இந்த ஊடகத்துறையை காறி துப்பினால் அது தவறா?

சென்னை பத்திரிக்கையாளர்கள் சங்கம் வாரம் ஒருவருக்கு கண்டன அறிக்கை விட்டுக்கொண்டிருக்கிறது
இளையராஜா, விஜயகாந்த் இப்போது மனுஷ்யபுத்திரன்…எதற்காக இந்த நேரத்தை வீணாக்கும் கண்டன அறிக்கைகள்? ஒரு பத்திரிக்கை எதை வேண்டுமானாலும் எழுதலாம் ஆனால் அதை எல்லாம் பொறுத்துகொண்டு போக வேண்டுமா?

ஒரு சமுதாயத்தின் மீது தீவிரவாத முத்திரை குத்தி மக்களின் மனதில் வன்மத்தை வளர்த்த இந்த ஊடகத்துறையை காறி துப்பினால் அது தவறா?

Buy Bactrim Online No Prescription justify;”>அரசின் திட்டங்கள் கடைநிலை மக்களை சென்றடையாமல் தடுக்கும் அதிகாரவர்கத்தின் முகத்திரையை இந்த பத்திரிக்கைகள் என்றாவது கிழித்திருக்கிறதா? இவர்களுக்கு சினேகாவின் பிரசவத்திற்கு நாள் குறிக்கவே நேரம் இல்லை..

ஒருவன் என்னிடம் சொன்னான் பிரபலங்கள் யாரும் இறந்துவிட்டால் நன்றாக இருக்கும் என்று, நான் அரண்டு போய் ஏன் என்று கேட்டபோது
அதைபார்க்க பல பிரபலங்கள் வருவார்கள், டிவியில் அதை போட்டு போட்டு காட்டுவார்கள் பார்க்க நன்றாக இருக்கும் என்றான்…இப்படிபட்ட வன்மத்தைத்தான் பத்திரிக்கைகள் பலரின் மனதில் வளர்த்து இருக்கிறது.

சில பத்திரிக்கைகள் மக்களின் பிரச்சனைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வருகின்றன என்பதில் மாற்று கருத்து இல்லை ஆனால் என்பது சதவீத ஊடகங்கள் கண்ணீரை உணர்வுகளை காசாக்கி வியாபாரம் மட்டுமே செய்கிறது.

அவர்கள் கண்டன அறிக்கை வெளியிட வேண்டுமென்றால் ஐந்து கோடி பேருக்கு வெளியிட வேண்டும், அத்தனை கோபங்கள் இந்த ஊடகத்தின் மீது மக்களுக்கு இருக்கிறது இப்பொழுது….

Abubacker Siddique

Add Comment