கடையநல்லூரில் நடந்த உண்மை செய்தியும்…ஊடகத்தின் பொய்யான செய்தியு

கடையநல்லூரில் நடந்த உண்மை செய்தியும்…ஊடகத்தின் பொய்யான செய்தியும்…

  
ஒண்ணுமே இல்லாத ஒரு செய்தியை ஊதி பெரிதாக்குவது இந்த ஊடகத்திற்கு கைவந்த கலை.
  
இரண்டு தினங்களுக்கு முன்பு கடையநல்லூரை சேர்ந்த சேக் உதுமான் என்ற நபர் வெளிநாட்டு பணம் வைத்திருப்பதாக கடையநல்லூர் அருகே உள்ள குத்துக்கல் வலசை எனும் இடத்தில் போலிசாரால் விசாரிக்கப்பட்டு பின்பு மதுரை அமலாக்க பிரிவு அதிகாரிகளால் விசாரிக்கப்ட்டார்.
  
இதில் பணம் வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டுள்ள  நபர் ஒரு அப்பாவி. இவர் கடையநல்லூரில் இயங்கும் மணி எக்சேஞ்சில் சமீபத்தில் தற்காலிகமாக வேலை செய்து வருகிறார். பணத்தை கொண்டு ஒருவரிடம் கொடுப்பதற்காக தன்னுடைய முதலாளி  சொன்னதன் பேரில்  அவர் இதனை எடுத்து சென்றுள்ளார்.
அதில் எவ்வளவு இருப்பது என்பது கூட அவருக்கு தெரியுமா என்பது கூட தெரியாது.
  
இந்த சூழ்நிலையில் கைது செய்யப்பட்டு மதுரை அமலாக்க பிரிவு அதிகாரிகளால் விசாரணை செய்யப்பட்டது.இதில் சேக் உதுமான் மேல் எந்த தவறும் இல்லையென நீரூபணம் ஆனதால், எந்தவித நிபந்தையும் இல்லாமல் அவர் உடனடியாக விடுதலை செய்யபட்டார்.
இதுதான் உண்மையான நடந்த செய்தி. இப்பொழுதுதான்  சேக் உதுமான் என்ற நபரிடம் பேசினோம், நடந்ததை விரிவாக எடுத்துரைத்தார்.
  
ஆனால் இது பற்றி மாலை மலர் பத்திரிகையில் பல்வேறு நடக்காத விஷயங்களை எல்லாம் குறிப்பிட்டு ஒரு பரபரப்பை கிளப்பி விட்டுள்ளனர்.
இது ஒருபுறம் இருக்க.இன்னொரு விஷயம் இதில் நடந்துள்ளது.அதையும் கண்டிப்பாக அலச வேண்டும்.
  
கடையநல்லூர் நகராட்சி சேர்மனின் கணவர்  சேக் உதுமான் என்ற சேஹனா வும் இதில் சிக்க வைத்துள்ளனர் இந்த பத்திரிகை .
  
இந்த செய்தி உண்மைதானா  என்பதை கண்டறிய கடையநல்லூர் நகராட்சி சேர்மனின் கணவரும் கடையநல்லூர் தி.மு.க வின் நகர  செயலாளருமான சேஹனாவிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினோம்.
  
அவர் கூறிய பதிலில் இருந்து..
  
என்னை கடையநல்லூர் காவல் துறையினர் கைது செய்ததாக பத்திரிகையில் செய்தி வெளியிட்டுள்ளனர்.ஆனால் நான் இங்கு தான் இருக்கிறேன் கைது செய்யப்படவும் இல்லை, இது சம்பந்தமாக காவல் துறை என்னை விசாரிக்கவும் இல்லை.எனக்கும் இந்த செய்திக்கும் துளி அளவு கூட சம்பந்தம் இல்லை.மேலும் கைது செய்யப்பட்ட நபருக்கும் எனக்கும் குடும்ப ரீதியான எந்த உறவுமுறையும் இல்லை என்பதை குறிபிட்டார்.
  
நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் கடையநல்லூர் தொகுதிக்கு தி.மு.க சார்பில் வேட்பாளாராக விருப்ப   மனுதாக்கல் செய்துள்ளேன். இதனை கண்டு சகிக்கமுடியாமல் என்னுடைய அரசியல் எதிரிகளின் சூழ்ச்சிதான் இது.
  
என்னை பற்றி அவதூறாக எழுதிய பத்திரிகை மீது நடவடிக்கை எடுக்க கோரி கடயநல்லூர் காவல் நிலையத்தில் எங்கள் தொண்டர்களுடன் சென்று உள்ள புகை படத்தை அனுப்பி வைக்கிறேன் என்றார்.
  
என்னுடைய அரசியல் எதிரிகளில் சூழ்ச்சிதான் இது.மேலும் கடையநல்லூரில் வருகின்ற தேர்தலில் தி.மு.காவை இந்த மாதிரியான பொய் பிரச்சாரத்தின் மூலமும் அவதூறான செய்தியின் மூலமும் வீழ்த்தி என்னையும் பதவியை விட்டு அகற்ற செய்யும் உள்நோக்கம் கொண்ட செய்திதான் இது என்று குறிபிட்டார்.
12669723_216926168653256_2601733743691485493_n
  
1bbf1307-1e1c-485e-9ec0-92e71aa2f5e9
கடையநல்லூர் செய்தியாளர்களே…
  
கடையநல்லூரை மைய்யபடுத்தி அனைத்து பத்திரிகை சார்பிலும் ஒவ்வொரு செய்தி நிறுவனத்தின் சார்பிலும் செய்தியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
  
இவாறு பணியாற்ற கூடிய  செய்தியாளர்கள் கடையநல்லூரில் நடக்கும் செய்திகளை தனக்கே உரித்தான பாணியில் செய்தி வெளியிடுவது வழக்கம்.
  
அப்படி வெளியிடப்பட்ட செய்திதான் இந்த செய்தி.
இதில் எவ்வளவு உண்மைக்கு புறம்பான விஷயங்கள் உள்ளன பாருங்கள்.AjbX0Oich0xtoMBGhn24NLNXxJwjQ87FB6FFqntqGzab
  
1. கைது செய்யப்பட்ட நபர் அ .தி.மு.க கவுன்சிலர் என்பது பத்திரிகையின் செய்தி ஆனால் உண்மையில் அவர் கவுன்சிலர் கிடையாது.
2.கடையநல்லூர் சேர்மனின் கணவர் சேக் உதுமான் கைது…இதுவும் தவறான செய்தி.அவர் கைது செய்யப்படவில்லை.
மிக முக்கியமான விஷயம் என்னவென்றால்…
  
இந்த பணம் தீவிரவாதிகளுக்கு சப்ளை செய்யபடுகிறதா என போலிஸார் விசாரணை.
  
முஸ்லீம் ஒருவர் கைது செய்யபட்டால் தீவிரவாதிகள் என்ற வார்த்தையை இந்த ஊடகங்களுக்கு போடாவிட்டால் அந்த செய்தி முழுமை பெறாது என்பது அவர்களின்  எண்ணம்.
  
 பத்திரிகை நண்பர்களே…

  

சமுதாயத்தில் நடக்கும் அவலங்களை எழுதுங்கள். பசி பட்டினியால் சாவில் விழிம்பில் போராடும் விவசாயியை பற்றி எழுதுங்கள்.கல்வியின் முக்கியத்துவத்தையும், பள்ளி கல்லூரிகளில் நடக்கும் கொடுமைகளையும் பற்றி எழுதுங்கள்.

  
அரசாங்கத்தில் நடக்கும் ஊழலை பற்றி எழுதுங்கள். மக்கள் அன்றாடம் உண்ணும் உணவுகளில் நடக்கும் கலப்படத்தை பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு தரும் விதமாக செய்தியை எழுதுங்கள்.
  
உங்களின் கற்பனை மற்றும் பழிவாங்கும் எண்ணத்தால் தவறு செய்யாத Buy cheap Levitra நபரை பழிவாங்க உங்கள் ஊடகத்தை பயன்படுத்தாதீர்கள்.
பிடிபட்ட நபர் எந்த தவறும் செய்யாமல் விடுதலை  செய்யபட்டார் என்ற செய்தியையும் நகராட்சி சேர்மன் கைது செய்யப்படவில்லை என்ற செய்தியையும் வெளியிடுமா பத்திரிகை?

  

பொறுத்திருந்து பாப்போம்.

  
இன்று பல்வேறு செய்திகள் இணையதளங்களிலும் வாட்சப்பிலும் பரப்பி வருகின்றனர்.இதில் எது உண்மை எது பொய் என்பது கூட மக்களால் கணிக்க முடியவில்லை.
  
பத்திரிக்கைகள் வெளியிடும் செய்திகளை அப்படியே மக்கள் தனக்கு தெரிந்தவர்களிடம் பகிர்ந்து கொள்கிறார்கள்.
ஒவ்வொரு செய்திக்கு பின் நடந்த உணமையை தெரிந்து வெளியிடுங்கள் பத்திரிகை நண்பர்களே…
  
வாழ்க மனித நேயம்…

Add Comment