ரஜினிக்கு ரூ.10 மணியார்டர் அனுப்பிய நபர்

ரஜினிக்கு ரூ.10 மணியார்டர் அனுப்பிய நபர் : இது எப்படி இருக்கு
தமிழக வெள்ள நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம்கொடுத்த ரஜினிக்கு 10ரூபாயை மணியார்டராக நெல்லை மாவடடம் திருமலையப்பபுரத்தை சேர்ந்தவர் ராமநாதன் அனுப்பி உள்ளார்.
நெல்லை மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகே திருமலையப்பபுரத்தை சேர்ந்த வாஞ்சி இயக்க நிறுவனத் தலைவர் ராமநாதன். இவர் நடிகர் ரஜினிக்கு 10 ரூபாய்க்கு மணியார்டரும், தனியாக கடிதமும் அனுப்பி உள்ளார். அந்த கடிதத்தில் ரஜினி பல படங்களில் மிகவும் நல்லவராக நடித்த நிலையில் வெள்ளம் சென்னையில் வந்தபோது எங்கெங்கு இருந்தெல்லாமோ தமிழக மக்களின் நிவாரண நிதிக்காக இந்தி, தெலுங்கு என சம்பந்தமே இல்லாத குறைந்த ஊதியம் பெறும் நடிகை நடிகைகள் கூட கோடி கணக்கில் வாரிக் கொடுத்திருக்கிறார்கள்.
ஆனால் கர்நாடகாவில் இருந்து பிழைப்பிற்காக தமிழகத்திற்கு வந்து தமிழக மக்களால் இந்திய கோடீஸ்வரர்களின் ஒருவரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தாகிய நீங்கள் வெறும் 10 லட்சம் ரூபாய் கொடுத்தது ஏன் என ரசிகர்களே கேட்கும் நிலைமை உருவானதால் உண்மையிலேயே எங்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. ஒருவேளை Doxycycline online நீங்கள் கஷ்டப்படுகிறீர்களோ அதனால் தான் வெறும் 10 லட்சம் கொடுத்துள்ளீர்கள். உங்களுக்கு கஷ்டம் இருப்பதால் உங்களுககு உதவும் எண்ணத்தில் 10 ரூபாய் மணியார்டர் அனுப்பி வைக்கிறேன். இதுபோன்று இரக்கம் கொண்ட அனைத்து தமிழர்களும் ரஜினிக்கு 10 ரூபாய் அனுப்பி உதவுங்கள் என்று கூறியுள்ளார்.
நடிகர் ரஜினிக்கு பதிவுத்தபாலுடன் அனுப்பிய கடிதம் கிடைத்ததற்கான அக்னாலஜிமெண்ட் கார்டு ராமநாதனுக்கு வந்து விட்டது. ஆனால் மணியார்டர் திரும்ப வந்து விட்டது. மணியார்டர் திரும்ப வந்ததற்கான காரணம் அப்படி ஒரு அட்ரஸ் இல்லையென ‘நாட் நோன்’ என்று குறிப்பிட்டு வந்திருந்தது. கடிதம் மட்டும் சென்ற ரஜினி முகவரிக்கு மணியார்டர் எப்படிச் செல்லாமல் திரும்ப வந்தது. 10 லட்சம் கொடுத்த ரஜினிக்கு 10 ரூபாயை கொடுக்க நினைத்த ராமநாதனின் மணியார்டர் திரும்ப வந்ததால், மணியார்டரை ரஜினி வாங்க மறுத்துவிட்டேன் என அனுப்பியிருக்கலாம் இல்லை திருப்பி அனுப்புகிறோம் என அனுப்பியிருக்கலாம். ஆனால் தபால் துறையோ ‘நாட் நோன்’ என அனுப்பியதால் சென்னையில் ரஜினிக்கு அட்ரஸ் இல்லை என்ற அர்த்தத்துடன் தபால்துறை அனுப்பியுள்ளதாக தபால்துறை மீது புகார் செய்ய முடிவு செய்துள்ளார். இந்த தகவல் வாட்ஸ் அப்பில் பரவி வருவதால் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Add Comment