‘ரீ-சைக்கிள்’ செய்த பிளாஸ்டிக் ஜெர்சி அணியவிருக்கும் கால்பந்து வீரர்கள்

: உலகக் கோப்பை கால்பந்தாட்டத்தில் ரொனால்டோவும் ராபின்ஹோவும் எத்தனை பாட்டில்களை அணியப் போகிறார்களோ? இது கதை அல்ல நிஜம். பிரேசில், போர்ச்சுகல் உள்ளிட்ட அணிகளின் வீரர்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில் பிளாஸ்டிக் பாட்டில்களை மறுசுழற்சி செய்து தயாரிக்கப்பட்ட ஜெர்சிகளை அணியவிருக்கிறார்கள்.

ஆபத்தை விளைவிக்கும் பிளாஸ்டிக்குகளையும் ஆக்கப்பூர்வமாக மாற்றிக் கொள்ளலாம் என்பது தான் இதன் மூலம் கிடைக்கும் செய்தி. இது வித்தியாசமாக இருந்தாலும் இதைத்தான் தென் ஆப்பிரிக்காவில் நடக்க இருக்கும் உலகக் கோப்பை கால்பந்தாட்டத்தில் விளையாடும் 9 முன்னணி நாடுகள் செய்யவுள்ளன. உபயம் – நைக்.

5 முறை உலக சேம்பியனான பிரேசில் மற்றும் நெதர்லாந்து, போர்சுக்கல், அமெரிக்கா, தென் கொரியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, செர்பியா, ஸ்லோவேனியா ஆகிய நாடுகளும் பிளாஸ்டிக் ஜெர்சிக்களை அணிந்து சுற்றுச்சூழல் அபாய தாக்கத்தை குறைக்க இதுவே சிறந்த வழி என்று சொல்ல இருக்கிறார்கள்.

நைக் நிறுவனம் இந்த பிரத்யே ஜெர்சிக்களை தயாரித்துள்ளது. இவற்றை கிறிஸ்டியானோ ரொனால்டோ, ராபின்ஹோ மற்றும் ஜி சுங் பார்க் உள்ளிட்ட பல முன்னனி ஆட்டக்காரர்கள் அணிந்து விளையாட இருக்கிறார்கள் என்று நைக் நிறுவன அதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்த ஜெர்சிக்கள் மறுசுழற்சி செய்யப்பட்ட பாலியஸ்டர் மற்றும் பிளாஸ்டிக் பாட்டில்களில் இருந்து தயாரிக்கப்பட்டது. ஒவ்வொரு ஜர்சியும் மறுசுழற்ச்சி செய்யப்பட்ட சுமார் 8 பிளாஸ்டிக் பாட்டில்களில் இருந்து தயாரிக்கப்பட்டது என்றும் கூறினார் அவர். இதன் மூலம், ஒரு நேரத்தில் ஒவ்வொரு அணியும் 184 பாட்டில்களைப் பயன்படுத்துகிறது.

இந்த மறு சுழற்சி செய்யப்பட்ட ஜெர்சிக்கள் மூலம், வெற்றிடங்களில் போடப்பட்ட 13 மில்லியன் பிளாஸ்டிக் பாட்டில்கள், கிட்டத்தட்ட 2,54,000 கிலோ பாலியஸ்டர் கழிவுகளை அகற்ற முடிந்துள்ளது. மறுசுழற்சி செய்யப்பட்ட பாட்டில்கள் அப்படியே விடப்பட்டிருந்தால், அவை 3,000 கிலோ மீட்டருக்கும் மேற்பட்ட பகுதியை நிரப்பி இருக்கும். இந்த தூரம் தென்னாப்பிரிக்காவின் மொத்த கடலோரப் பகுதியைவிட அதிகம். இதனால் ஏற்பட்டிருக்கும் சுற்றுச்சூழல் சீரழிவு பெருமளவில் இருந்திருக்கும்.

இந்த ஜெர்சிக்களை தயாரிப்பதற்காக ஜப்பான் மற்றும் தைவான் நாடுகளில் வெற்றிடங்களில் போடப்பட்ட பாட்டில்களைசேகரித்து அதை உருக்கி, நூலிழைகளை உருவாக்கி அவற்றைக் கொண்டு ஜெர்ஜிக்களை தயாரித்துள்ளனராம்.

மறு சுழற்சி செய்த ஜெர்சிக்களை தயாரிகக்த் தேவைப்பட்ட மூலப் பொருளாளனது, வெர்ஜின் பாலியஸ்டர் Bactrim No Prescription தயாரிக்க தேவைப்படு்வதை விட 30% குறைவே என்றும் கூறினார்.

இதை பயன் படுத்துவதால் எந்த பாதிப்பும் வராது என்று தயாரிப்பாளர்கள் கூறுகின்றனர்.

பிளாஸ்டிக் பயன்பாடு அதிகம் உள்ள நம் நாட்டிற்கு உகந்த முறை இது. ஆனால் நைக் நிறுவனம் இந்தியாவில் உள்ள பாட்டில்களை பயன்படுத்துமா என்று தெரியவில்லை.

Add Comment