கடையநல்லூரை மிரட்டும் டெங்குவை ஒழிக்க தவ்ஹீத் ஜமாஅத் தீவிரப் பிரச்சாரம்

Aqy9Zom9D-iqMODG-KSs8ur1ka1QJmgm9T8oYMJ5FCmT

AupLznxgPiufgPUkjMJYW0PnOZLeoNADUNMBpjocVa33கடையநல்லூரை மிரட்டும் டெங்குவை ஒழிக்க தவ்ஹீத் ஜமாஅத் தீவிரப் பிரச்சாரம்

கடையநல்லூரில் டெங்கு காய்ச்சலால் கல்லூரி மாணவன் முகம்மது தமீம் மரணத்தை தொடர்ந்து தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் மிரட்டும் டெங்குவை ஒழிக்க மார்ச் 1 முதல் 15 வரை கடையநல்லூரில் வீடு வீடாக சென்று கொசு ஒழிப்புப் பணியை தீவிரப் படுத்துவது மற்றும் சுத்தம், சுகாதாரம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்வது என்று (27/2/16) அன்று மாலை 6 மணிக்கு பஜார் கிளையின் புதிய மர்கஸில் (அலுவலகம்) மாவட்ட தலைவர் பைசல் தலைமையில் நடைபெற்ற அனைத்து கிளை நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இந்த கூட்டத்தில் மாநிலம் மற்றும் மாவட்ட, கிளை நிர்வாகிகள் அப்துன்நாசர், தாஹா, ஜாகீர் சுலைமான், அவ்வாபிள்ளை மைதீன், ஜப்பார், பாதுஷா, சிராஜ், முஜாஹித் ஆகியோர் கலந்து கொன்டனர்.

கடந்த 2009 ஆம் ஆண்டுக்கு பிறகு தமிழகம் முழுவதும் பரவலாக பரவிய டெங்கு காய்ச்சல் அடுத்தடுத்த வருடங்களில் பல்வேறு பகுதிகளிலும் கட்டுப்பாட்டுக்கு வந்துவிட்டது. ஆனால் கடையநல்லூர் கீழ்ப்பகுதியில் மட்டும் இந்த காய்ச்சலின் வீரியத்தை கட்டுப்படுத்த இயலாமல் மாவட்ட நிர்வாகம் திணறி வருகின்றது. அரசு மற்றும் நகராட்சி நிர்வாகம் இதுவரை எடுத்த எந்த முன்னெச்சரிக்கை மற்றும் தற்காப்பு, தடுப்பு நடவடிக்கைகளும்பயனளிக்கவில்லை.

சுற்று வட்டார பகுதிகளில் டெங்குவின் சுவடே தெரியாமல் மாறிப்போன நிலையில், கடையநல்லூரில் மட்டும் இந்த காய்ச்சலின் வீரியம் கூடுவதற்கும், குறையாமல் இருப்பதற்கும் காரணம்தான் என்ன? சுகாதார கேடுதான் காரணமா? சாக்கடை பராமரிப்பு சரியில்லை என்பது காரணமா? பாதுகாப்பு இல்லாத குடிநீர் வழங்குவது காரணமா? கொசு ஒழிப்பு மருந்தின் வீரியமிண்மை குறைபாடுகளா? இதில் எவை சரியான காரணம்? என கடையநல்லூர் நகராட்சி ஆணையர், நகராட்சி தலைவர், சுகாதாரத்துறை அதிகாரிகள், தனியார் மருத்துவர்கள் ஆகியோரை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் நேரில் சந்தித்து விளக்கம் கேட்டனர். இதன் எதிரொலியாக இக்பால் நகர் வாட்டர் டேங்கினை உடனடியாக சுத்தம் செய்ய நகராட்சி நிர்வாகம் உத்தரவு இட்டது. மேலும் சிறிய ஊர்களை காட்டிலும் கடையநல்லூர் கழிவுநீர் ஓடைகள் ஒன்றும் மோசமானவை இல்லை. சுகாதாரக்கேடு மட்டுமே காரணம் என்றால், டெங்கு மட்டுமல்லாமல் பல நோய்களின் இருப்பிடமாக கடையநல்லூர் மாறி இருக்க வேண்டும்.

ஆனால் அதிர்ஷ்டவசமாக டெங்கு தவிர்த்த மிகப்பெரிய நோய்கள் எதுவும் இங்கே இல்லை. மிக சாதாரணமாக பரவக்கூடிய மலேரியா, டைஃபாய்டு போன்ற நோய்கள் கூட கட்டுக்குள் இருக்கும் நிலையில் டெங்கு மட்டும் கடையநல்லூரை மிரட்டுகிறது. இதை சிந்தித்தாலே நிச்சயமாக சுகாதாரக்கேடு, கழிவுநீர் வடிகால் பராமரிப்பு காரணம் அல்ல என்பது விளங்குககிறது.

திடீரென ஏற்பட்ட இயற்பியல் மாற்றம் என்ன? ஒவ்வொரு ஆண்டும் இந்த நோய்க்கான அடிப்படை ஆணிவேர் எங்கே இருந்து நீள்கிறது என்பது கண்டறியப்படவேண்டிய முதன்மையான விசயம். இதற்காக வல்லுநர்கள் அடங்கிய மருத்துவ ஆய்வுக் குழுவை கடையநல்லூரில் களமிறக்க மத்திய, மாநில அரசு முன்வர வேண்டும்.

Cialis online justify;”>இதற்காக தெரு வாரியாக வீடு வீடாக டெங்குவால் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் பட்டியல் மற்றும் உயிரிழந்தோர் எண்ணிக்கையை துல்லியமாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கணக்கெடுக்கும். ஆங்காங்கே மாதிரிகளை சேகரித்து நோய் பரவும் சரியான காரணத்தை கண்டறிந்து பிரச்சனைக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்க தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இந்த பிரச்சினையை கையில் எடுத்து தீவிர பிரச்சாரம் செய்ய இருக்கிறது. இந்த கோரிக்கையை வலியுறுத்தி மிகப்பெரிய மக்கள் திரள் ஆர்ப்பாட்டங்களை நடத்தி அரசாங்கத்தின் செவிகளில் பிரச்சனையின் தீவிரத்தை கொண்டு செல்ல இருக்கிறது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத். டெங்குவால் உயிர் பிரிவதை இனியாவது தடுப்போம்!

-குறிச்சி சுலைமான்

Comments

comments

Add Comment