இனிய நூடுல்ஸ்,பரோட்டா,அஜினோமோட்டோ,ஹார்லிக்ஸ் வாழ்த்துக்கள்…

இனிய நூடுல்ஸ்,பரோட்டா,அஜினோமோட்டோ,ஹார்லிக்ஸ் வாழ்த்துக்கள்…

பொங்கல் உணவை வாழ்த்தாக சொன்ன தமிழர் பாரம்பரியம்..மரபை மீறியதால் எனது வாழ்த்தும் மாறிவிட்டது…

தொலைகாட்சியில் சொல்லும் உணவே மிக சிறந்தது..ஏனென்றால் வெள்ளகாரன் பொய் சொல்லமாட்டான்..

மாவு ஆட்ட கூட நேரமில்லாத நமக்கு எதற்கு பொங்கல் வாழ்த்து?

இளவட்ட கல் எதற்கு தூக்க வேண்டும்,ஏறு தழுவதல் எதற்கு வேண்டும்..நவீன லெக்கின்ஸ் தமிழச்சியை கவர ஒரே ஒரு பார்வேர்ட் மெஸேஜ்-வாட்ஸ் ஆப்பும்,பேஸ் புக்கும் ப்ரொபைலில் ஹீரோ படமும் போதுமே..

உட்கார்ந்து சமைத்த காலம் காலாவதியாகி Buy Ampicillin மைக்ரோஒவனில் பழையதை சூட்டோடு சாப்பிடுகிற நமக்கு எதற்கு மண் பானையில் ஒரு நாள் கூத்து பொங்கல் வாழ்த்து..

ஹைபிரிட் முளைக்காத உயிரில்லா விதைகள்,ரசாயனம் கலந்து மலடாகி போன நிலத்தில் சிஸேரியன் போன்று ட்ராக்டர் கொண்டு சிதைத நிலங்கள்…வெள்ளைதான் வேண்டும் என்று டபுள் பாலிஷ் அரிசி உண்ணு
நமக்கு எதற்கு பாரம்பரிய பொங்கல் வாழ்த்து..

மாடே இல்லாத பால் பருகும் சமூகம்,அனுமதிக்கபட்ட
பெயின்ட் என்னும் ப்ளேவர்,எசன்ஸ் இருக்கிறது என்று லேபிளில் படித்தாலும் அட எக்ஸ்பெயரி டேட் என்னும் பொய்யை மட்டுமே பார்க்கிற நமக்கு எதற்கு பொங்கல் வாழ்த்துக்கள்?

ஆர்கானிக் உணவு,நஞ்ஜில்லா உணவு,இயற்கை உணவு,டாக்டர் சிவராமன் சொல்கிறார்,அல் ஷிபா கியூர் ஷ்யூர் சொல்கிறார் என்று வெறும் ஏட்டுசுரக்காய் கதையோடு ஒரு சிறிதும் வாழ்வியலை,உணவை மாற்றாத நமக்கு எதற்கு பொங்கல் வாழ்த்துக்கள்?

மாற்றதை ஏற்படுத்த முயற்சி செய்கிற உங்களுக்கு இது பொருந்தாது..எனவே தமிழர் திருநாள் பொங்கல் வாழ்த்துக்கள்..

பாரம்பரியம் மாறாமல்,மரபை கட்டிகாத்து,சுதேசி பொருட்களை பயன்படுத்தி.சித்த,ஆயுர்வேத மருத்துவம் கொண்டு நோய் நீங்கி வாழ்வாங்கு வாழ மீண்டும் தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்.

மரு.அ.முகமது சலீம் (புனை பெயர் க்யூர் ஷ்யூர்)BAMS.,M.Sc(உளவியல்).,M.Sc(யோகா).,M.Sc(வர்மம்).,MBA
Dr.ஐ.ஜவாஹிரா பானு.,BHMS,PG Dip Panchakarma,PG Dip Acu

அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை.
கடையநல்லூர் CELL 9042225333
திருநெல்வேலி 90 4222 5999
ராஜபாளையம் 90 4333 6888
சென்னை 90 4333 6000

www.ayurvedamaruthuvam.blogspot.com

www.healz.in

Add Comment