தரையைப் பெருக்குவது ‘இளைஞர் மோடி’யா?- போலி போட்டோ

ஆர்எஸ்எஸ் பொதுக்கூட்டம் ஒன்றில் துடைப்பம் எடுத்து தரையைப் பெருக்குவது போல் இணையத்தில் உலவி வந்த அந்தப் பழைய புகைப்படத்தில் இருப்பது பிரதமர் மோடி அல்ல என்பது தெரியவந்துள்ளது.

அகமதாபாதைச் சேர்ந்த ஆர்வலர் ஒருவர் இது குறித்து தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் தக்க பதில் தரக் கோரியதில், அந்தப் படம் போலியானது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

2014-ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது, இளம் வயதில் நரேந்திர மோடி துடைப்பம் கொண்டு பெருக்குவது போலான புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவலாக வலம் வந்தது.

‘1988-ஆம் ஆண்டு ஆர்எஸ்எஸ் அமைப்பில் சாதாரண தொண்டராக நரேந்திர மோடி இருந்தபோது, அதன் பொதுக் கூட்டம் நடந்த இடத்தை பெருக்கியபோது எடுக்கப்பட்ட படம்’ என்று குறிப்பிடப்பட்டு இந்தப் படம் கசிந்தது.

இந்த நிலையில், அந்தப் படம் ஃபோட்டோஷாப்பில் ‘வேலை’ செய்யப்பட்டது என்று தகவல் Buy Doxycycline பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. “இந்தப் படம் தொடர்பாக கோப்புகளில் ஆராய்ந்தபோது, அதற்கான ஆதாரங்கள் எதுவும் சிக்கவில்லை.

அதற்கு பதிலாக வெறு ஒருவர் துடைப்பம் கொண்டு பெருக்கியப் புகைப்படத்தில், தொடர்புடைய நபரின் முகத்தை பிரதமர் மோடியின் இளம் வயது முகத்தை வைத்து மாற்றி தொகுத்துள்ளது உறுதியாகியுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Add Comment