யார் இந்த ரஜினி..?

யார் இந்த ரஜினி..?
நாட்டிற்காக செக்கிழுத்த செம்மலா..?
அல்லது, வறுமையிலும் முறுக்கிய மீசையோடு ‘ஜாதிகள் இல்லையடி பாப்பா’ என பாடிய பாரதியா..?

யார் இவர்..?
“லிங்கா” படப்பிடிப்பு முழுவதையும் கர்நாடகாவில் நடத்தி, கன்னடவரை தேடிப்பிடித்து தயாரிப்பாளராக்கி, வசூலை மட்டும் தமிழனிடம் செய்பவர்.
இன்றைய நிலவரப்படி தமிழ் நாட்டில் சராசரியாக ஒரு “லிங்கா” திரைபட நுழைவுச்சீட்டு ரூ.250 என விற்கப்படுகிறது. இது ஒரு சராசரி ஏழை இந்தியனின் 5 நாள் வருமானம். பணம் கொழுத்தவன் பார்க்கட்டும், ஆனால் அவர்கள் யாரும் ரசிகர்கள் என்ற பெயரில் வெறிபிடித்து அலைவதில்லை.
இப்படி தன் குடும்பத்தை கவனிக்காமல் கூலி வேலை செய்து கிடைக்கும் பணத்தை இந்த கூத்தாடியின் பின் அலைந்து வீணாக்கும் தமிழனே
இந்த கூத்தாடி வரலாறுதான் என்ன?
பொது இடங்களில் புகைபிடிப்பதை ஆண்மை எனவும், சாராயம் குடிப்பது வீரத்தின் அடையாளம் எனவும் தன் படங்களில் காட்டியதோடு, தன் வாழ்கையிலும் கடைபிடித்து ஒரு தலைமுறை இளைஞர்களையே குட்டி சுவராக்கி கெடுத்த கூத்தாடிதானே இவர்.
இவரின் பின்னால் ‘விசிலடிச்சான் குஞ்சுகளாக’ வெறி பிடித்து அலைந்த ரசிகர்களுக்காக இதுவரை ஒரு துரும்பையாவது அசைத்திருப்பாரா?
தனி அறையில் உட்கார்ந்து பேட்டி என்ற பெயரில் இவர் பேசும் வீர வசனங்களை பார்த்து, படத்தில் ஒரே அடியில் எதிரிகளை வீழ்த்தி கதாநாயகியை காப்பாற்றும் போல அரசியலுக்கு வந்து நாட்டையும், Buy Levitra நமமையும், காப்பாற்றுவார் என 20 ஆண்டுகளுக்கு முன் தமிழ்மக்கள் ஏமாந்து காத்திருந்தது உண்மைதான்.
பிறகுதானே தெரிந்தது அரசியல் என்ற வார்தையை சுயநலமாக தன் படங்களை பெரிய அளவில் வியாபாரம் ஆவதற்க்காக சமயம் பார்த்து பயன்படுத்தும் ஒரு கோழை இந்த ரஜினி என்று.
அய்யா ஆட்சியில் இருந்தால் அவர் வீட்டு வாசலுக்கும், அம்மா ஆட்சியில் இருந்தால் ஜெயா ஸ்டுடியோ வாசலுக்கும் ஓடி இருவரையும் சாமர்தியமாக ஏமாற்றும் அட்டகத்தி தானே இந்த ரஜினி.
பணம் கொடுத்து படத்தை பார்த்தோமா, பின்னால் ஒட்டிய தூசிய தட்டிவிட்டு எழுந்து போனோமா என்றில்லாமல், முப்பது கோடிக்கும் மேலான மக்கள் இரவு உணவிற்க்கு வழியில்லாமல் பசியோடு தினமும் தூங்கும் இந்த நாட்டில், ஒடிவிளையாட வேண்டிய வயதில், தங்கள் பிஞ்சு கைகளால் கல்லு உடைக்கவும், மண்சுமக்கவும் பசித்த வயிற்றோடு வேலைக்கு செல்லும் லட்சகணக்கான சிறு குழந்தைகள் உள்ள இந்த மண்ணில், நல்ல உணவை கண்ணால் கூட பார்த்திராத ஏழைகள் பெரும்பாண்மையாக வழும் ஒரு தேசத்தில், கூத்தாடியின் படத்திற்க்கு பால் அபிஷேகமும் கற்பூர ஆரத்தியும் காட்டும் இந்த முட்டாள் இளைஞர்களை சுட்டு தள்ளினால்தான் என்ன..?
– யாரோ.

Add Comment