மார்ச் 12, 13 ஆம் தேதிகளில் வேலைவாய்ப்பு முகாம்

திருச்சி காவேரி மகளிர் கல்லூரியில் மார்ச் 12, 13 ஆம் தேதிகளில் வளாக நேர்காணல் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து பாரதிதாசன் பல்கலைக்கழகப் பதிவாளர் த. ராமசாமி தெரிவித்திருப்பது:

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் பல்கலைக்கழக – தொழிலகக் கூட்டு நடவடிக்கை மையம், சென்னை டாடா கன்சல்டன்சி நிறுவனம் (டி.சி.எஸ்.) இணைந்து மார்ச் 12, 13 ஆம் தேதிகளில் வேலைவாய்ப்பு முகாமை நடத்தவுள்ளன. இந்த முகாமில் இப்போது இளநிலைப் பட்டப் படிப்பில் இறுதியாண்டு பயிலும் அரியர் இல்லாத மாணவர்களும், 2010 ஆம் ஆண்டில் பட்டம் பெற்றவர்களும் கலந்து கொள்ளலாம்.

இதில் பங்குபெறும் நிறுவனம் 500 பணியிடங்களுக்காக Buy cheap Viagra இந்தப் பல்கலைக்கழகத்துக்கு உள்பட்ட தகுதியான மாணவர்களுக்கு வாய்ப்பு அளிக்கிறது.

தேர்வு பெறாதவர்களுக்கு டாடா கன்சல்டன்சி நிறுவனம் இலவச பயிற்சி அளிக்கவுள்ளது. இதில் வேலைவாய்ப்பு இல்லாத எஸ்.சி., எஸ்.டி. பட்டதாரிகள், மாணவர்களுக்கு இந்த நிறுவனம் ஆங்கில மொழித் தொடர்புத் திறன், வேலைவாய்ப்பு பெறுவதற்கான அடிப்படை பயிற்சிகளை 20 நாள்களுக்கு அளிக்கவுள்ளன.

பயிற்சி முடிவில் தொடர்ந்து பங்கேற்றவர்களுக்கு அந்த நிறுவனம் சான்றிதழ் வழங்கவுள்ளது. மேலும், இதில் பங்கேற்றவர்கள் சென்னை அல்லது பெங்களூரில் உள்ள டாடா கன்சல்டன்சி நிறுவனத்தில் உடனடியாக எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் வேலைவாய்ப்பு பெற வாய்ப்புள்ளது. இந்தப் பயிற்சி முகாமுக்கான தேதியை டாடா கன்சல்டன்சி நிறுவனம் பின்னர் அறிவிக்கும். நிறுவன சமூக பொறுப்புத் திட்டத்தின் கீழ், இந்தப் பயிற்சியை டாடா கன்சல்டன்சி

நிறுவனம் மேற்கொள்ளவுள்ளது’ என்றார் ராமசாமி.

Add Comment