கலாமின் நினைவில் தோன்றிய தமிழகத்தை உருவாக்க புதிய கட்சி தொடக்கம்!

கலாமின் நினைவில் தோன்றிய தமிழகத்தை உருவாக்க புதிய கட்சி தொடக்கம்!

 a2

அப்துல்கலாம் நினைவில் தோன்றிய பொன்னான தமிழகத்தை உருவாக்க, அவரது அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் புதிய கட்சியை தொடங்கி உள்ளார்.

மறைந்த ஜனாதிபதி டாக்டர் அப்துல்கலாமின் அறிவியல் ஆலோசகராக பணியாற்றி வந்தவர் பொன்ராஜ். கலாமுடன் சுமார் 20 ஆண்டுகள் பணியாற்றி வந்த பொன்ராஜ், கலாமின் எண்ணங்களை எழுத்தாக, பயிற்சியாக, பேச்சாக வெளிக்கொண்டு வந்தவர். கடந்த ஆண்டு கலாமின் மறைவுக்கு பின் அவரது பெயரில் ”அப்துல்கலாம் லட்சிய இந்தியா இயக்கம்” என்ற அமைப்பை தொடங்கினார். இந்த அமைப்பில் கலாமுடன் பணியாற்றியவர்கள், நண்பர்கள், உறவினர்கள், ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள் மற்றும் மாணவர்கள் என பலரும் இணைந்திருந்தனர்.

இந்த அமைப்பின் மூலம் தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரிகள், பொது அமைப்புகள் ஏற்பாடு செய்த நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பொன்ராஜ் மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் கலாமின் எண்ணங்களை வெளிப்படுத்தி வந்தார்.

இந்நிலையில் நேற்று ராமேஸ்வரத்தில் ‘அப்துல்கலாமின் இலட்சிய இந்தியா கட்சி’ (வி.ஐ.பி.) என்ற பெயரில் அரசியல் கட்சியினை துவக்கினார். ராமேஸ்வரம் அருகே உள்ள பேக்கரும்பில் மறைந்த அப்துல்கலாம் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பொன்ராஜ், அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் தனது ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது, ”கனவு நாயகன் அப்துல்கலாம் நினைவில் தோன்றிய பொன்னான தமிழகத்தை உருவாக்க அவர் விதைக்கப்பட்ட இடத்தில் முக்கிய முடிவை அறிவிக்க இருக்கிறேன். மக்கள் ஆட்சி என்பது மக்களால் மக்களுக்காக மக்களே ஆட்சி செய்யும் அதிகாரத்தை பெறுவது ஆகும்.

a4

ஆனால், மக்களின் பெயரால் உச்சபட்ச அதிகாரத்தை எடுத்துக்கொண்ட ஆட்சியாளர்கள், மக்களை அடிமைகளாகவே வைத்திருக்க நினைக்கின்றனர். இதனால் விவசாயிகள், தொழிலாளர்கள், மீனவர்கள், மாணவர்கள் என யாருமே கேள்வி கேட்ககூட முடியாமல் நிர்க்கதியாக நிற்கின்றனர். அரசு அலுவலர்கள், அதிகாரிகள் அச்சத்தோடு பணியாற்றுகின்றனர். 8 லட்சம் இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றி நடுத்தெருவில் நிற்கின்றனர். இவற்றை எல்லாம் மாற்றுவதுதான் எனது குரு, ஆசான் கலாமின் கனவு. அந்த கனவை நனவாக்க ‘எல்லோரும் இந்நாட்டு மன்னர்’ என்ற கருத்தை உள்வாங்கி ‘அப்துல்கலாமின் இலட்சிய இந்தியா கட்சி’ (வி.ஐ.பி-விஷன் இந்தியா பார்ட்டி) என்ற அரசியல் கட்சியை இன்று துவங்குகிறோம்.

வெளிப்படையான, நேர்மையான, விரைந்து செயல்படக்கூடிய, தன்னிறைவு கொண்ட, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை கொண்ட அரசை குறிக்கும் வகையில் வெண்மை நிறத்தையும், தமிழகத்தில் உள்ள நதிகளை இணைப்பது, அதிதிறன் கொண்ட நீர்வழி சாலைகளை அமைப்பது, தென்மாநிலங்களிடையே தண்ணீர் தகராறு இல்லாத Bactrim online நிலையை உருவாக்குவதை குறிக்கும் வகையில் நீல நிறத்தையும், 2-ம் பசுமை புரட்சியாக இயற்கை வேளாண்மை, அறிவு, அறிவியல் சார்ந்த ஆராய்ச்சி மூலம் விதை முதல் உலக விற்பனை வரை விவசாய கட்டமைப்பை குறிக்கும் வகையில் பச்சை நிறத்தையும் கொண்ட கொடியினை வடிவமைத்திருக்கிறோம். இந்த குறிக்கோள்களின் நாயகனான கலாமின் உருவத்தை கொடியின் மையத்தில் பொறித்துள்ளோம்.

கலாமின் வழிப்படி நடக்கும் லட்சக்கணக்கான இளைஞர்களின் தொடர் வேண்டுகோளினை ஏற்று இந்த கட்சியை துவக்கியிருக்கிறோம். இந்த கட்சியின் மூலம் இளைஞர்களை நல்ல தலைவர்களாக உருவாக்கும் பயிற்சியினை மேற்கொள்ளும் முயற்சியினை துவக்கியிருக்கிறோம். அந்த முயற்சியில் வெற்றியடையும் இளைஞர்களை தேர்தல் களத்தில் போட்டியிட வைப்போம். எங்கள் நோக்கம் ஆட்சியை பிடிப்பது இல்லை. நல்ல தலைவர்களை உருவாக்குவதுதான். எங்களுக்கான காலம் இருக்கிறது. அதனால் எங்கள் முயற்சியில் வெற்றியடையும் வரை எங்களது பயிற்சியை தொடர்ந்து கொண்டே இருப்போம்” என்றவர் தனது கட்சியின் பெயர் பலகையையும், கொடியினையும் அறிமுகப்படுத்தினார்.

முன்னதாக, ராமேஸ்வரத்தில் உள்ள கலாமின் சகோதரர் முகம்மது முத்து மீரா மரைக்காயரை சந்திக்க கலாம் இல்லத்திற்கு சென்றார் பொன்ராஜ். அங்கு மரைக்காயரின் மகள் நசீமா மரைக்காயர், பேரன் சலீம் ஆகியோரை சந்தித்து,  தான் கட்சி தொடங்க உள்ளது குறித்து தெரிவித்தார். அவர்கள் பொன்ராஜுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

– இரா.மோகன்

படங்கள்: உ.பாண்டி

Add Comment