டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக போராடும் மக்கள் இந்த புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு எதிராக குரல் எழுப்பாதது ஏன்?

டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக போராடும் Buy cheap Bactrim மக்கள் யாரும் இந்த ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு எதிராக குரல் எழுப்பாதது ஏன்? என்ன இருக்கிறது இந்த புத்தாண்டில் நமக்கு? இரவு முழுவதும் குடித்துவிட்டு இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்று விபத்துக்குள்ளாவது தான் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது.

நட்சத்திர விடுதிகளில் ஆபாச இரவு நடனம் ஆண் பெண் இருவரும் போதையில் தன்னிலை மறந்து அரை நிர்வாண ஆட்டம் இதெல்லாம் ஆபாசமாக தெரியவில்லையா இந்த பீப் பாடல் எதிர்ப்பாளர்களுக்கு?

ஆங்கில புத்தாண்டு என்னும் பன்னாட்டு வணிகர்களின் தந்திரத்திற்கு தமிழன் அடிமையாகிவிட்டான் என்பதை என்னும் போது வேதனையாக இருக்கிறது.

தமிழ்

Add Comment