கடையநல்லூரில் டெங்கு கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரம்

கலெக்டரிடம் புகார் எதிரொலி சுகாதார துறை துனை இயக்குனர் சரவணன் தலைமையில் கடையநல்லூரில் டெங்கு கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரம் .

கடையநல்லூர் சுற்றுவட்டாரப் பகுதியில் மீண்டும் மர்ம காய்ச்சல் பரவி வருவதால் 500க்கும் மேற்பட்டோர் கடையநல்லூர், தென்காசி நெல்லை ஆகிய தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடையநல்லூர் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் கடந்த 2009ம் ஆண்டு திடீரென பரவிய மர்ம காய்ச்சலால் 50க்கும் மேற்பட்டோர் மரணமடைந்தனர் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் மர்ம காய்ச்சலுக்கு சிலர் உயிர் இழப்பது வாடிக்கையாகிவிட்டது.

12572943_435663939966689_3816563998094177690_n

இந்த காய்ச்சல் பரவுவதை தடுக்க 2009ம் ஆண்டு புனே, பெங்களூரு ஆகிய நகரங்களிலிருந்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தினர் கடையநல்லூருக்கு வந்து பல்வேறு ஆய்வுகளை நடத்தினர். அத்துடன் தமிழகத்தின் பல பகுதிகளிலும் இருந்து ராட்சத கொசு ஓழிப்பு மெஷின் கொண்டு வரப்பட்டு நகர பகுதிகளில் கொசுக்குள் முற்றிலும் ஓழிக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த 7 நாட்களாக கடையநல்லூர் பகுதியில் 500க்கும் மேற்பட்டோர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கடையநல்லூர், தென்காசி , நெல்லை ஆகிய ஊர்களில் தனி யார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் ரத்தத்தில் உள்ள பிளட்லெட்ஸ் குறைவால் எதிர்ப்பு சக்தி குறைந்து காய்ச்சல் தாக்குவதாக கூறப்படுகிறது.

இந்த மர்ம காய்ச்சலால் பாதிக்கப்படும் மக்கள் கடையநல்லூர், தென்காசியில் இதற்கான Buy Ampicillin Online No Prescription உரிய சிகிச்சை இல்லாத நிலையில் மதுரை, நெல்லை ஆகிய நகரங்களுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. அங்கு நோயாளிகளின் ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவை பிரித்து ரத்தத்தில் விலை உயர்ந்த ஆண்டிபயாடிக் மருத்தை செலுத்த வேண்டி உள்ளதால் அதற்கு ரூ.50 ஆயிரம் முதல் 1லட்சம் வரை செலவாகிறது. எனவே காய்ச்சலை தடுக்கவும், காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் மேலும் மெகா மருத்து முகாமை நடத்த வேண்டும் டெங்கு காச்சலுக்கு அரசு மருத்துவமனையில் தனி பிரிவை ஏற்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பஜார் கிளை சார்பில் திங்கள் கிழமை மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளனர் இதன் எதிரொலியாக சுகாதார துறை துனை இயக்குனர் சரவணன் தலைமையில் சென்னையிலிருந்து வந்த குழுவினர் கடையநல்லூரிர் இக்பால் நகர் அட்டகுளம் தெரு ஆகிய பகுதிகளில் டெங்கு கொசு மருந்து அடிக்கும் பணியை தீவிரம் படுத்தினர்.

குறிச்சி சுலைமான்

Add Comment