அதிக சம்பளம் வாங்கும் வெளிநாட்டவர்களை ஊருக்கு அனுப்பும் ஓமன்

ஓமனில் உள்ள நிறுவனங்கள் சிக்கன நடவடிக்கைகளில் ஈடுபடுவதால் அதிக சம்பளம் வாங்கும் வெளிநாட்டவர்களை ஊருக்கு அனுப்பி வைத்து வருகிறது என்று கூறப்படுகிறது.

சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. இதனால் எண்ணெய் வளமிக்க ஓமன் பாதிக்கப்பட்டுள்ளது. பட்ஜெட்டில் 3.3 பில்லியன்( ஓமனி ரியால்) பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக ஓமன் அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் பெட்ரோல் விலையை உயர்த்தியுள்ள அரசு, வெளிநாடுகளைச் சேர்ந்த பணியாளர்களின் விசாக்களை புதுப்பிக்கும் கட்டணத்தையும் உயர்த்தியுள்ளது.

இந்நிலையில் ஓமனில் உள்ள பல்வேறு நிறுவனங்கள் ஆள் குறைப்பு, சம்பள குறைப்பு உள்ளிட்ட சிக்கன நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. மேலும் அதிக சம்பளம் வாங்கும் வெளிநாட்டவர்கள் ஊருக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.

இது குறித்து வேலையை இழந்த வெளிநாட்டவர் ஒருவர் கூறுகையில், சிக்கன நடவடிக்கையால் என்னை வேலையை விட்டு செல்லுமாறு கூறிவிட்டார்கள். நான் இந்த நிறுவனத்தில் பல ஆண்டுகளாக வேலை செய்தவன் என்றார். ஊழியர்களுக்கு அளிக்கப்படும் போனஸ் 50 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Cialis No Prescription style=”text-align: justify;”>oneindia

Add Comment