கடையநல்லூரில் குடிநீர்ப் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

கருப்பாநதி அணையில் சரிந்து வரும் நீர்மட்டம் கடையநல்லூரில் குடிநீர்ப் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

கடையநல்லூர் நகராட்சி மக்களுக்கு குடிநீர் வழங்கி வரும் கருப்பா நதி அணையில் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வரும் நிலையில், நகரில் குடிநீர்ப் பிரச்னை ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கடையநல்லூர் நகராட்சியின் மொத்த பரப்பு 52.25 சதுர கிலோ மீட்டர். தற்போதைய நிலையில் இங்குள்ள மக்கள்தொகை 90,100 பேர். 13,950 குடிநீர் இணைப்புகள் உள்ளன.

1973 முதல் கருப்பாநதி அணைக்கட்டு திட்டத்தின் மூலம் 35 லட்சம் லிட்டர் குடிநீர் தினமும் விநியோகிக்கப்பட்டு வந்தது. 2003இல் தாமிரவருணி கூட்டுக் குடிநீர்த் திட்டம் செயல்பாட்டுக்கு வந்தது. இவ்விரண்டு திட்டங்களின் மூலம் நாளொன்றுக்கு சுமார் 68 லட்சம் லிட்டர் குடிநீர் விநியோகம் செய்யப்பட வேண்டும். இருப்பினும் கோடை, மின்தடை உள்ளிட்ட காரணங்களால் பல நாள்களில் போதுமான குடிநீர் கிடைக்காத நிலை ஏற்பட்டு வந்தது.

இதை கருத்தில் கொண்டு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ரூ. 21.41 கோடியில் புதிய குடிநீர்த் திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் 2040ஆம் ஆண்டின் மக்கள்தொகைக்கு (1,42,000 பேர்) ஏற்ப, நாளொன்றுக்கு சுமார் ஒரு கோடியே 41 லட்சம் லிட்டர் குடிநீரை வழங்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், புதிய திட்டத்தின் கீழ் 2,650 குடிநீர் இணைப்புகளுக்கு மட்டுமே இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. எஞ்சிய இணைப்புகளுக்கு புதிய திட்டத்தின் கீழ் இணைப்பு வழங்கப்படவில்லை. இதனால் புதிய திட்டத்தால் உரிய பயன் ஏற்படவில்லை.

தற்போது வாரத்துக்கு ஒரு முறை குடிநீர் வழங்கப்படுகிறது. இதற்கிடையே கருப்பாநதி அணையின் நீர்மட்டம் தற்போது தொடர்ந்து சரிந்து வருகிறது. இதன் காரணமாக கடையநல்லூர் நகராட்சிக்கு போதிய குடிநீர் கிடைப்பதில் பிரச்னை உருவாகியுள்ளது. இதே நிலை தொடர்ந்தால், விரைவில் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து, நகராட்சிப் பொறியாளர் கிறிஸ்டோபர் கூறியது: தாமிரவருணி திட்டத்தின் மூலம் சுமார் 30 லட்சம் லிட்டர் தண்ணீர் வருகிறது. சில சமயங்களில் மின்தடை உள்ளிட்ட காரணங்களால் 18 லட்சம் லிட்டர் தண்ணீரே கிடைக்கிறது. அதுபோன்ற சமயங்களில் குடிநீர் விநியோகத்தில் பிரச்னை ஏற்படுகிறது.

கருப்பாநதி அணையின் நீர்மட்டம் குறைந்து வரும் நிலையில், பெரியநாயகம் கோயில் பகுதியிலிருந்து தண்ணீர் பெறுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் புதிதாக தோண்டப்பட்டுள்ள கிணற்றில் மின் இணைப்பு கொடுப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.

புதிய குடிநீர்த் திட்டத்தின் எஞ்சியுள்ள குடிநீர் இணைப்புகளை இணைக்கும் பணிக்காக ரூ. 6.50 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக கிருஷ்ணாபுரம், குமந்தாபுரம் பகுதியிலுள்ள குடிநீர் இணைப்புகள் Doxycycline No Prescription இணைக்கப்படும். அதன் பின்னர் படிப்படியாக அனைத்து இணைப்புகளும் இணைக்கப்படும்.

மேடான பகுதி மக்களுக்காக வாகனங்கள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது என்றார்.
-நன்றி தினமணி செய்தியாளர்
வி.குமாரமுருகன்
தகவல் குறிச்சிசுலைமான்.

Add Comment