‎கடையநல்லூரில் நடைபெற்ற ஷிர்க் ஒழிப்பு மாநாடு விளக்கப் பொதுக்கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஜனவரி 31 திருச்சியில் நடைபெறும் ஷிர்க் ஒழிப்பு மாநாட்டுக்கான விளக்கப் பொதுக் கூட்டம் கடையநல்லூர் காயிதேமில்லத் திடலில் நெல்லை மேற்கு மாவட்டத் தலைவர் முகம்மது பைசல் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இப்பொதுக் கூட்டத்திற்கு டவுண் மற்றும் பஜார் கிளை நிர்வாகிகள் அய்யூப்கான், குறிச்சி சுமைலான், ஹாஜா மைதீன், ஹைதர் அலி, உஸ்மான் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். இப்பொதுக் கூட்டத்தின் துவக்க உரையாக மாநில மேலாண்மைக்குழு உறுப்பினர் அப்துந் நாஸிர் “மடமை பேசும் மார்க்க வியாபாரி’ என்ற தலைப்பிலும், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில தலைவர் பக்கீர் முகம்மது அல்தாஃபி அவர்கள் “புரட்சிக்கான ஷிர்க் ஒழிப்பு மாநாடு’ என்ற தலைப்பிலும் உரையாற்றினர். இதில் கடையநல்லூரைச் சார்ந்த ஏராளமான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை டவுண் மற்றும் பஜார் கிளை நிர்வாகிகள் அப்துல் ஜப்பார், அப்துல் காதிர், ராஷித், ஜலாலுத்தின் மற்றும் செயல்வீரர்கள் சிறப்பாக செய்திருந்தனர். இறுதியில் பஜார் கிளை நிர்வாகி சதாம் ஹ‚சைன் அவர்கள் நன்றி கூறினார்கள்.

இப்பொதுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

1. தர்கா வழிபாடு, தகடு, தாயத்து, பில்லி, சூனியம் போன்ற மூடநம்பிக்கைகள் இஸ்லாத்திற்கு எதிரானவை, இறைவன் மன்னிக்காத பாவமான இணைவைப்பைச் சார்ந்தவை. எனவே, இப்பெரும் பாவத்திலிருந்து அனைத்து மக்களும் மீள வேண்டும் என இப்பொதுக்கூட்டம் வலியுறுத்துகிறது.
2-யோகா குரு பாபா ராம்தேவ் நிறுவனமான Buy cheap Lasix பதஞ்சலி சார்பில் உணவு பொருட்கள். அழகு சாதனங்கள் மற்றும் மருந்துகள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளது இந் நிறுவன தயாரிப்புகளில் மாட்டு மூத்திரத்தையும் ஒரு மூல பொருட்களாக சேர்க்கப்படுவதால் மாட்டு மூத்திரம் இஸ்லாத்தின் மத நம்பிக்கை படி பயன் படுத்தக் கூடாது (ஹராமாகும்) எனவே முஸ்லிம்கள் இந் நிறுவன பொருட்களை வாங்குவதும் பயன்டுத்துவதும் தடை செய்யப்பட்டுள்ளது என இப் பொதுக்கூட்டத்தின் வாயிலாக கேட்டுக்கொள்கிறோம்
3.கடையநல்லூர் தாலுகா அலுவலக நிரந்தர கட்டிடத்தை காட்டுப் பகுதியில் அமைக்கும் திட்டத்தை கைவிட்டுவிட்டு, பொதுமக்களின் வசதிக்காக நகரின் மையப் பகுதியில் அமைத்திட தமிழக அரசை இப்பொதுக் கூட்டம் வலியுறுத்துகிறது.

4.கடையநல்லூல் கிழக்குப் பகுதி 19 வது வார்டு, பாத்திமா நகர் தண்டைக்காரன் ஓடை சரியாக தூர்வாரப்படாத காரணத்தினால், சாக்கடை மழை காலங்களில் மட்டுமல்லாமல் சாதர காலங்களிலும் குடியிருப்பு பகுதியில் செல்வதால், தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதை கடையநல்லூர் நகராட்சி உடனே சரிசெய்ய வேண்டும் என இப்பொதுக் கூட்டம் வலியுறுத்துகிறது.
5.கடையநல்லூர் மதினா நகர் பகுதி மழை வெள்ளத்தால் மூழ்கும் அபாயம் ஏற்படக் காரணமான சீவலன்கால்வாயை தூர் வாருவதாக நகராட்சியும் மாவட்ட நிர்வாகமும் வாக்குறுதி தந்தது. அதற்கான முயற்சிக்களை உடனடியாக செய்ய வேண்டும் என இப்பொதுக் கூட்டம் வலியுறுத்துகிறது.
6.கடையநல்லூர் அனைத்துப் பகுதியிலுமுள்ள கழிவுநீர் வடிகால்கள் சரியாக பராமரிக்கப்படாமல் உள்ளது. பல இடங்களில் குடிநீர் பகிர்மான குழாய்களுக்காக தெருக்களை தோண்டியதால் பாதுகாப்பில்லாமல் குண்டும் குழியுமாக இருக்கிறது. எனவே நகராட்சி நிர்வாகம் அவற்றை உடனே சரிசெய்ய வேண்டுமென இப்பொதுக் கூட்டம் கேட்டுக் கொள்கிறது.
7. கிருஷ்ணாபுரம் மலம்பாட்டை ரோட்டில் உள்ள சுடுகாட்டுப் பகுதியின் சுற்றுவட்டாரப் பகுதி முழுவதும் மக்கள் வசிப்பிடங்களாக மாறியதால், பொது மக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் சுடுகாட்டின் சுற்றுச் சுவரை உயர்த்தித் தரவேண்டுமென நகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்தை இப்பொதுக்கூட்டம் வலியுறுத்துகிறது.

தகவல் :-குறிச்சி சுலைமான்.

12468151_1028441387218421_1979972122_n12463999_1028441253885101_1674407123_n12443232_1028441560551737_22064447_n

Add Comment