உங்கள் பகுதியில் சாலை வேண்டுமா? முதல்வர் ஜெயாவை உங்கள் பகுதிக்கு வரசொல்லுங்கள்

உங்கள் பகுதியில் சாலை வேண்டுமா? முதல்வர் ஜெயாவை உங்கள் பகுதிக்கு வரசொல்லுங்கள்

தமிழக முதலமைச்சர் தனது இல்லத்திலிருந்து அதிமுக-வின் பொதுக் குழுக் கூட்டத்திற்கு செல்லும் வழியில் புதிய சாலைகள் போடப்பட்டுள்ளன. இதனைத்தொடர்ந்து மக்களிடையே விமர்சனங்கள் எழுந்துள்ளன. இது குறித்த ஒரு பார்வை.

திரையில் தோன்றும் காட்சிகளில் இடது புறம் இருப்பது, ராயபேட்டையிலிருந்து திருவான்மியூருக்கு முதல்வர் பயணித்த வழி. வலது புறம் இருப்பது அதே ராயப்பேட்டையில் இருந்து அதே திருவான்மியூருக்கு Buy cheap Cialis பேருந்து செல்லும் வழி. போயஸ் தோட்டத்திலிருந்து திருவான்மியூருக்கு டி.டி.கே சாலை, அடையார் கேட் பகுதிகளை கடந்து மூப்பனார் பாலத்தின் கீழாக கோட்டூபுரம், அடையாறு வழியாக திருவான்மியூர் சென்றார் முதல்வர்.

இந்த வழிகளில் இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரே நாளில் மூன்று புதிய சாலைகள் போடப்பட்டுள்ளன. சாலையோரங்களில் இருந்த குழிகள் திரையிட்டு மறைக்கப்பட்டன, வேகத் தடைகளே இல்லாத சாலைகளில் குப்பைகள் உடனுக்குடன் அகற்றப்பட்டன. ஆனால் அதே பகுதிக்கு தினசரி மக்கள் பயணிக்கும் சாலைகளில் உள்ள குழிகளுக்கும், திடீர் பள்ளங்களுக்கும் இன்னும் விடிவு பிறக்கவில்லை.

பல சாலைகளில் வெள்ளம் ஏற்படுத்திய தடம் இன்னும் மாறவில்லை. அடித்து செல்லப்பட்ட தரைப்பாலங்களை சீரமைக்க அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது அச்சாலைகளை பயன்படுத்தும் பொது மக்களின் குற்றச்சாட்டு. மக்கள் செல்லும் சாலைகளை சீரமைக்க நடைமுறை சிக்கல்கள் இருப்பதாகக் கூறும் அதிகாரிகளால், முதல்வர் செல்லும் சாலைகளை மட்டும் இரவோடு இரவாக சீரமைக்க முடிவது எப்படி எனக் கேட்கின்றனர் பொது மக்கள்

முதல்வர் செல்லும் பாதை சீரடையும் என்றால், பழுதடைந்த சாலைகள் உள்ள எல்லா பகுதிகளுக்கும் முதல்வர் வந்து செல்ல வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாக உள்ளது

நன்றி: ‪#‎Puthiyathalaimuraitv‬ , Aam Aadmi Party

Add Comment