இந்தியாவில் இருக்க நான் விரும்பவில்லை என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி

இந்தியா சாதி வெறி பிடித்த நாடு, இந்தியாவில் இருக்க நான் விரும்பவில்லை என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கர்ணன் சென்னையில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

முன்னதாக,நீதிபதி கர்ணணுக்கு எந்த அலுவல்களும் கொடுக்க கூடாது என உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டிருந்தது.

நீதிபதி கர்ணண் தாமே முன்வந்து buy Doxycycline online பல்வேறு உத்தரவுகள பிறப்பிப்பதாக உயர்நீதிமன்ற பதிவாளர் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டார். இதையடுத்து நீதிபதி கர்ணணுக்கு எந்த ஒரு நீதிமன்ற அலுவல்களும் கொடுக்க வேண்டாம் என்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் கர்ணண் தரப்பில் ஆஜராகி வாதாடலாம் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்நிலையில், இது குறித்து சென்னையில் பேட்டியளித்த நீதிபதி கர்ணன், தன் மீதான குற்றச்சாட்டுக்களை நாடாளுமன்றத்தில் சந்திக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

Add Comment