மணமகன், மணமகள் நெற்றியில் ‘அம்மா ஸ்டிக்கர்’: இது புதுசு!

மணமகன், மணமகள் நெற்றியில் ‘அம்மா ஸ்டிக்கர்’: இது புதுசு!

அதிமுக அரசின் ஆட்சிக்காலம் முடிய இருக்கும் நிலையில், தங்களுடைய ஐந்தாண்டு ஆட்சியை விளம்பரப்படுத்திக் Amoxil online கொள்ளும் வகையில் எந்த நிகழ்ச்சி நடந்தாலும் அதில் அதிமுக பொதுச் செயலாளரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதாவின் படத்தை அச்சிடுவது வாடிக்கையாகிவிட்டது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை உடுமலைப் பேட்டையில் அதிமுக சார்பில் ஜெயலலிதாவின் பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில் ஒரேமேடையில் 68 திருமணங்கள் நடைபெற்றன. இந்த 68 ஜோடிகளின் நெற்றியிலும் ஜெயலலிதாவின் படம் பொருத்தப்பட்ட கயிறு கட்டப்பட்டிருந்தது.

இது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகி வருகிறது.

நரேன் ராஜகோபாலன்

வழங்குகிறோம் நெற்றி ஸ்டிக்கர்.

இது நெற்றி சுட்டியை விட அழகானது;
அலங்காரமானது;
அற்புதமானது;
அபாரமானது;
அசாத்தியமானது.

எல்லாவற்றையும் விட இது அம்மாவே உங்கள் நெற்றியில் அமர்ந்து உங்களை வாழ்த்தும் அபூர்வமானது. இதை விட பெரும் பேறு அற்பப் பதர்களான உங்களுக்கு வேறென்னக் கிட்டும் ?

இவண்
அம்மா ஸ்டிக்கர் புரட்சிக் கழகம்

பர்கிட் அலாவுதீன்

அடே உங்க ஸ்டிக்கர் ஓட்டுற கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையா.

Add Comment