தான் செய்த பணிகளை மக்களிடம் பட்டியலிட்ட கடையநல்லூர் கவுன்சிலர்

தான் செய்த பணிகளை மக்களிடம் பட்டியலிட்ட கடையநல்லூர் கவுன்சிலர்.

கடையநல்லூர் மதினா நகர் 29- வது வார்டுக்கு கவுன்சிலராக இருக்கிறார்  SDPI கட்சியின் buy Lasix online நெல்லை மேற்கு மாவட்ட பொருளாளருமான S. நயினா முஹம்மது (எ) கனி .

இன்று மதினா நகர் ஜிம்ஆ தொழுகைக்கு பிறகு மக்களை ஒன்று கூட்டி தான் இதுவரை செய்த பணிகளை விரிவாக விளக்கினார் கவுன்சிலர் கனி .

இதோ அவரின் பள்ளியில் சொன்ன விஷயங்கள்…

இதுவரை நகர சபையில் பல்வேறு வாதங்களிலும், மக்களுக்காக பல போராட்டங்களிலும் ஈடுபட்டியிருக்கிறேன். இதன் காரணமாக அரசிடம் இருந்து கிடைக்க கூடிய நன்மையான பல காரியங்களை மக்களுக்கு செய்துயிருக்கிறேன் .எனது வார்டை பொருத்தவரை 20 வதுக்கு மேற்பட்ட தெருக்கள் இருக்கின்றன ஆனால் இதில் 8 தெருக்கள் மட்டுமே அங்கிகாரமான தெருக்கள் என்பது குறிபிடதக்கது ஆனால் நான் எல்லா தெருக்களுக்குமே அரசின் திட்டத்தை கொண்டு சென்றுயிருக்கிறேன் ஒரு சில தெருக்கள் விடுபட்டியிருக்கலாம் அதற்கான முயற்ச்சி எடுத்துக் கொண்டுயிருக்கிறேன் .

கடையநல்லூர் நகராட்ச்சியை பொருத்த வரைக்கும் நான் லஞ்சமாக ஒரு பைசா கூட வாங்கியது கிடையாது லஞ்சம் வாங்காத கவுன்சிலர் என்பது எல்லா அதிகாரிகளுக்கும் தெரியும்.

மக்களுக்கு பெரிதும் பாதிக்க கூடிய ரோடு எண் 11 என்ற விலாசத்தை மாற்றும் முயற்சியில் சுமார் மூன்று ஆண்டுகள் ஈடுபட்டு வருகிறேன் இது மாறும் பட்சத்தில் வீட்டு வரி ,பத்திரத்திற்க்கான தொகை மதிப்பு விலாச குழப்பங்கள் போன்ற பிரச்சனைகள் நீங்கும் ஆகவே நீங்கள் அனைவரும் எனக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என எடுத்துரைத்தார்.

இதனை தொடர்ந்து பொதுமக்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார்.FB_IMG_1454691122675

Comments

comments

Add Comment