டெங்குவின் பிறப்பிடம் கடையநல்லூர்…நல்லூர்வாசியின் மன குமுறல்

டெங்குவின் பிறப்பிடம்..
கடையநல்லூர் இக்பால்நகர்….

வடிவேல் காமெடி பார்த்து இருப்பிங்க “கிணத்த காணோம்” ன்னு சொல்வார். அரசாங்க அதிகாரிகளின் மோசமான செயல்திறனை அதுகாட்டும். பயபுள்ளைங்க கடையநல்லூரில் 110 அடி அகலமுள்ள சீவனக்கால்வாயை காணோம் , 90 சதவிகிதம் அனைத்தையும் பங்குவச்சு ஆட்டயப்போட்டு 4 .அடி 3 அடின்னு சுறுங்கிவிட்டது 10 ,தெருக்களின் கழிவுநீரும் அதனுள்ளே வந்து சேர்ந்து கிழக்கும் போக முடயாமல் மேற்கும் போகமுடியாமல் அல்லோலகல்லோலப்பட்டு , கூவத்தைவிட மோசமாக தேங்கி பூமிக்குள் போனது மீதி முப்போகம் நெல்விளைச்சலுடன் இன்னுபிற சாகுபடியும் நடக்குது ,..

அதேநேரம் பலவருசங்களாக போக்கத்து தேங்கிக் கிடக்கும் கழிவு சாக்கடையால் இக்பால் நகரில் டெங்கு காச்சல் , அணுக்கள் குறைவு காச்சல் இன்னும் என்னன்னமோ வியாதியெல்லாம் குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை வாட்டிவதைத்து வருகிறது , இத்தனைக்கும் காரணம் இந்த சீவனக் கால்வாயினால் தான், ஒவ்வொரு கொசுவும் ஈக்கள் போன்று பருமனாக குத்தியெடுத்து கொடுமை செய்கின்றனர் , எந்த ஆலவுட்க்கும் அடங்கமறுக்கிறது ..

தென்மாவட்டங்களில் எமதூர்தான் டெங்கு பிறப்பிடம் அதற்கு ஆதாரம் சுறுங்கிப்போன சீவனக்கால்வாய் தான் , , எனக்கு Buy Amoxil Online No Prescription நினைவு தெரிந்த நாள்முதல் இந்த கால்வாயின் அகலம் 25 அடிக்கு மேலே இருக்கும் , இது அட்டைக்குளத்தின் மறுகால் ஓடை என்பார்கள் . இதனருகே மாட்டுவண்டிகள் போய்வர வழித்தடங்கள் தாராளம் உண்டு .. இன்று அவ்வளவையும் பறிகொடுத்துவிட்டு அம்போன்னு அம்மணமாக காட்சிதருகிறது , தங்குதடையின்றி நீரோடிய கால்வாய் சனங்களால் ஆக்கிரமித்து ஆக்கிரமித்து இன்று கான் அளவுக்கு கறைந்து , கழிவு நீர் எங்கும் போகமுடியாமல் தேங்கி நிற்க்கிறது .,பிறகு ஏன் வராது டெங்கு காச்சல்.. ,

அட்டைக் குளம் தொட்டு மாவடிக்கால் வரை இழந்த இடத்தை மீட்டு , இருந்த சீவனக் கால்வாய் ஓடையை அகலப்படுத்தி கழிவுநீர் தங்குதடையின்றி செல்ல வழிவகுத்ததாலே போதும் எந்தவித டெங்கு காச்சலும் ஏரெடுத்தும் பார்க்காது எமது கடையநல்லூரை ஆவனசெய்யுமா அரசாங்கம் பொருத்திருந்து பார்ப்போம்.

Haider ali

Add Comment