MTS என்னும் பிரபல மோசடி நிறுவனம்

MTS என்னும் பிரபல மோசடி நிறுவனம்

ரஷ்யாவைச் சேர்ந்த பிரபல டெலிகாம் நிறுவனமான MTS, 2009ம் ஆண்டு முதல் இந்தியாவில் சேவை(!!) ஆற்றி வருகிறது. 2014ம் ஆண்டு 999 ரூபாய்க்கு 40 GB இணைய சேவை வழங்கப்படும் என பெரிய அளவில் விளம்பரம் செய்தார்கள். அதனை நம்பி ஏமாந்தவர்களில் நானும் ஒருவன்.

விளம்பரத்தை பார்த்த உடனே ஷோரூம் நோக்கி சென்றேன். ஏனென்றால் அதுவரை அப்படி ஒரு ஆஃபரை எந்த நிறுவனமும் தந்ததில்லை. Dongle விலை 1999 ரூபாய். கொடுத்து வாங்கியாகி விட்டது. 19.1 mbps ஸ்பீடு உறுதியளிக்கப்பட்டது. ஆனால் நான் வாங்கி வந்த நாள் முதல் 1 mbps-ஐ தாண்டியதில்லை. கேட்கும்போதெல்லாம் ஏதோ ஒரு மொக்கை சாக்கு சொல்வார்கள்.

அந்த ஸ்பீடுக்கு ஒரு விடியோவை கூட buffer செய்ய முடியாது. இதற்கென தனியாக ஏர்டெல் டேட்டா பேக் போட்டு பயன்படுத்திக் கொண்டிருந்தேன். இதனால் எனக்கு 250 ரூபாய் மாதத்தில் நஷ்டம். ஒரு நாள் கடுப்பாகி கஸ்டமர் கேருக்கு ஃபோன் போட்டு ரைடு விட்டேன். “உங்க ஏரியா அப்படி சார். மற்ற ஏரியாவுல சிக்னல் கிடைக்கும்” என்றார்கள். “எந்த ஏரியாவுல 9.1 mbps கிடைக்குதுனு சொல்லுங்க. அந்த ஏரியாவுக்கே நான் என் வீட்டை மாற்றிக் கொள்கிறேன்”னு சொல்லிட்டேன். பதிலில்லை. அப்படியே ஒரு மாதம் கழிந்தது.

ஒரு நாள் பகலில் வழக்கத்தை விட மிக ஸ்லோவாக இருந்தது இண்டர்னெட். அதாவது 5 kbps. மீண்டும் கஸ்டமர் கேர். உங்க லிமிட்டான 20 GB முடிந்துவிட்டது என்றார்கள். என்னோட ப்ளான் 40 GB சார் என்றேன். அது பகலில் 20 GB, இரவில் 20 GB என்றார்கள். இதை ஏன் வாங்கும்போதே சொல்லவில்லை என்றேன். பதிலில்லை. மீண்டும் ஒரு மாதம் கழிந்தது.

ஒரு நாள் torrent-இல் சில படங்களை டவுன்லோடு போட்டிருந்தேன். ஆனால் டவுன்லோடு ஆகவில்லை. ஃபோன் செய்தே ஓய்ந்த நான் மீண்டும் செய்தேன். MTS-இல் torrent டவுன்லோடு செய்ய அனுமதியில்லை என்றார்கள். TRAI-இன் Net neutrality பற்றி நான்கு நிமிடங்கள் பேசினேன். எதிர் முனையில் இருந்தவருக்கு ஒன்றுமே புரியவில்லை. பின்னர் இதை ஏன் வாங்கும்போதே சொல்லவில்லை என்றேன். பதிலில்லை. இப்படியே சகித்துக் கொண்டு சில மாதங்கள் கழிந்தன.

1 mbps-ஐ கூட தாண்டாத ஸ்பீடால் விரக்தியடைந்த நான், ஒரு கட்டத்தில் பில் கட்டுவதை நிறுத்திவிட்டேன். அப்போது பார்க்க வேண்டுமே அவர்களின் சேவையை. ஒரு நாளுக்கு 10 மெஸேஜ், 5 ஃபோன் கால். அத்தனை பேரை பணியமர்த்தியிருக்கிறார்கள் பில் வசூலிக்க சொல்லி. குறைகளை கேட்க ஒருவரும் இல்லை. இரண்டு மாதங்கள் ஆனது. பில் தொகை 2256 ஆனது வரிகளுடன் சேர்த்து.

கஸ்டமர் கேரிலிருந்து பில் கட்ட சொல்லி போன் செய்பவர்களிடம் எல்லாம் மிக பொறுமையாக பதிலளிப்பேன். என் குறையை முதலில் சரி செய்யுங்கள், பின்னர் பில் கட்டுகிறேன் என்பேன். போய் விடுவார். அடுத்த நாள் வேறொருவர் அதே கதையை கேட்பார். அப்படி வந்தவர்தான் ஜார்ஜ். அதே கதை வேண்டா வெறுப்பாக சொன்னேன். எல்லாத்தையும் கேட்டுவிட்டு, நான் உங்கள் நம்பரை prepaid-ஆக மாற்றி தருகிறேன். 2000 ரூபாய் மட்டும் பில் கட்டுங்கள். பின்னர் prepaid conversion charges 199 ரூபாய் கொடுங்கள். எல்லாம் நான் பார்த்துக்கறேன் என்று சொல்லிவிட்டு என் அலுவலகத்துக்கு ஆள் அனுப்பினார்.

வந்தவரிடம் 2199-க்கான cheque கொடுத்துவிட்டேன். அதன் பின் தொல்லை இருக்காது என்று நினைத்தேன். சில நாட்கள் அமைதியாக இருந்தது. அடுத்த பில்லில் 2199 ரூபாய் கழித்தது போக 57 ரூபாயும் அந்த மாதத்திற்கான பில்லும் சேர்ந்து வந்தது. அதிர்ந்து போய் ஜார்ஜுக்கு போன் செய்தேன். ஐந்து முறை. ஃபோனை எடுக்கவே இல்லை. கஸ்டமர் கேருக்கு ஃபோன் செய்தேன். உங்க சைடுல இருந்து prepaid change request எதுவுமே வரலை என்றார்கள். ஜார்ஜ் பற்றி கூறினேன். அவரிடமே பேசிக் கொள்ளுங்கள் என்றார்கள். அவர்தான் ஃபோனை எடுக்கவே இல்லையே.

அன்று முடிவு செய்தேன். பில் கட்டவே கூடாது என்று. மாற்றி மாற்றி ஃபோன் செய்வார்கள். நான் பொறுமையாக கதை சொல்வேன். ஜார்ஜ் பற்றி சொல்வேன். Prepaid change பற்றி சொல்வேன். எல்லாம் கேட்டுவிட்டு எங்களுக்கு எந்த request-உம் வரலை என்பார்கள். சரி நான் மீண்டும் 199 ரூபாய் தரேன். Lasix online மாற்றிவிடுங்கள் என்றேன். இல்லை. பில் தொகை கட்டினால்தான் என்றார்கள். முடியாது என்பேன். அடுத்த மாதத்துக்கான பில்லும் வந்தது. 1879 ரூபாய். மீண்டும் முடியாது என்றேன்.

ஒரு நாள் ஃபோன் செய்த ஒரு பெண், உங்களுக்கு prepaid வேண்டும் என்றால் ஏன் இவ்வளவு நாள் இண்டர்னெட் பயன்படுத்தினீர்கள் என்று பேசினார். கோவத்தில் நானும் 2000 ரூபாய்க்கு dongle வாங்கியிருக்கனே. நீங்கள் 3 மாதங்களாக prepaid மாற்றாமல் வைத்திருக்கிறீர்களே. அதுவரை நான் சும்மா இருக்கனுமா என்றேன். கடைசியாக ஒருவர் பேசினார். நானும் இறங்கி வந்தேன். Prepaid ஆக இருந்தால் நான் 500 ரூபாய்க்கு மேல் பயன்படுத்தியிருக்க மாட்டேன். Prepaid change-க்கு 199 ரூபாய். 699 ரூபாய் கட்டுகிறேன் என்றேன். முடியாது. 1879 ரூபாய் கட்டு என்றார்கள். இல்லை என்றால் வழக்கு போடுவோம் என்றார்கள். பாத்துக்கலாம் சார் என்று சொல்லிவிட்டேன்.

சென்ற வாரம் டெல்லியில் இருந்து ஒரு ஃபோன் வந்தது. Legal team என்றார்கள். உங்கள் மீது வழக்கு வந்திருக்கிறது. டெல்லிக்கு வந்து ஆஜராகுங்கள் என்றார்கள். என்னமோ எங்களுக்கு கோர்ட் என்றால் என்னவென்றே தெரியாத மாதிரி. நாளைக்கே வரேன் மேடம் என்று சொல்லிவிட்டு வைத்துவிட்டேன்.

இன்று மீண்டும் ஒரு ஃபோன் கால். நீங்கள் கோர்ட்டில் ஆஜராக தவறிவிட்டதால் 80,000 ரூபாய் ஃபைன் போட்டு இருக்கிறார்கள். எப்போது கட்டுகிறீர்கள் என்றார்கள். நாளைக்கே கட்டுகிறேன் என்றேன். கடுப்பான அவர், இப்போ கூட ஒன்னுமில்ல. 1879 ரூபாய் கட்டுங்கள். நான் வழக்கை வாபஸ் வாங்குறேன் என்றார். நீங்கள் வாபஸே வாங்க வேண்டாம் மேடம் என்று சொல்லிவிட்டேன். வழக்கறிஞர் நண்பர்கள் இந்த விஷயத்தில் உதவுங்கள்.

இதை எல்லாம் நான் சொல்ல காரணம் மற்றவர் யாரும் வாங்கி ஏமாற வேண்டாம் என்பதற்காகத்தான். இதனை அதிகம் பகிருங்கள். நான் இப்போது BSNL பயன்படுத்துகிறேன். அவ்வப்போது சர்வீஸ் ஸ்தம்பித்தாலும் சில்லரைத் தனமான பிரச்சனைகள் இருக்காது. ஏர்டெல் கூட பயன்படுத்தலாம். காஸ்ட்லியாக இருந்தாலும் சர்வீஸ் பக்காவாக இருக்கும். MTS போன்ற கழிசடைகளை நம்பி ஏமாற வேண்டாம்..

ஆதிரா ஆனந்த் from facebook

Add Comment