கடையநல்லூரில் டெங்குக் காய்ச்சல்… வீடு வீடாக சென்று கலெக்டர் ஆய்வு!

கடையநல்லூரில் … வீடு வீடாக சென்று நெல்லை கலெக்டர் ஆய்வு!

IMG-20160203-WA0006

கடையநல்லூர்: பிப் 3 நெல்லை மாவட்டம் கடையநல்லுரில் டெங்குக் காய்ச்சல் பரவலை அடுத்து மாவட்ட ஆட்சித் தலைவர் கருணாகரன் டெங்கு கொசுப் புழுக்கள் உற்பத்தியாகிறதா என கடையநல்லூரில் பெரியதெரு , புதுத்தெரு ஆகிய பகுதிகளில் வீடு வீடாக சென்று தண்ணீர் தொட்டிகளில் ஏறி ஆய்வு செய்தார் அரசு மருத்துவமனையில் காய்ச்சலால் சிகிச்சை பெற்று வரும் நோய்யாளியிடம் குறைகளை கேட்டறிந்தார்

கடையநல்லூர்நகராட்சிக்குட்பட்ட பகுதியில் கடந்த 2009ம் ஆண்டு திடீரென பரவிய மர்ம காய்ச்சலால் 50க்கும் மேற்பட்டோர் மரணமடைந்தனர் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் டெங்கு காய்ச்சலுக்கு சிலர் உயிர் இழப்பது வாடிக்கையாகிவிட்டது. இந்த காய்ச்சல் பரவுவதை தடுக்க 2009ம் ஆண்டு புனே, பெங்களூரு ஆகிய நகரங்களிலிருந்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தினர் கடையநல்லூருக்கு வந்து பல்வேறு ஆய்வுகளை நடத்தினர். அத்துடன் தமிழகத்தின் பல பகுதிகளிலும் இருந்து ராட்சத கொசு ஓழிப்பு மெஷின் கொண்டு வரப்பட்டு நகர பகுதிகளில் கொசுக்குள் முற்றிலும் ஓழிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 7 நாட்களாக கடையநல்லூர் பகுதியில் 500க்கும் மேற்பட்டோர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கடையநல்லூர், தென்காசி , நெல்லை ஆகிய ஊர்களில் தனி யார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் ரத்தத்தில் உள்ள பிளட்லெட்ஸ் குறைவால் எதிர்ப்பு சக்தி குறைந்து காய்ச்சல் தாக்குவதாக கூறப்படுகிறது. இந்த காய்ச்சலால் பாதிக்கப்படும் மக்கள் கடையநல்லூர், தென்காசியில் இதற்கான உரிய சிகிச்சை இல்லாத நிலையில் மதுரை, நெல்லை ஆகிய நகரங்களுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. அங்கு நோயாளிகளின் ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவை பிரித்து ரத்தத்தில் விலை உயர்ந்த ஆண்டிபயாடிக் மருத்தை செலுத்த வேண்டி உள்ளதால் எனவே காய்ச்சலை தடுக்கவும், காய்ச்சலை பரப்பும் கொசுக்களை ஒழிக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவுயிட்டார் செய்தியாளர்களை சந்தித்த ஆட்சியர் தற்போது டெங்கு காச்சல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது விரைவில் முற்றாக டெங்கு கொசுக்கள் ஒழிக்கப்பட்டு காய்ச்சல் தடுக்கப்படும் மேலும் பொதுமக்கள் குடி தண்ணீரை சேமிப்பதால் டெங்கு கொசுக்கல் உற்பத்தியாகுவது தெரிகிறது எனவே தினசரி தாமிரபரணி குடி தண்ணீர் விட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் முன்னதாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பஜார் கிளை சார்பில் அதன் தலைவர் குறிச்சி சுலைமான் டெங்குவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க மெகா மருத்து முகாமை நடத்த வேண்டும் மற்றும் டெங்கு காச்சலுக்கு அரசு மருத்துவமனையில் தனி பிரிவை ஏற்படுத்த வேண்டும் தாங்களின் நேரடி கண்காணிப்பில் சுகாதாரதுறை தனி அலுவலரை நியமித்து டெங்கு கொசு ஒழிப்பு பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு கொடுத்தர் ஆய்வின் போது நகராட்சி மண்டல நிர்வாக இயக்குனர் (பொ)சிவசுப்பிரமணியன்சுகாதார பணி துணை இயக்குனர் டாக்டர் அருணாதேவி , தாசில்தார் நாகராஜன்,ஆனையர் Buy Doxycycline அய்யூப்கான் அரசு மருத்துவர் சண்முகையா, சுகாதார அலுவலர் ஜெயபால் மூர்த்தி, வட்டார சுகாதார அலுவலர் டாக்டர் ரவி,மாவட்ட பூச்சியல் வல்லுந‌ர் ராமலிக்கம்,அதிமுக பிரமுகர் பொய்கை மாரியப்பன், கிட்டு ராஜா,டாக்டர் சஞ்சீவி, ஆகியோர் உடன் இருந்தனர்.
-குறிச்சிசுலைமான்.

Add Comment