கடையநல்லூரில் பொருளாதரத்தில் நலிவடைந்தவர்களுக்கு உதவ புதிய அமைப்பு

கல்விக்காக கரம் கோர்ப்போம்

போதிய பொருளாதார வசதி இல்லாததால் கல்லூரிப் படிக்கட்டுகளில் கால்பதிக்க முடியாத எத்தனையோ திறமையான மாணவர்கள் நமது கடையநல்லூரில் உண்டு . அவர்களை அடையாளம் கண்டு , அவர்களின் முழு படிப்புக்கான தொகையையும் செலுத்தி ஒளிமயமான எதிர்காலத்துக்கு வழிசெய்யும் முயற்சியில் Kadayanallur Educational Wings (கடையநல்லூர் கல்விச் சிறகுகள் ) என்ற அறக்கட்டளை செயல்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட இந்த பதிவுறா அறக்கட்டளை கடையநல்லரை சார்ந்த உதவும் உள்ளம் கொண்ட நல்லுள்ளங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது . உதவும் எண்ணம் கொண்ட பல நபர்களின் அன்றாட செலவுகளில் ஒரு சிறிய பகுதியை ஒன்று திரட்டினால் , நமது கடையநல்லரை சார்ந்த ஏதேனும் ஒரு மாணவனுக்கு கல்விக் கொடை கொடுத்து அவனது எதிர்காலத்தை வளமாக்கலாம் என்ற முனைப்போடு பல்வேறு தரப்பு மக்களிடமும் (உள்நாடு ,வெளிநாடு வாழ் கடையநல்லர்வாசிகள் ) நன்கொடை திரட்டும் பணியில் இந்த அறக்கட்டளை ஈடுபட்டுள்ளது.

இந்த அறக்கட்டளை குறித்த செய்திகள் , நிர்வாகம் ,பணபரிமாற்றம் இன்னபிற தகவல்களை அறிந்து கொள்ள வாட்ஸ்அப் மற்றும் ஃபேஸ்புக்கில் தனிக்குழுமங்கள் செயல்படுகின்றன . முறையான ஆண்டுத் தணிக்கை செய்து கணக்குகளை கல்வியாண்டின் இறுதியில் இந்த சமூக வலைதள குழுமங்கள் மூலமாக மக்களின் பார்வைக்கு சமர்பிக்கப்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கென 11 நபர்கள் அடங்கிய நிர்வாக குழு அமைக்கப்பட்டு அறக்கட்டளை நடவடிக்கைகள் கண்காணிக்கப்படுகின்றன . உதவி செய்ய விரும்பும் உள்ளங்களே … உங்களது ஒரு ரூபாய் நன்கொடை கூட கடைக்கோடி கடையநல்லர்வாசியின் கண்ணீர் துடைக்கலாம்.

கல்விக்காக உதவ முன்வரும் நல்லுள்ளங்கள் அறக்கட்டளை நிர்வாகிகளை தொடர்பு கொள்ளலாம் .

12498861_1634298560156142_1783054824_nno prescription online pharmacy width=”206″ height=”300″ />

12511571_1634204516832213_1241749833_n

Add Comment