பழ.கருப்பையா வீடு, கார் மீது மர்ம கும்பல் தாக்குதல்

pala_2716955f

அதிமுக முன்னாள் எம்எல்ஏ பழ.கருப்பையா வீடு மீது மர்ம கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியுள்ளது. இச்சம்பவத்துக்கு மதிமுக பொதுச் Doxycycline No Prescription செயலாளர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

வெள்ளிக்கிழமை நள்ளிரவு ஆட்டோவில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் பழ.கருப்பையா வீட்டின் மீது சரமாரியாக கற்களை வீசி தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. அவரது கார் மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிகிறது.

அண்மையில், பழ.கருப்பையாவை அதிமுக அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்குவதாக கட்சியின் பொதுச் செயலாளரான முதல்வர் ஜெயலலிதா. இதனையடுத்து, துறைமுகம் தொகுதி அதிமுக எம்எல்ஏ பதவியை பழ.கருப்பையா ராஜினாமா செய்தார்.

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்த பழ.கருப்பையா, அதிமுக ஆட்சியில் கவுன்சிலர் தொடங்கி அமைச்சர்கள் வரையில் லஞ்சம் வாங்கும் போக்கு அதிகரித்துவிட்டதாக குற்றம்சாட்டினார். அதிமுக அரசின் செயல்பாடுகள் மீதும், அக்கட்சித் தலைமை மீதும் கடும் விமர்சனத்தை முன்வைத்து வருவது கவனிக்கத்தக்கது.

வைகோ கண்டனம்:

முன்னாள் எம்எல்ஏ பழ.கருப்பையா வீடு மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் சனிக்கிழமை வெளியிட்ட கண்டன அறிக்கையில், “தமிழ்நாட்டில் இன்று நிலவி வரும் அரசாங்கத்தின் ஊழலைச் சுட்டிக் காட்டி உண்மைகளை எடுத்து வைத்ததால், துறைமுகம் சட்டமன்ற உறுப்பினராக இருந்த பழ.கருப்பையா கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். அவர் ஜனநாயக நெறி சார்ந்த முடிவெடுத்து சட்டமன்ற உறுப்பினர் பதவியை உடனே ராஜினாமா செய்தார்.

ஆனால், நள்ளிரவில் ஆளும் கட்சியினர் அவரையும், அவரது குடும்பத்தினரையும் தாக்கிட முயன்று, வீட்டுக்குள் இருந்த அவர்களை வெளியே வரச்சொல்லி கூச்சலிட்டவாறு வீட்டுக் கதவுகள், கண்ணாடி ஜன்னல்கள் மீது கற்களை எறிந்து உடைத்துள்ளனர்.

அவரது காரை உடைத்து நொறுக்கியுள்ளனர். அச்சில் ஏற்ற முடியாத வார்த்தைகளால் வசைபாடி மிரட்டிச் சென்றுள்ளனர்.

வேலூர் மாநகரில் அவர் தொடங்கி வைப்பதாக இருந்த தமிழ்ச் சங்க நிகழ்ச்சியில் கலந்துகொண்டால் அவர் உயிரோடு திரும்ப முடியாது, கொலை செய்து விடுவோம் என்று அச்சுறுத்தியதால் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.

எனவே பழ.கருப்பையாவின் உயிருக்கே ஆபத்து ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை எதேச்சதிகாரம் தலைதூக்கி வருகிறது.

பத்திரிகைகளை மிரட்டுவது, நியாயமான விமர்சனங்களுக்கும் அவதூறு வழக்கு போடுவது, குண்டர்களை ஏவி தாக்குதல் நடத்துவது வாடிக்கையாகிவிட்டது.

பழ.கருப்பையா என்ற ஒரு தனி மனிதர் மீது ஏவப்பட்ட இந்த வன்முறை எவர் மீதும் பாயும்.

ஜனநாயகம் அனுமதித்துள்ள அடிப்படை உரிமைகளான கருத்துச் சுதந்திரம், நடமாடும் உரிமை இவற்றுக்கெல்லாம் இந்த ஆட்சியில் பேராபத்து வளர்ந்து வருகிறது.

பழ.கருப்பையா புகார் கொடுக்கவில்லை என்றாலும், இந்த வன்முறையில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் உடனடியாகக் கைது செய்து, உரிய முறையில் வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிமுகவினரின் வன்முறைச் செயலுக்கு எனது பலத்தகண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்”

இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.

Comments

comments

Add Comment