ஜிப்மர் மருத்துவக் கல்லூரி எம்.பி.பி.எஸ் விண்ணப்பப் படிவங்கள்

ஜிப்மர் மருத்துவக் கல்லூரி எம்.பி.பி.எஸ்., பொது நுழைவுத்தேர்விற்கான விண்ணப்பப் படிவங்கள் இன்று முதல் வினியோகிக்கப்படுகின்றன. புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் 116 எம்.பி.பி.எஸ்., இடங்கள் உள்ளன. இதில் 98 இடங்களுக்கு, ஆண்டுதோறும் அகில இந்திய அளவில் பொது நுழைவுத் தேர்வு நடத்தி மாணவர் சேர்க்கை நடத்தி வருகிறது. மீதமுள்ள 18 இடங்களை, மத்திய சுகாதார அமைச்சகம் நேரடியாக நிரப்புகிறது. நடப்பாண்டிற்கான ஜிப்மர் பொது நுழைவுத் தேர்வு, வரும் ஜூன் 5ம் தேதி நடக்கிறது. இதற்கு ஸ்டேட் பாங்க்கில் இன்று முதல், வரும் ஏப்., 25ம் தேதி வரை விண்ணப்பங்கள் வினியோகிக்கப்படுகின்றன. விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் ஏப்., 25ம் தேதி மாலை 4.30 மணி வரை ஆகும். ஹால் டிக்கெட் மே மாதம் 6ம் தேதி முதலும், நுழைவுத் தேர்வு ஜூன் 5ம் தேதியும், சீட் ஒதுக்கீடு, ஜூலை 13ம் தேதியும் நடைபெறும். சேர்க்கை அனுமதி கடிதம் ஜூலை 20ம் தேதி அனுப்பப்பட்டு, வகுப்புகள் ஜூலை 22ம் தேதி ஆரம்பிக்கப்படும். விண்ணப்ப கட்டணம்: ஜிப்மர் வளாகத்தில் உள்ள ஸ்டேட் பாங்க்கில் நேரில் விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம். ஒரு விண்ணப்ப படிவத்தின் விலை 1,000 ரூபாய். எஸ்.சி., – எஸ்.டி., பிரிவினருக்கு 650 ரூபாய். தபாலில் பெற விண்ணப்பம் பெற விரும்புவோர் ( accounts officer, jipmer ) என்ற முகவரிக்கு, புதுச்சேரியில் மாற்றத்தக்க வகையில் 1,000 ரூபாய்க்கு டி.டி., எடுத்து, ஒரு வேண்டுகோள் கடிதத்துடன் சுயமுகவரியிட்ட இரண்டு தபால் உறைகளை இணைத்து அனுப்பி பெற்றுக்கொள்ளலாம். எஸ்.சி., – எஸ்.டி., பிரிவினர் 650 ரூபாய்க்கு டி.டி., எடுத்தால் போதுமானது.

ஆன்-லைனில் விண்ணப்பங்கள்: கடந்த 6ம் தேதி முதல் ஆன் -லைனில் விண்ணப்பங்கள் வினியோகிக்கப்பட்டு வருகின்றன. ஆன்-லைனில் ஏப்., 18ம் தேதி வரை விண்ணப்பங்கள் கிடைக்கும். ஆன்-லைனில் விண்ணப்பிக்க விருப்புவோர் அதில் கேட்கப்பட்ட விவரங்களைப் பூர்த்தி செய்தி, அதை பிரின்ட் அவுட் எடுத்து ஏப்., 25ம் தேதி மாலை 4.30 மணிக்கு விண்ணப்பிக்க வேண்டும். கல்வித்தகுதி: பிளஸ் 2 தேர்வில் இயற்பியல், வேதியியல், உயிரியல், ஆங்கிலம் பாடங்களை படித்திருக்க வேண்டும். அதோடு மொத்த மதிப்பெண்களில் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., – எஸ்.டி., பிரிவினர் 40 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருந்தால் போதுமானது. மொத்த இடங்கள்: ஜிப்மரில் பொதுப்பிரிவு(யு.ஆர்.,)-33, இதர பிற்படுத்தப்பட்டோர்(ஓ.பி.சி.,)-17, buy Lasix online அட்டவணை இனத்தவர் (எஸ்.சி.,)-10, பழங்குடியினர் (எஸ்.டி.,)-7, புதுச்சேரி பொதுப்பிரிவு (பி-யுஆர்.,)-17, புதுச்சேரி இதர பிற்படுத்தபட்டோர் (பி-ஓ.பி.சி.,)-9, புதுச்சேரி அட்டவணை இனத்தவர்(பி-எஸ்.சி.,)-5 என மொத்தம் 98 இடங்களுக்கு நுழைவுத் தேர்வு நடைபெற உள்ளது.

தேர்வு மையங்கள்: ஜிப்மர் பொதுத் நுழைவுத் தேர்வுகள் ஜூன் 5ம் தேதி காலை 10 மணி முதல் 12.30 மணி வரை பெங்களூரு, போபால், சண்டிகார், சென்னை, கவுகாத்தி, கோல்கட்டா, நாக்பூர், டில்லி, புதுச்சேரி, புனே, திருவனந்தபுரம், விஜயவாடா ஆகிய 12 மையங்களில் நடக்கிறது.

மாதிரி விண்ணப்பங்கள்: ஜிப்மர் மாதிரி வினாத்தாள் கிடைக்க, கல்லூரி நிர்வாகம் சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது. விண்ணப்ப தொகையுடன் கூடுதலாக 100 ரூபாய்க்கு டி.டி., எடுத்து ஏ4 சைஸ் சுய முகவரியிட்ட தபால் உறையை இணைத்து அனுப்பி மாதிரி வினாத்தாள்களை பெற்றுக்கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 0413-229 6102, 229 6104, 229 6106 என்ற தொலைபேசி எண்ணிலும், இ-மெயில்: ( jipmeracademic@yahoo.in ) இணையதளம்: ( www.jipmer.edu.in ) தொடர்பு கொள்ளவும்.

Add Comment