ஓடையில் மிச்சம் இருக்கிற 4,அடியையும் ஆட்டயப் போடும் மக்கள்

வாள் போய் கத்திவந்த கதை….!

நான் கடந்து போகும் ஒவ்வொரு முறையும்
உடைந்து போகிறது என் மனது கண்ணாடியாய்.

அதிகாரிகளை சந்தித்து கழிவுநீர் ஓடையின் நிலைகுறித்து எடுத்துக்கூறி , பலவருடங்களாக தேங்கிக் கிடக்கும் சாக்கடையை சுத்தம் செய்வதோடல்லாமல் அபகரிக்கப்பட்ட அரசு புறம்போக்கு நிலங்களை கையகப்படுத்தி பழையநிலைக்கு ஜீவனுள்ள கால்வாயாக அகலப்படுத்தி தங்கு தடையின்றி சாக்கடை கழிவுநீர் செல்ல வழிவகுத்து தாருங்கள் அதேநேரம் , அந்த சாக்கடை கழிவுநீரை பாசனத்திற்க்காக பயன்படுத்துவதை தடுத்து நிறுத்தி ,கழிவுநீரை கிழக்குநோக்கி செல்வதற்கும் ஆவனசெய்யுகள் என்று முறையிட்டுள்ளனர் சமூகஆர்வலர்கள் சிலர் ,.

அதுபோல் சுகாதார இன்மையாலும் கொசுக்களினாலும் பலவித நோய்நொடிகளாலும் முக்கியமாக டெங்கு போன்ற இன்னுபிற மர்மக்காய்ச்சலால் அவதிப்படும் கடையநல்லூர் மக்களுக்கு பேருதவியுமாகும் என்றும் கூறியுள்ளனர்.. அமைதியாக கேட்டறிந்த அதிகாரிகள் ஆவன செய்வதாக உறுதியளித்தவர்கள் , மறுநாள் JCP இயந்திரத்தை கொண்டுவந்து முறைப்படுத்தி கழிவுகளை அள்ளி அப்புறப்படுத்தாமல் குரிப்பிட்ட இடத்தில் பெயரளவிற்கு அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒருசில இடங்களில் கழிவுகளை அள்ளி அருகாமையிலேயே குவித்துவிட்டு பாசனத்திற்காக திறந்துவிடப்பட்ட ( சாக்கடை) இடத்தைமாத்திரம் அடைத்துவிட்டு சென்றுவிட்டனர்,..

மருநாள் அனைத்து கழிவுநீர் சாக்கடையும் முன்னெப்போதுமில்லாத அளவுக்கு கூடுதலாக நிறைந்து (சாக்கடை நீரானது) போவதற்கு இடமின்றி வீடுகளின் அடித்தள கல்வரிசை வழியாக தெருக்களில் கசிந்து நடைபாதை அனைத்தும் சாக்கடையும் சகதியாகி மக்களின் அன்றாட தேவைகள் அனைத்தும் போய்வந்து செய்யமுடியாமல் முடங்கிப் போயுள்ளது , காலைநேரத்தில் எல்லா வீட்டுவாசல் முன்பும் (குற்றால சீஸனில் மலை அடிவாரத்தில் நீர் கசிவதைப் போன்று) கசிவதை காணலாம் ..

FB_IMG_1454509972848

இளஞர்களோ மூக்கைப் பிடித்துக் கொண்டு கங்காரு போன்று தாவித்தாவி செல்லவேண்டிய கட்டாயம் , குழந்தைகள் மதரஸா போவதற்கும், பள்ளிக்கூடம் தொழுகைக்கு இன்னபிற அத்தியாவசியமான தேவைகளுக்கு போய்வரமுடியாமல் மக்கள் திணறி வருகின்றனர் . அதிலும் முதியவர்கள் பாடு படுமோசம் , . வாள் போய் கத்திவந்த கதையாக போச்சு ,.. இது அரசு அதிகாரிகளின் மெத்தனப்போக்கு என்று சொல்லாமல் வேறு என்னவென்று சொல்ல … , .இதுக்குமேலும் கொஞ்சங்கூட எண்ணமும் கவலையும் இல்லாமல் இறைப் பயமும் இலலாமல் நமது மக்களில் இன்னும் சிலர் ஓடையில் மிச்சம் இருக்கிற 4,அடியையும் அபகரித்து ஆட்டயப் போட அலையுதுகள் இந்த கொடுமையை எங்கபோய் சொல்ல …

ஒருவகையில் நாம் அரசு அதிகாரிகளை குறைகூறுவதில் அர்த்தமே இல்லைங்க Buy cheap Ampicillin , காரணம் ..
இருக்கிறவன் ஒழுங்காக இருந்தால் , சிரைக்கிறவன் செம்மையாக சிரைப்பான் .. என்ன நான் சொல்ரது சரிதானே …

Haider Ali

Add Comment