
கடையநல்லூரில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி: பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்பு
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலில் கடையநல்லூர் சட்டமன்ற தொகுதியில் பொதுமக்கள் 100% வாக்களிக்க வேண்டி, வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
,கடையநல்லூர், சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்களிப்பதன் அவசியம் குறித்து வாக்காளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மக்கள் கூடும் இடங்களில் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. பேருந்துகள், அரசு அலுவலகங்கள் மற்றும் நியாயவிலைக் கடைகளில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, கடையநல்லூர் தாருஸ்ஸாலாம் துவக்கப் பள்ளியில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை கடையநல்லூர் தாசில்தார் நாகராஜ் துவக்கி வைத்தார் இப்பேரணி கடையநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட முஸ்லிம் பகுதியான பெரியதெரு ,புதுத்தெரு பஜார்வீதி ஆகிய இடங்களில் விழிப்புணர்வு Buy Cialis பேரணி நடைபெற்றது.
இதில் மாணவ, மாணவிகள் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை தாங்கியும், விழிப்புணர்வு வாசகங்களை கோஷம் எழுப்பியும் பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இந்நிகழ்ச்சியில் பள்ளியின் ஆசிரியர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
-குறிச்சிசுலைமான்