கடையநல்லூர் முன்னாள் காவல் ஆய்வாளரை போனில் மிரட்டிய அதிமுக பிரமுகர்

12728927_854165748026070_6779242188420506451_n

கடையநல்லூரை தொடர்ந்து களியக்காவிளையிலும் தொடரும் அதிரடி நடவடிக்கை ஆளும் கட்சிக்கு கொஞ்சமும் அசராத இன்ஸ்பெக்டர் சாம்சன்….

தேசிய நெடுஞ்சாலையில் அனுமதியின்றி வைக்கப்பட்ட ஜெ. பேனரை அகற்றிய போலீஸ் இன்ஸ்பெக்டரை மிரட்டும் அதிமுக ஒன்றிய செயலாளர்:

”என்னை உன் கட்சிக்காரன்னு நெனைச்சியா? வந்து பாருடா போலீஸ் ஸ்டேசனுக்கு..” மிரட்டலுக்குப் பணியாத
குமரி மாவட்டம் களியக்காவிளை போலீஸ் இன்ஸ்பெக்டர் சாம்சன்..

களியக்காவிளையில் நெடுஞ்சாலைகளில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த முதல்வர் ஜெயலலிதாவின் பேனரை காவல்துறையினர் அகற்றியதால், ஆத்திரம் அடைந்த அதிமுக ஒன்றிய செயலாளர் கே.ஜி.உதயகுமார், களியக்காவிளை இன்ஸ்பெக்டர்  சாம்சனை ஒருமையில் பேசியுள்ளார். இவரது இந்த பேச்சு தற்போது வாட்ஸ் அப்பில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதாவின் பிறந்த நாள்,  வரும் 24-ம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இதையடுத்து, அதிமுகவினர் மாநிலம் முழுவதும் பல்வேறு நலத் திட்டங்களை வழங்கி வருவதோடு, இப்போதே சாலைகளில் ஆங்காங்கே சாலைகளில் பேனர்களை வைத்து அமர்களப்படுத்தி Buy Viagra Online No Prescription வருகின்றனர்.

இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளையில் உள்ள மேல்புறம் ஒன்றிய கழக செயலாளர் கே.ஜி.உதயகுமார், ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி களியக்காவிளை நெடுஞ்சாலைகளில் பேனர்களை வைத்து அமர்களப்படுத்தினார். இதனிடையே, அனுமதியில்லாமல் பேனர் வைத்ததாக கூறி, களியக்காவிளை இன்ஸ்பெக்டர் சாம்சன் தலைமையில் காவல்துறையினர் ஜெயலலிதாவின் பேனர்களை அகற்றினர்.

இந்த தகவல் அறிந்த ஒன்றிய செயலாளர் உதயகுமார், இன்ஸ்பெக்டர் சாம்சனை போனில் தொடர்பு கொண்டு ஒருமையில் பேசியதோடு, மிரட்டல் விடுத்துள்ளார். அவரது இந்த மிரட்டல் ஆடியோ தற்போது வாட்ஸ் அப்பில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த இன்ஸ்பெக்டர் கடையநல்லூரில் பணியாற்றியவர். அந்த சமயத்தில் சாலையோரங்களில் ஆயிரக்கணக்கான மரக்கன்றுகளை நடவு செய்து மக்களின் பாராட்டைப் பெற்றவர்…

Comments

comments

Add Comment