அம்மா குடிநீர்.. இலவசமா? மோசடியா?

அம்மா குடிநீர்.. இலவசமா?மோசடியா?மக்களே!!

உங்களுடைய வரிப்பணத்தைக் கொடுத்து நீர் சுத்திகரிக்கும் கருவியை வாங்கி, உங்களுடைய வரிப்பணத்தில் பராமரித்து, உங்களுக்கு இலவசமாகத் தருகிறார்களாம். குழாய் நீரிலிருந்து, சுத்திகரிக்கப்பட்ட நீருக்கு ஏழை எளிய மக்களைப் பழக்கி, விரைவில் இக்கருவியைக் கட்சிக்காரர்களுக்கு ஏலத்தில் விட்டு,இந்நீருக்கு விலை நிர்ணயித்து விடுவார்கள். பன்னாட்டு நீர்க் கொள்ளையர்களிடம் கையூட்டு பெற்றுக்கொண்டு, அவர்களின் இலாப வெறிக்கு, சொந்த மக்களைப் பலியிடும் இந்திய தேசிய, திராவிட அரசுகள்!

============சில பல ஆண்டுகளுக்கு முன் பைசா காசு செலவு செய்யாமல்,சுத்தமான கிணற்று நீரை, ஊற்று நீரைப் பருகிவந்தோம்.

இப்போது ஒரு போத்தல் குடிநீரை 10 ரூபாய்க்கு அளித்துவந்த அம்மாவின் அரசு,ஏழை எளிய மக்களின் வரிப்பணத்தில் வாங்கப்பட்ட கருவியைக்கொண்டு சுத்திகரிக்கப்பட்ட நீரை, இலவசம் என்று பொய் சொல்லி அம்மா குடிநீர் என்ற பெயரில் தருகிறது அய்யாவின் அரசும் இதையேதான் செய்யும்.

கிணற்று நீரும், ஊற்று நீரும் வற்றிப்போனதற்கும், மாசானதற்கும் யார் காரணம்.?

நீரின் தூய்மையைக் காக்கும் நீர்நிலை பராமரிப்பு, பொதுசுகாதார வடிகால் திட்டங்களைச் சரியாகச் செயல்படுத்த வக்கற்ற அரசு, ஆலை முதலாளிகள் கொள்ளை இலாபம் ஈட்ட, நிலத்தடி நீரை கணக்கின்றி கொள்ளையடிக்க அனுமதித்த,ஆலைக்கழிவுகளை ஆறுகளில் விட அனுமதித்த அரசுகள்தானே காரணம் ..

கையூட்டுக்காக நீரை மாசாக்கிய கட்சியினர், சுத்தமான நீர் அளிக்கிறேன் என்று Ampicillin No Prescription சொல்லி அதிலும் காசு பார்க்கிறார்கள்..முதலாளிகளுக்கும், அரசியல் கட்சியினர்க்கும், எங்கும் இலாபம்.. எதிலும் இலாபம்.

அம்மா குடிநீர் சாதனையா? வேதனையா?

Add Comment