யார் இந்த சாம்சன்…அப்படி என்ன செய்தார் கடையநல்லூருக்கு…

12552707_726068944161816_8911538968304240319_nசெயற்கரிய செய்தார் பெரியர்..
———————————————-
கடலோடிகள் நிறைந்த கடையநல்லூரின் காவல் துறை ஆய்வாளர் கண்ணியமிகு சாம்சன் அவர்கள் பிரியா விடை சொல்லிப் பிரியும் இந்நேரம், நன்றியுணர்ச்சியுடன் அவர் நம் ஊருக்கு செய்த நல்லுதவிகளையும் நினைத்துப் பார்க்கிறோம்.

காங்கிரசுக் கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் மஜீத் சாஹிபுவின் கடின முயற்சியால் பெற்ற நகரின் உள்கட்டமைப்பு, மற்றும் அடிப்படைவசதிகள் தவிர, போக்குவரத்து, சுகாதாரம், கல்வி மேம்பாடு, குடிநீர் விநியோகம், விவசாயநிலங்களை மேம்படுத்தி பயிர்சாகுபடி ஊக்குவித்தல், என அனைத்துத் துறைகளிலும் பிற ஊர்கள் உயரம் தாண்டியும், இது வரை நவீன கால வசதிகளை தன்னில் விரிவுபடுத்திக் கொள்ளாத சாபம் நிறைந்த ஊராகிப் போன நல்லூரில்,

சொல்லிக் கொள்ளும்படி பெரிய அளவில் எந்த தொழிற்சாலைகளோ வேலை வாய்ப்பு தரும் பண்ணைகளோ, சிறந்த கல்வி நிறுவனங்களோ அமைந்து உள்ளூர் வாசிகளின்தேவைக்கு வழி செய்யாத எங்களின் ஊரில்,

தனது குடும்பத்துக்கு இறைவனை காவலாக்கி காலையில் கிளம்பி மாலையில் தனது கூட்டுக்கு இறை தேடிக் கொண்டு வரும் பறவைகளைப் போல ஆண்டுகளைப் பொழுதாக்கி, திறந்த உலகில் தரவியம் தேடி பறந்து வாழும் இம்மண்ணின் தகப்பன்மார் மனம் குளிர…
சட்டம் ஒழுங்கை சீராக்கி சாலையோரங்களை ஆக்கிரமிப்பிலிருந்து நேராக்கி, குறைந்த கால இடைவெளியில், குப்பைக் கூளங்களை அகற்றி, குற்றம் குழப்பம் விளைவிக்கும் கும்பல்களுக்கும் ஒரு எச்சரிக்கை மணியாய் கறைபடாத கரம் கொண்ட நெஞ்சுறுதி மிக்க மனித நேயராய் மாண்புடன் பணி செய்த அன்பர் சாம்சன் அவர்களை நாம் நன்றியுடன் நினைக்க வேண்டியுள்ளது. .

ஒரு ஐம்பதாண்டுக்குள் ஆயிரக்கணக்கான மாற்றங்களை தன்னகத்தே உண்டாக்கிக் கொண்டு போலியான மனிதாபிமானம் மறந்த வண்ணம் மினுக்கியவாறு உயிரிழந்து போய்க் கிடக்கும் எங்களின் உண்மைக் கடையநல்லூரை மீட்டெடுக்க வேண்டிய உங்களைப்போன்ற சமுக ஆர்வம் மிக்க அதிகாரிகளை நாங்கள் வெகு விரைவில் இழக்க நேர்ந்தது எங்களின் துர்பாக்கியமன்றி வேறென்ன?..
தேடி Buy cheap Lasix சோறுநிதந் தின்று- பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம்
வாடித் துன்பமிகவுழன்று -பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின்மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போல -நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ ?
என வீர் கொண்டு பாரதியின் கனல் கக்கும் வரிகளை மெய்ப்பிக்க அறமும் ஆன்ற வினைத்திறமும் மிக்க செயல் வீரனாய் களம் கண்டு கனவிலும் மறக்கவியலாக் கடமை வீரனாய் கரம் பற்றி விடை பகரும் உங்களுக்கு எம் நெஞ்சம் நிறைந்த அன்பும் மகிழ்ச்சியும். சென்று வாருங்கள்..
ஒவ்வொரு கடயநல்லூர்காரனின் உள்ளத்து உணர்வு இது.

தொகுப்பு:கலு. அப்துல்லாஹ் ரஹ்மத்துல்லாஹ்

என்ன செய்தார் இவர்???

*காவல் நிலைய ஆய்வாளராக வந்த பின் ஆக்கிரமிப்பு கடைகள் சாலைகளில் இருந்த இடையூறுகளை அகற்றினார்.
*பல இடங்களில் புதிதாக மரங்கள் பல நட்டுள்ளார்.
*காவல் நிலையத்தில் பல மாற்றங்களை செய்துள்ளார் .
* இயற்கை மேல் கொண்ட பாசத்தால் மரங்களில் ஆணி அடித்து செய்யப்பட்ட விளம்பரங்களை தன்னார்வலர்களுடன் இணைந்து அகற்றியதோடு விளம்பரம் செய்ய வேண்டுமா அதற்கும் வழி தருகிறேன் என சிட்டுக்குருவிக்கு கூடுகள் செய்து அந்த கூட்டில் விளம்பரம் செய்து மாட்டுங்கள் அதனால், சிட்டுக்குருவிகள் பெருகும் என அறிவுறுத்துகிறார்…

*சிரட்டைகளில் கூண்டுகள் செய்து அதனை மரங்களிலும் கூடு தேடும் இடங்களிலும் பொருத்தி வருவதோடு இதை செய்ய மாணவர்களிடம் விழிப்புணர்வு ஊட்டி வருகிறார்…

*கண்ட இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டுவது தடுக்க இவரே சுவரொட்டி ஒட்ட போர்டுகள் பொருத்தி வருகிறார்.

* அவர் போகும் வழியில் ஏதேனும் பள்ளி தென்பட்டால் வாகனத்தை நிறுத்தி பாலிதீன் கவர்கள் குப்பைகள் அகற்றவேண்டிய விழிப்புணர்வை மாணவர்களுக்கு ஊட்டுவதோடு தனது வாகனத்தில் எப்போதும் வைத்திருக்கும் குப்பைதொட்டியில் குப்பைகளை பாலிதீன் குப்பைகளை சேகரிக்க அறிவுறுத்தி சாக்லெட் பரிசு வழங்குகிறார்

* சென்று கொண்டிருக்கும் போதே வெற்றிடமிருந்தால் அங்கு மரக்கன்றுகள் வாகனத்தை நிறுத்தி. நட்டு செல்கிறார்…

*கழிவு சாக்குகள் கழிவு கேஸ் டியூப்கள் போன்ற பொருட்களை கொண்டே குப்பை சேகரிக்க பைகள் செய்ய கற்றுத்தருகிறார்
இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக பாலிதீன் பைகள் ஒலிப்பில் முழு கவனம் செலுத்தி வரும் இவர் தானே டிசைன் செய்து ஒரு பையை வடிவமைத்து அதனை அதிகமாக தயாரிக்க செய்து விற்பனையும் செய்கிறார்.

மிகவும் மலிவான விலையில் ஒரு
மணிபர்சை போன்ற இந்த பை தேவைக்கு ஒரு பிக்சாப்பர் பையாக மாறுகிறது
இந்த பையாக இருந்தால் கண்டிப்பாக கடைக்கு செல்லும் போது பாலிதீன் பையாக தேவைப்படாது அதைப்பார்த்தவுடன் 100 ரூபாய்க்கு ஒரு பை வாங்கினேன் இனி வாழ்வில் எங்கும் எந்த இடத்திலும் பாலிதீன் பயன்படுத்தக்கூடாது என முடிவெடுக்க வைத்தது அந்த பை..

ஆடம்பரமாக விழா கொண்டாட்டம் அனுமதி கேட்பவர்களிடம் கனிவாய் கல்வி உபகரணங்களை தங்கள் பகுதி மாணவர்களுக்கு வழங்கவும் அறிவுறுத்துகிறார் கனிவாக…

காவல் நிலையத்தில் பசுமை விரும்பி பல ஜாடிகளில் பசுமை செடிகள் காவல் நிலையத்தில் அதிகம் குப்பைத்தொட்டி என வைத்துள்ளார்

ஒரு அட்டைப்பெட்டியும் இருந்தது அதில் மாணவர்களுக்கான சீருடையும் இருந்தது எதற்கு என விசாரித்த போது தான் தெரிந்தது அது வறுமையில் உள்ள மாணவர்களுக்கு சீருடை வழங்கிட அவரது சொந்த முயற்சியில் வரவழைத்தது என தெரிந்தது…

மேலும் இவர் இதுவரை 25 முறைக்கு மேல் இரத்த தானம் கொடுத்துள்ளார்

இவையனைத்தும் எந்த விளம்பரத்தினையும் எதிர்பார்க்காமல், நம்ம போட்டோ எடுத்ததையே அனுமதிக்கல இவரு….
அப்புறம் காலர் ஐடி பிக்சருக்குன்னு சொல்லிதான் படமெடுக்க முடிந்தது இவரை!

உண்மையில் இப்படி சிலர் இருப்பதால் தான் இயற்கை அன்னை வாழ்கிறாள்…

இயற்கை அன்னையின் வளம் காக்க இவர் செய்யும் முயற்சிகளில் இது துளி அளவே இன்னும் பதிவிட முடியாமல்…..

வெளியே தெரியாமல் செய்வது இவர் நோக்கம் என்றாலும் இவர்கள் போன்ற சமூக ஆர்வலர்களை வெளிப்படுத்துவது தமிழ்நாடு சமூகசேவை கழகத்தின் கடமையாகும் இவர்கள் போன்று அனைத்து அரசு ஊழியர்களும் தன் கடமையோடுசேர்த்து சமூகசிந்தனையோடு வாழ்ந்தால் விரைவில் உருவாகும்…
“வருமை இல்லாத தமிழகம்”
“கல்லாதவர் இல்லாத தமிழகம்”
“சுகாதாரமான வளமான தமிழகம்”
அனைத்தும் வெகுதூரமில்லை….!!!!
நண்பர்களாகிய நீங்கள் நினைத்தால்….

மாற்றுவோம் நம் தேசத்தை*

———————————————————————————————-

கடையநல்லூர்: மாணவர்களுக்கு காவல்துறை அதிகாரி அறிவுரை !
மாணவர்களுக்கு காவல்துறை அதிகாரி அறிவுரை !

டிச 23:கடையநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில்இன்று காலை பிரார்த்தனை ஹாலில் கலந்து கொன்ட கடையநல்லூர் காவல்துறை ஆய்வாளர் சாம்சன் 400க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு ஒழுக்கம், சுத்தம், மரம் வளர்ப்பு குறித்த விழிப்புணர்வு ,பிளாஸ்டிக் பயன்பாட்டின் தீமைகள் குறித்தும்,மேலும் பள்ளிக்கு வரும் போது மாணவர்கள் கண்டிப்பாக ஜாதி அடையாளங்களுடன் வரக்கூடாது என அறிவுரை வழங்கினார் அரையாண்டு விடுமுறை நாட்களில் நூலகம் சென்று அதிக அளவில் புத்தகம் படிக்க வேண்டும் பாரம்பரிய விளைட்டில் ஈடுபடவேண்டும் நமது பள்ளிக்கூடம் எப்போதும் தூய்மை யானதாகவே இருக்க வேண்டும் என்றார் இந் நிகழ்சியில் தலைமை ஆசிரியர் ஷாஜஹான் மற்றும் பள்ளியின் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர் .

கடையநல்லூர் காவல்துறை ஆய்வாளர் துணி பைகளை வழங்கினார்.

புத்தாண்டு தினத்தினை முன்னிட்டு  புரவிகள் இயக்கத்தினர்   கடையநல்லூர் காவல்துறை ஆய்வாளர் திரு.சாம்சன் அவர்களை சந்தித்து சத்தித்து வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்!

அப்போது  புரவிகள் இயக்க நண்பர்களுக்கு வாழ்த்துக்களுடன் ஆளுக்கொரு புத்தகம் பரிசளித்தார் !

ஆதோடு மட்டுமல்லாமல் இன்று முதல் பாலித்தீன் பைகளுக்கு மாற்றாக துணிப்பையை பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தி வாழ்த்த வந்தவர்கள்  அனைவருக்கும் மஞ்சள் நிற துணிப்பைகளை வழங்கினார்.மேலும் 30-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை புரவிகள் இயக்கத்தினர் நாட்டினர்.

கடையநல்லூர் மெயின் ரோட்டில் கண்காணிப்பு கேமரா

கடையநல்லூர் மெயின் ரோடு தங்கள் மெடிக்கல் மேலே தனியார் வணிக நிறுவணம் உதவியுடன் கடையநல்லூர் காவல்துறை ஆய்வாளர் சாம்சன் பெண்கள் மேல்நிலைப் பள்ளி ,மெயின்ரோடு,மார்கெட் ஆகியவற்றை கண்காணிக கண்காணிப்பு கேமராவை ஒரு மாதத்திற்கு முன்பே மாட்டியுள்ளார் தற்போது பெண்களை மாணவிகளை கேலி செய்பவர்கள் கண்காணிப்பு வலையத்தில் மேலும்
Cctv கேமிரா நகரில் முக்கிய வீதிகளில் பொருத்த. பொருளாதார உதவிகள் செய்ய வணிகர்கள் முன் வரவேண்டும்

கடையநல்லூர் காவல்துறை ஆய்வாளர் மாணவவிகளுக்கு அறிவுரை !

மாணவவிகளுக்கு காவல்துறை அதிகாரி அறிவுரை !

ஜன 23:கடையநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில்இன்று காலை பிரார்த்தனை ஹாலில் கலந்து கொன்ட கடையநல்லூர் காவல்துறை ஆய்வாளர் சாம்சன் 2000க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு ஒழுக்கம், சுத்தம், மரம் வளர்ப்பு குறித்த விழிப்புணர்வு மற்றும் பிளாஸ்டிக் பயன்பாட்டின் தீமைகள் குறித்தும்,மேலும் மாணவிகள் ஆண்களுக்கு நிகராக விமானம் ஓட்டுதல் பாராசூட்டில் பறக்குதல் போன்றவற்றில் வீராங்கனைகளாக மாறவேண்டும் சாதித்து காட்ட வேண்டும் நமதூரில் நடைபெற்ற பாராசூட் பயிர்ச்சியில் கலந்து கொண்டு பறந்த மாணவிகளை பாராட்னார் விடுமுறை நாட்களில் நூலகம் சென்று அதிக அளவில் புத்தகம் படிக்க வேண்டும் பாரம்பரிய விளைட்டில் ஈடுபடவேண்டும் நமது பள்ளிக்கூடம் எப்போதும் தூய்மை யானதாகவே இருக்க வேண்டும் என்றார் இந் நிகழ்சியில் தலைமை ஆசிரியர் ரூபா பாக்கியவதி மற்றும் பள்ளியின் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர் .(நாளைய தினம் ஆய்வாளர் நமது ஊர் காவல் நிலையத்திலிருந்து விடை பெறுவது குறிப்பிடதக்கது).

 

கடையநல்லூரில் கடைசி வரை மக்கள் பணியாற்றிய காவல் துறை ஆய்வாளர்

கடையநல்லூர் கிருஷ்ணாபுரத்தில் முப்புடாதியம்மன் திருக்கோவில் திருவிழாவில் நடைபெற்று வருகிறது.

கோவில் திருவிழாவில் நடைபெறும் இன்னிசைக்கச்சேரியை காண வந்த இளைஞர்களை கொண்டு பேரூந்து நிறுத்தங்களில் ஒட்டியிருந்த சுவரொட்டிகளையும் மற்றும் அப்பகுதியிலிருந்த அசுத்தங்களையும் காவல் துறையினர் திரு சாம்சன் தலைமையில்  உதவி ஆய்வாளர் திரு சிபின்ராஜ்மோன்,  சிறப்பு உதவி ஆய்வாளர் திரு சரவண நாகராஜன் மற்றும் இளஞ்சர்கள் பலரும் இணைந்து சுத்தம் செய்தனர்.

இச்சேவையை பாராட்டி இப்பகுதி பொதுமக்கள் காவல்துறை ஆய்வாளர் மற்றும் காவல்துறையினருக்கு வெகுவாக பாராட்டுத்தெரிவித்தனர்.

நாளைய தினம் ஆய்வாளர் நமது ஊர் காவல் நிலையத்திலிருந்து விடை பெறுவது குறிப்பிடதக்கது

கடையநல்லூர் வானம் அறக்கட்டளை சார்பில் அன்பு இல்லம் முதியவர்களுக்கு உதவி

கடையநல்லூர் காவல் துறை ஆய்வாளர் திரு.சாம்சன் அவர்கள் தலைமையில் வானம் அறக்கட்டளை மற்றும் ஆசிரியர் கூட்டணியும் சேர்ந்து வடகரை அன்பு இல்லம் (அனாதை மற்றும் முதியோர் இல்லம் ) சென்று அவர்களுக்கு உதவிகள் வழங்கிய போது

—————————————————————-

கடையநல்லூர் காவல்துறை &மத்திய இளைஞர் நலம் மேம்பாட்டுதுறை சார்பில் இரண்டு நாட்கள் மாணவ மாணவிகளுக்கும் மற்றும்   கிராமபுர பொது மக்களுக்கு பாராசூட் பயிற்சி முகாம் கடையநல்லூர் அருகே  மங்களாபுரத்தில் நடந்தது இதில் இருநூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு பறந்தனர் இவர்களுக்கான பயிற்சியை காவல் ஆய்வளர் சாம்சன் மேற்கொண்டார்.

கடையநல்லூர் காவல்துறை மாணவ மாணவிகள் மற்றும் தீயணைப்புதுறை பொதுமக்ககளுக்கு பாராசூட் பயிற்சிமுகாம் நடத்தினர் இதில் ஐம்பதிற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு பறந்தனர் காவல்துறை Ssi சரவணன் மகன் 10 வயது குழந்தை பறந்தது அனைவருக்கும் ஆச்சிரியத்தை ஏற்படுத்தியது

வாழ்த்துவோம் வாருங்கள்….

Add Comment