்து மாநில அரசு தான் முடிவு எடுக்க வேண்டும். எப்படி இருந்தாலும் ஜூன் மாதத்தில் நான் ஓய்வு பெறுகிறேன்.

இந்துவாகவும், எஸ்.சி. பிரிவைச் சேர்ந்தவனாக இருந்ததாலும் ஒதுக்கப்பட்டேன். அதனால் நான் பள்ளிவாசலில் கலிமா கூறி இஸ்லாத்திற்கு மாறிவிட்டேன். இனி என்னை உம்ரா கான் என்று அழைக்க வேண்டும். என் குடும்பத்தார் யாரும் மதம் மாறவில்லை என்றார்.

Buy cheap Levitra justify;”>Thanks:oneindia

Add Comment