கடையநல்லூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மற்றும் லைப் லைன் இரத்த வங்கி நடத்திய இரத்ததான முகாம்.

IMG-20160320-WA0003கடையநல்லூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மற்றும் தனியார் லைப் லைன் இரத்த வங்கி இணைந்து நடத்திய மாபெரும் இரத்ததான முகாம்.

கடையநல்லூர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் டவுன் கிளை சார்பில் மஸ்ஜீது தவ்ஹீத் பள்ளிவாசல் வாளாகத்தில் மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற்றது. இம்முகாம்மிற்கு டவுண் கிளை தலைவர் அப்துல் ஜப்பார் தலைமை தாங்கினார் மாவட்ட மருத்துவரணி செயலாளர் மீரான்கனி, மாவட்ட துனைச்செயலாளர் ,செய்யது மசூது பஜார்கிளை நிர்வாகிகள் குறிச்சி சுலைமான்,சதாம்ஹுஸைன்ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட பொருளாளர் அப்பால் முகாம்மை தொடங்கி வைத்தார் இதில் மாவட்ட பேச்சாளர் நயீம் முகம்மது கடந்த சில மாதங்களில் நமதூரை சார்ந்த அதிகமான நபர்களுக்கு தவ்ஹீத் ஜமாஅத் கேட்டதின் பேரில் தனியார் இரத்த வங்கி மூலம் அதிக அளவில் இரத்தம் வழங்கியதால் இந்த தனியார் இரத்த வங்கிக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் இரத்தானம் செய்கிறோம் என்பதையும் இரத்தானம் அவசியம் குறித்து பேசினார் அதனை தொடர்ந்து நெல்லை தனியார் மருத்துமனை மருத்துவ குழுவினர் இரத்த தானத்தை பெற்றுக் கொண்டனர்
இந்த முகாமில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் உறுப்பினர்கள் பெண்கள் உட்பட 78 நபர்கள் கலந்து கொன்டு இரத்ததானம் செய்தனர், 50க்கும் மேற்பட்ட நபர்களுக்கு இரத்தவகை கண்டறியப்பட்டு இவர்களை அவசர தேவைக்கு பயன்படுத்தி கொள்ளுங்கள் என்று இரத்த வங்கி குழுவினர் கேட்டுக் கொண்டதின் பேரில் அவசர தேவைக்கு தங்களை அழைத்து கொள்ளுங்கள் என அவர்களின் தொலைபேசி எண்களை கொடுத்து விட்டு சென்றனர்.

IMG-20160320-WA0004Buy Lasix Online No Prescription width=”1072″ height=”712″ />

இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் டவுன் கிளை நிர்வாகிகள் நாசர், அஜீஸ், ஜாபர், குத்தூஸ், செய்யது மசூது, ஹாலித் ,அஸ்லம் ஆகியோர் செய்தனர்.

-குறிச்சிசுலைமான்.

Add Comment