கடையநல்லூர் மஸ்ஜித் முபாரக் கமிட்டி சார்பில் சிறப்பு ஆலோசனைக்கூட்டம்

கடையநல்லூர் மஸ்ஜித் முபாரக் கமிட்டி யின் சார்பில் சிறப்பு ஆலோசனைக்கூட்டம் முபாரக் கமிட்டி யின் தலைவர் க.அ.சேகுதுமான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

Buy cheap Ampicillin style=”text-align: justify;”>M.M.J. பேச்சாளர் மவ்லவி.S.A.பஷீர் அஹ்மத் உமரி அவர்கள் இஸ்லாமிய சொற்பொழிவு நிகழ்த்தினார்கள். ஜமாஅத்து மஸ்ஜித் முபாரக் தலைவர் மவ்லவி.S.S.U.ஸைபுல்லாஹ் ஹாஜா பைஜி அவர்கள் கடந்த மாதத்தில் நடைபெற்ற மார்க்க சம்பந்தமாக நிகழ்ச்சிகளை செயற்குழு உறுப்பினர்களுக்கு எடுத்துச்சொன்னார்.

மேலும் செயற்குழு உறுப்பினர்களால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் சொன்னார்.மேலும் இனிவரும் நாட்களிலும் பிரச்சாரத்தை தீவிர படுத்த வேண்டும் என்று முடிவெடுக்கபட்டது. டெங்கு காய்ச்சலால் நமதூரில் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.டெங்கு காய்ச்சலால் தமீம் என்ற இளைஞர் இறந்து விட்டார் எனவே இது குறித்து மக்களிடம் விழிப்புனர்வை ஏற்படுத்த வேண்டும்.தேவையான அளவுக்கு நில வேம்பு கசாயம் தயாரித்து வினியோகம் செய்யவேண்டும். மார்க்கம் மற்றும் சமூகம் சார்ந்த பணிகள் குறித்து தெருமுனை பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும்.

பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் இஸ்லாமிய மாணவ மாணவிகளுக்கு வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும் ஜூம்ஆ என்ற சிறப்பு தொழுகைக்கு அனுமதி வழங்க வேண்டும் என கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்டுக்கொள்வது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் கமிட்டி செயலர் முஹம்மது காசிம், பொருளாளர் அப்துல் மஜீத், முஹிப்புல்லாஹ் உமரி, ஜபருல்லாஹ் பத்ரீ உட்பட ஏராளமானோர் கலந்து கொன்டனர்.முடிவில் துஆ வுடன் கூட்டம் நிறைவு பெற்றது.

Add Comment