கடையநல்லூர் எங்கே போய்க்கொண்டிருக்கிறது? என் நடந்தது?,என பல கேள்விகள்…

இதுவும் கடந்து விடும்….

கடையநல்லூர் ஒரு விபத்து நடந்து முடிந்து விட்டது, காலத்தில் சென்ற மனம்கனத்த சம்பவங்கள் போன்று. இதுவும் கடந்து சென்றுவிடும், ஆனால் இழப்பிற்குள்ளானவர்களை நினைக்கையில் இதயம் கனக்கிறது, வெடித்து விடுமோவென பிடித்துக் கொள்கிறேன் வேதனையில்..

தாய் அன்பை ஏங்கி வளரப்போகும் இளவயதுக் குழந்தைகளை அனாதையாக்கி. அன்பையும் ஆதரவையும் அனுதினமும் விதைத்து, தன்குடும்பத்தை நினைத்து கடல்கடந்து பாடுபடும் , மறுபூமியில் வாழும் ஒரு இளைஞனின் இளம் மனைவியை கொடூரமாகக் கொன்று , மனநிம்மதியை நிர்மூலமாக்கி இழக்க காரணம் யார்?

ஒரு நண்பரின் வரிகள் ..
தறி இருந்த போது நெறி இருந்தது, ஒழுக்க வெறியும் இருந்தது.. ஆனால் இன்று தறி விட்டுப் போனதால், தறிகெட்டுப் போனது நம் தலைமுறை…

கடையநல்லூரில் முன்பிருந்த கலாச்சாரம் சீர்கெட்டு கரையத்தொடங்கி காலங்கள் ஓடிவிட்டன. காரணம் அடுத்த சந்ததியினரை வளர்க்கிறோம் என்ற பெயரில் கேட்பதையும் கேளாததையும் அன்பு என்றபேரில் அள்ளிக்கொட்டுகிறோம், அதனால் வந்த விளைவு தெருக்களை வாகனங்கள் ஓட்டும் பயிற்சி கூடமாக ஆக்கிவிட்டார்கள். இதை ஒருமுறை தட்டிக் கேட்டதால் கும்பல் கும்பலாக வந்து கொலைவெறி மிரட்டல், இதை பலமுறை பலதெருக்களில் பார்த்திருக்கிறேன், அந்த நேரம் சிலபெரியவர்கள் பயந்து நாணி கூனி ஈரம் நிறைந்த கண்களோடு அவமானம் தாங்காமல் போவதைப் பார்த்து நானே கண்கலங்கி உள்ளேன்,..

மிகக் குறைந்த வயதில் தான் பெற்ற மக்களுக்கு அவர்கள் தேவையைக் கண்காணிக்காமல் மிகுந்த ஆற்றலுள்ள மோட்டார் பொருத்தப்பட்ட இருசக்கர வாகனங்கள் வாங்கிக் கொடுத்து அவர்களின் பின்னால் அமர்ந்து இஸ்லாம் அனுமதிக்காத உறவுகளான கொழுந்தன் , சின்ன மாமா மகன், பக்கத்துவீட்டுப் பையன், நான் வளர்த்த பிள்ளை போன்றவன் என்று சொல்லி அவர்கள் பின்னால் மகிழ்ச்சியுடன் பெண்கள் பயணிப்பதில் தொடங்குகிறது அநாகரீக அசிங்கமான புதிய உறவுகள் வெட்க்ககேடு, (அப்துல்லாஹ்)

கடையநல்லூர் எங்கே போய்க்கொண்டிருக்கிறது? ஏன் இப்படி? என் நடந்தது?,என பல கேள்விகள் என்மனதில் எழுகிறது, அழிவை நோக்கிய ஆரம்பமா? , ஒருகாலத்தில் நான், எனது தெரு பெரியவர் எதிரே வருகிறார் என்பதற்காக மடித்துக்கட்டிய வேட்டியை இறக்கி விட்டுச்செல்வேன், அப்படித்தான் பெரும்பாலானவர்கள் இருந்தனர் அன்று , இன்று அப்படியா?? அதற்கு நேர்எதிர் மறையான நிகழ்வுதான் அன்றாடம் காண்கிறேன், இதற்கு காரணம் பெற்றவர்கள் ,….. வீட்டில் ஒருநபர் கடல்கடந்து தனது ஆசாபாசங்கள் அனைத்தையும் தியாகம் செய்து உழைத்து சம்பாதித்து அனுப்பி பணத்தை , ஒரு உறுத்தலும் இல்லாமல் பிள்ளைகள் கேட்க்கும் போதெல்லாம் கொடுத்து நாசமாக்குவது , காரணம் இவர்கள் உழைத்து உடல் வருத்தி உண்டாக்கிய காசில்லையே யாரோ கஸ்டப்பட்டு அனுப்பும் பணம்தானே , அதனால் பிள்ளைகளோ அவரவர் மனதிற்குள் பரம்பரை பணக்காரர்கள் என்ற மமதையில் தான்தோன்றித்தனமாக வளருகிறார்கள், அதேநேரம் தங்களது பிள்ளைகளுக்கு உண்மையின் நிலையை உணர்த்த தவரிவிடுகிறார்கள், சிலர் அதை கௌரவக் குறச்சலாக் கருதுகிறார்கள்..

கடையநல்லூர் முஸ்லீம்களை பொருத்தவரை கடந்த 35,40 ,வருடங்களுக்கு முன்புவரை வசதியற்றவர்களாகவும் அன்றாடங்காச்சிகளாகவும் 99% சதவிகிதத்தினர் இருந்துள்ளனர் , ஒருநேர கும்பா சோளாகாடியை வெரும் வெங்காயம் துணையுடன் குடித்துவிட்டு, காக்குழில் இறங்கி தறிநெய்து ஒருசாம்பு (நான்கு வேஷ்டி) நெய்து தரகன் வீட்டிக்கு போய் கைகட்டி வாய்பொத்தி காத்திருந்து, தரகன்மார்கள் ஏவுகணைபோன்று ஏச்சு பேச்சு அனைத்தையும் பொருப்படுத்தாமல்…

(சிலநேரங்களில் மெதுவாக தரகனின் அருகில் போய் வீட்டுக்காரி குழந்தை பெத்து இருக்கு ஒரு ஐந்து ரூபாய் கூட கொடுங்க என்று கேட்டால், அதற்கு தரகன் .. எல மாடான் இறுக்கி புடிச்சுகிட்டு தின்னையிலே படுக்க வேண்டியதுதானே , நான் பணம் தர்ரேன்னு சொல்லி புள்ளைய பெத்துகிட்டே இருப்பியல , இப்படியெல்லாம் ஏச்சு பேச்சு கேட்டுகிட்டு) .

.. அவர்களிடம் Buy cheap Doxycycline அன்றைய தேவைக்காக கைஏந்தி 5,ரூபாய் 10, ரூபாய் என வாங்கி வீடு வரும் தந்தையை, தாயாரும் சகோதரிகளும், சகோதரர்களும், இமைமூடாமல் எதிர்ப்பார்புடன் ஏக்கத்துடனும் ,நல்ல சேதிய சொல்லிட மாட்டாரா வாப்பா , கைசெலவுக்கு ஒருபைசா கூட இல்லை என்று காத்திருக்கையில் வாப்பா பெருமூச்சுடன் அழுக்கடைந்த மேல்துண்டை ஆடுவாசலுகு மேலே கொளுவி விட்டு எல்லோர் முகத்தையும் ஒருமுறை பார்த்துவிட்டு , 10,ரூபாய் கிடைத்தது என்று சொன்னதும் எல்லோருக்கும் சந்தோசத்தின் எல்லைக்கே சென்றுவிடுவார்கள்.

காரணம் நாளைய சோளாக்காடி குடிக்கவும் , இன்றைய பொழுதுபோக்கவும் வேண்டித்தான் ……….. அப்படிப்பட்ட சந்ததிக்கு பிறந்த கூட்டம் இன்று தலைகால் புரியாமல் ஏதோ பணக்கார பரம்பரை என படம்காட்டித் திரிகிறார்கள் வெட்கக்கேடு . ஆணவம் அகம்பாவம், திமிர்,அதோடு பெரிய ஆள் ,சிறிய ஆள் , மறியாதை கொடுப்பதில்லை , இதற்கு காரணம் அவரவர்கள் தாய்தந்தையரை தான் குறைசொல்லியே ஆகவேண்டும், எதற்கெடுத்தாலும் சின்னப்பையன் விட்டுவிடுங்கள், போகப்போக சரியாகிடும் என்று ஆதரவு கொடுப்பதும் அவர்கள் தவறுகள் செய்ய உரமாகிறது….

மகன்கள் கேட்கும் போதெல்லாம் பணத்தை அள்ளிக் கொடுப்பது, எதுகேட்டாலும் அப்போதே தாமதமில்லாமல் கொடுப்பது, ஏன் எதற்கு என்று கேட்பதேயில்லை, தெப்பக்குளத்தை சுற்றி அனைத்து அனாச்சாரங்கள் அரங்கேறி வருகிறது, கஞ்சா வியாபாரம், டாஸ்மாக் சாராயவியாபாரம் , இன்னுபிற போதைவஸ்துக்கள் அனைத்தும் முப்பொழுதும் தங்குதடையின்றி தாராளமாக நடந்து வருகிறது,

இது பல தாய்மார்களுக்கு தெரிந்தும் ,…. தயவுசெய்து எம்புள்ளைய பத்தி வெளிய சொல்லிடாதிங்க நல்லா இருப்பிய என்று என்னிடமே கெஞ்சுவதை பார்த்திருகிறேன் ..
அதேநேரம் எமதூதர் பெண்களிடம் 60.. % சதமானம் ஆடம்பரம், ஆணவம் , அகங்காரம், சொல்கேளாமை, இன்னுபிற கெட்ட அனைத்து அம்சங்களும் ஒருங்கே அமைந்துள்ளது , இதுவும் தங்களது பிள்ளைகள் கெட்டு குட்டியச் சுவராக போகக்காரணம் ,. அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்.. …. தொடரும்..

Haider Ali

Add Comment