சவுதியில் கடையநல்லூர் வாசிக்கு நடந்த சோகம்

கடையநல்லூரை சேர்ந்தவர் அப்துல் ஹமீத். சவூதி அரேபியா, தாயிஃப் பகுதிக்கு வேலைக்காக சென்று இரண்டு வருடம் பணியாற்றிய பின் விடுமுறையில் ஊர் செல்ல உரிமையாளரிடம் கூறியிருக்கிறார். அவரது உரிமையாளரோ விமான பயணச்சீட்டு Buy cheap Cialis வழங்காமல் விடுமுறை விசா மட்டும் கொடுத்துள்ளார்.

பணத்திற்காக பலரிடம் வினவிய போது சில நாட்கள் கடந்து விட்டது. இந்த தருணத்தில் தன்னிடம் இருந்து ஓடி விட்டதாக நிறுவனர் காவல்துறையில் புகார் கொடுத்து விட்டார்.

சில நல்லவர்கள் உதவியால் அல் ஹசாவில் உள்ள தன் உறவினர் இடம் வந்து சேர்க்கப்பட்டார். இங்கும் முறையாக வேலை செய்ய முயன்றுள்ளார். ஆனால் வேலையும் கிடைக்காமலும், தாயகமும் திரும்ப முடியாமலும் தவித்த அப்துல் ஹமீத் இந்தியன் சோஷியல் ஃபோரம் (ISF) அல் ஹஸா கிளையை நாடினார்.

அங்கிருந்து தம்மாம் தலைமையிடம் உதவி கோரப்பட்டது. இந்திய தூதரகத்தை நேரடியாக அணுகி எக்ஸிட் பெற்றுத் தந்ததுடன் பயண செலவுகளையும் (ISF அல் ஹசா கிளை) முழுமையாக ஏற்றுக்கொண்டது. ISF இன் உதவியால் இன்று அவர் ஊர் திரும்பியுள்ளார்.

FB_IMG_1453515357409

Add Comment