பாலைவனமான அரபு தேசத்தில் ஒரு சோலைவனம் “சலாலா”

140d1319-674c-42f1-af93-57d9b6eaaaf2

d6fe1032-60cf-496a-ae1d-5bf1418d1be3

d964c966-126c-43f2-b6da-38ca2a2b221a

மத்திய கிழக்கு நாடுகளிலே தொடர்சியாக பணி புரிபவர்களுக்கு நீண்ட விடுமுறைகள் வருடத்தில் எப்போதாவது தான் கிடைக்கும். அப்படி கிடைக்கும் விடுமுறைகளில் “ஈத்” பெரு நாளுக்காகக் கிடைக்கும் விடுமுறை மிக முக்கிய(நீள)மானது. அந்த விடுமுறையை எப்படியெல்லாம் பயன் மிக்கதாகக் கழிப்பதென ஒவ்வொருவரும் ஒரு திட்டம் தீட்டி வைத்து அந்த நாட்களுக்காகக் காத்திருப்பது வழமை. அப்படித்தான் இந்த முறை கிடைத்த ஆறு நாள் தொடர்சியான விடுமுறையை அமீரகத்துக்கு சென்று நண்பர்களுடன் கழிக்கலாமென திட்டமிட்டிருந்தேன், ஆனால் என்ன கொடுமை சில சட்ட சிக்கல்களால் அங்கே இந்த விடுமுறைக்கு போக முடியாதென சோகமாக முடிவாக, உள்ளூரிலே எங்களது பயணச் சுற்றுலாவை அமைப்பதென நானும் என் நண்பர்களும் முடிவாக முடிவெடுத்தோம்.

உடனே எங்கள் கண் முன்னே வந்து நின்றது Buy cheap Cialis ஓமானின் தென் நகரமான “சலாலா (Salalah)” தான்…
அது என்னடா “லக லக” என அக்னி முணு முணுப்பதால் , சலாலா பற்றி ஒரு சிறு அறிமுகம் இதோ..

இறைவனது படைப்புக்களின் விநோதங்களை அளவிடவே முடியாது போலுள்ளது. ஆரேபிய நாடுகள் என்னும் போது, அந்த நாட்டினைப் பற்றி எமக்கு என்னென்ன எண்ணவோட்டங்கள் மனதிலே எழுகின்றனவென்று சிந்தித்தால் அதில் பின் வருவன தப்பாமல் இருக்கும்.

மத்திய கிழக்கில் கொட்டிக் கிடக்கும் எண்ணெய் மற்றும் தங்கம் போன்ற தாதுப் பொருட்கள்.
மணல் மண்டிக் கிடக்கும் பாலை வனங்கள்.
மனிதரை உயிருடனேயே எரித்துவிடும் வெயில்.

ஆம் இவை உண்மையும் கூட, ஆனால் “இது மத்திய கிழக்கு நாடுகளின் எல்லாப் பகுதிக்கும் பொருந்தா” என்பதே நிஜம். அப்படி வழமைக்கு மாறாக மாறிப் படைக்கப்பட்ட ஒரு அற்புதம் தான் ஓமான் நாட்டின் “சலாலா” பிராந்தியம். நான் இருக்கும் “மஸ்கட்”டுக்கும் “சலாலா”க்கும் இடை கிட்டத்தட்ட 1200 கிலோமீட்டர் இடை வெளி இருக்கும். மஸ்கட்டிலிருந்து தரை வழிப்பயணமாக செல்வதென்றால், பாலை வனங்களிடை 12 மணி நேர நெடி…..ய பயணத்தை மேற்கொள்ள வேண்டி வரும். அதாவது ஓமான் நாட்டின் தலைப்பகுதியில் மஸ்கட் இருந்தால் ஓமானின் கால் பகுதியின் டோஃபார்(Dhofar) மாநிலத்திலே அக்னியின் இந்த “லக லக” அமைந்துள்ளது.

ஓமான் நாட்டிலே மஸ்கட்டுக்கு அடுத்த பெரிய நகரமான “சலாலா” அரேபியாவின் வாசனைத் திரவிய நகரம் (Perfume City of Arabia) எனப்படுகிறது. பொதுவாக ஓமான் மக்கள் வாசனைத் திரவியங்களை அதிகமாக உபயோகிக்கும் பழக்கம் மிக்கவர்கள், அதிலும் இந்த “சலாலா” மிகப் பிரபலமானது. வீட்டுக்கு வீடு தங்களுக்கு தேவையான வாசனைத் திரவியங்களை தாங்களே தயாரித்துக் கொள்வார்கள். “சலாலா” என்றால் கடலும் கடலை எட்டிப் பார்க்கும் மலைகளும் ஆங்காங்கே காடுகளாக பரிணமித்துக் கொண்டிருக்கும் மரங்களுமென வரையறுத்துவிடலாம். அத்துணை இயற்கை வளங்கள் செறிந்தது இந்த “சலாலா”. மஸ்கெட்டிலே வெயில் நெருப்பாக சுழன்றடிக்கும் அதே காலப்பகுதியில் இங்கே நிஜமாக மழை பெய்து “சலாலா” வையே பச்சையாக மாற்றுவது தான் அற்புதம். அந்த கால கட்டத்திலே அங்கு நடக்கும் “Khareef Festival” உலகப் பிரசித்தமானது. இந்த பண்டிகைக்காக சுற்றுலாப் பயணிகள் ஜுன் தொடக்கம் செப்டம்பர் மாத காலப் பகுதியில் வந்து குவிவார்கள்.

ஓவியன்

Add Comment