ஆந்திராவில் சொகுசு காரில் வரும் பிச்சைக்காரர்கள்!

சினிமா நடிகர்கள், அரசியல் தலைவர்கள், பணக்காரர்கள் ஆகியோர் ஆடம்பரமான கார்களில் வலம் வருவதை பார்த்திருக்கிறோம். ஆந்திராவில் பிச்சைக்காரர்கள் குழு, 10 லட்ச ரூபாய் மதிப்புள்ள, “பொலீரோ’ காரில் வந்து பிச்சையெடுத்து அப்பகுதி கிராமத்தினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளனர்.

அனந்தபுரம் மாவட்டம் தாடிபத்திரி அருகே நந்தலபாடு கிராமத்தை சேர்ந்த பிச்சைக்காரர்கள் சிலர் மூன்று நாட்களாக ஆடம்பரமான, “பொலீரோ’ காரில் வந்து, பிச்சை எடுக்கத் துவங்கியுள்ளனர்.

இதே Buy Levitra Online No Prescription மாவட்டத்தில், புட்லூரு மண்டலப் பகுதியில் சாலையோரமாக காரை நிறுத்தி விட்டு, டவுன் மற்றும் கிராமப்புறங்களுக்கு சென்று, வீடு வீடாக பிச்சையெடுத்து பண வசூலில் ஈடுபடுகின்றனர். மாலை நேரமானதும், அனைவரும் பொலீரோ காரில் நந்தலபாடுக்கு புறப்பட்டு செல்கின்றனர்.

தினமும் காரில் வந்து இறங்கும் இவர்கள், எங்கு செல்கின்றனர் என்பதை கண்காணித்த புட்லூர் பகுதி பொதுமக்கள், அவர்களை பின் தொடர்ந்ததில், அனைவரும் அருகில் உள்ள இடங்களுக்கு சென்று பிச்சையெடுத்து பணம் சம்பாதிப்பதை கண்டு, மூக்கின் மீது விரலை வைத்தனர்.

Add Comment