கருப்பு துண்டு எப்ப நாஞ்சில் சம்பத் தோளை விட்டு இறங்கியதோ…அப்பவே சுயமரியாதையை இழந்து விட்டார்?

நாஞ்சில் சம்பத் மேடைகளிலும் களத்திலும் ஆக்ரோஷமாக செயல்பட கூடியவர், பேச கூடியவர். திமுக வில் தலைமை பேச்சாளராக இருந்தார் . வைகோ திமுகவில் இருந்து பிரிந்து சென்ற போது வைகோ உடன் மதிமுகவில் இணைந்தவர் .மதிமுக ஆரம்பித்த காலத்தில் இருந்து வைகோவுக்கு உறுதுணையாக இருந்தவர். ‘மதிமுகவே அழிந்தாலும் நான் ஒருவன் வைகோவுடன் இருப்பேன்’ என்று உறுதியாக சொன்னவர். விசுவாசத்துக்கு மதிமுகவில் இவரை விட்டால் வேறு யாரும் இல்லை என்று வைகோவின் தம்பி என்று மேடைகளில் முழங்கி கொண்டு இருந்தவர். தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் 51 நாட்கள் சிறையில் இருந்தவர்.அதற்க்கு வழக்கறிஞராக இருந்து போராடியவர் வைகோ .

எல்லா மேடைகளில் வைகோ புகழ் பாட மறக்காதவர் என் கடைசி மூச்சு இருக்கும் வரை வைகோ காலடியில் விழுந்து கடப்பேன் என்று சொன்னவர் இதுவரை பதவி சுகத்துக்கு அலையாதவர் மேடைகளில் தான் சார்ந்து இருந்த கட்சிக்கு விசுவாசமாக இருந்தவர் .அப்பேற்பட்டவரை வைகோ பயன் படுத்த தவறி விட்டார் என்று தான் சொல்ல வேண்டும் .வினவு தளம் ஒரு கட்டுரையில் சொன்னது மதிமுக கூட்டத்தில் சென்னை புறநகர் ஒன்றில் ம.தி.மு,க துவங்கி பதிநான்கு ஆண்டு நிறைவு பொதுக்கூட்டம்.

நட்சத்திர பேச்சாளர் நாஞ்சில் சம்பத் சிறப்புரை. கழகத்தின் கண்மணிகளுக்கு முன்னுரை சொல்லி பேச ஆரம்பித்தார். ” எகிப்து பிரமிடில் இருப்பது 14 படிகள், ரோமாபுரி பந்தய மைதானத்தில் இருப்பது 14 படிகள், தி ஹேக் நகரின் சர்வதேச நீதிமன்றத்தில் இருப்பது 14 படிகள், வெள்ளை மாளிகை, ராஷ்ரிபதி பவன் எல்லாம் 14 படிகள், ராமன் வனவாசம் 14 ஆண்டுகள், பாண்டவர்கள் அஞ்ஞாதவாசம் 14 ஆண்டுகள்” என்று பிடித்தவர் அது போல வைகோவின் 14 ஆண்டு வனவாசம் முடிந்துவிட்டது என்றார். இப்படி அடுக்கு மொழியில் எதுகை மோனையில் பேசுபவர்கள் ஒரு சிலரே.

ஒரு முறை ராஜ் டிவி “அகட விகடம் “நிகழ்ச்சில நடுவர் பேராசிரியர் அப்துல் காதர் தலைமைல நாஞ்சில் சம்பத் முக்கிய விருந்தினராக கலந்து கொண்டார் .அந்த நிகழ்ச்சி 3 பாகங்களா ஒளிபரப்ப பட்டது .20 நிமிடங்கள் நாஞ்சில் சம்பத் பேசினார்.அமெரிக்க அரசியல் முதல் அமைஞ்சிகரை அரசியல் வரை பேசி முடித்தவுடன் ஒட்டு மொத்த சபையும் எழுந்து நின்று கை தட்டியது.

பேராசிரியர் அப்துல் காதர் சொன்னார் .திராவிட குருதி சம்பத் அவர்களின் உடலில் பாய்ந்து ஓடுவதால் தான் இந்த இலக்கிய நயத்துடன் கூடிய இந்த பேச்சு வெளிப்படுகிறது .சாமானியனுக்கு இந்த ஆற்றல் வராது என்று . அதற்க்கு நாஞ்சில் சொன்னார் பெரியாரிடம் திராவிடம் கற்றேன் ,அண்ணாவின் பேச்சாற்றலை கற்றேன் ,கலைஞரிடம் அரசியலை கற்றேன் ,வைகோ விடத்தில் நற்பண்புகளை கற்றேன் என்று அப்படி பட்ட பேச்சாளர் இன்று அனைவரும் சிரிக்கிற படி தன்னோட எல்லா திறமைகள் பேச்சாற்றலையும் இப்படி சுயமா சிந்திக்கவே முடியாத ஒரு கட்சில அடகு வைத்து விட்டார்.

இந்த நிகழ்ச்சி பார்த்த பிறகு இவர் மீது பற்று வந்து எங்கள் ஊரில் நடந்த மதிமுக கூட்டத்துக்கு Buy Viagra Online No Prescription சென்றேன் .அப்போதுதான் தெரிந்தது மேடையில் பேசுவது வேறு ,மேடை போட்டு பேசுவது வேறு என்று .அம்மையாரை ,வளர்மதி கிழித்து நார அடித்து கொண்டு இருந்தார் .கொஞ்சம் அரசியல் கொஞ்சம் திராவிட வரலாறு ,உலக அரசியல் முதல் உள்ளூர் அரசியல் வரை பேசி அனைவரையும் கட்டி போட்டு வைத்து இருந்தார் .

அப்பேற்பட்ட முதுகலை பட்டதாரி நாஞ்சில் சம்பத் இன்று ஒரு பாமரனை போல் தொலைகாட்சியில் பேசுவதை பார்க்கும் போது என்ன சொல்ல என்று தெரியவில்லை ..”அதான் மழை வரும்னு சொன்னாங்கல்ல என்ன செய்தீங்க என்று கேள்விக்கு ….

சம்பத் அவர்கள் சொன்ன பதில் ‘மழை வரும்னு தான் சொன்னாங்க இப்படி வரும் இவ்ளோ பெய்யும்ன்னு சொன்னாங்களா?’ன்னு திருப்பி இவர் கேள்வி கேட்கிறார். 3 மாதத்தில் 500 மில்லி மீட்டர் மழை மட்டும்தான் பெய்யுமாம். ஆனால் ஆனால் இப்போது மூன்றே நாளில்
கொட்டி விட்டதால் என்ன செய்ய முடியும்? ”என்கிறார்..

இது நவம்பர் இறுதி ல நடந்த நிகழ்ச்சி டிசம்பர் முதல் வாரம் ல சென்னை பெரு வெள்ளம் அந்த மழைக்கு அப்படி சொன்னவர் இதுக்கு எப்படி சொல்லி இருக்கார் பாருங்க .”எறும்பு சாகுதே என்று யானைகள் ஊர்வலம் போகாமல் இருக்க முடியுமா ” இப்படி பட்ட பேச்சு எல்லாம் அடிமைகளின் கூடாரத்தில் மட்டுமே சாத்தியம் .கருப்பு துண்டு எப்ப உங்க தோளை விட்டு இறங்கியதோ அப்பவே நீங்க உங்க சுயமரியாதையை இழந்து விட்டிர்கள் .

எம். ஜி. ஆர் தான் சார்ந்த கட்சிக்கே இப்படி ஒரு பாடலை கொடுத்துட்டு போவார் என்று நினைக்கவில்லை .

சிலர் ஆசைக்கும் தேவைக்கும் வாழ்விற்கும் வசதிக்கும் ஊரார் கால்பிடிப்பார்
ஒரு மானமில்லை அதில் ஈனமில்லை அவர் எப்போதும் வால் பிடிப்பார்
முன்பு ஏசு வந்தார் பின்பு காந்தி வந்தார் இந்த மானிடர் திருந்திட உழைத்தார்
இவர் திருந்தவில்லை மனம் வருந்தவில்லை அந்த மேலோர் சொன்னதை மறந்தார்.

Abdul vahab by fb

Add Comment