கடையநல்லூரில் பரவி வரும் டெங்கு காய்ச்சலை தடுக்க நடவடிக்கை எடுக்க SDPI கோரிக்கை

கடைய நல்லூரில் தற்போது மிக வேகமாகப் பரவிவரும் டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கக் கோரி SDPI கட்சி சார்பாக பல்வேறு கோரிக்கைகளை நகராட்சி நிர்வாகத்திற்கு வைத்திருந்தது.
அதனடிப்படையில் கடையநல்லூர் நகராட்சி நிர்வாகமும் ஆங்காங்கே மருத்துவ முகாம்கள் நடத்தியும், நிலவேம்பு கசாயம் வழங்கியும், கொசுமருந்து புகை அடித்தல் மற்றும் கொசு மருந்து தெளித்தல் போன்ற நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நடவடிக்கைகளுக்காக SDPI கட்சி சார்பில் நன்றி தெரிவித்தும், இப்பணிகள் இன்னும் துரிதமாக நடந்திட buy Amoxil online SDPI கட்சி தயாராக இருக்கிறது. தேவைப்பட்டால் நகராட்சியுடன் சேர்ந்து SDPI கட்சி செயல்வீரர்கள் களப்பணியாற்ற தயாராகவே உள்ளனர் என்ற அறிவிப்பு கடிதம் இன்று 28.01.2016 வியாழன் அன்று கடையநல்லூர் நகராட்சி ஆணையாளரை சந்தித்து SDPI கட்சி நகர தலைவர் சொன்னி S.முகம்மது ஹாலித் தலைமையில் கொடுக்கப்பட்டது. பாப்புலர் ப்ரண்ட் சமூக மேம்பாட்டுத் துறை கடையநல்லூர் நகர பொறுப்பாளர் ராஜா முகம்மது மற்றும் SDPI கட்சியின் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

12654407_965306240228506_8465885962461586964_n

 

Add Comment