சவூதியில் ஆர்ப்பாட்டம்! துப்பாக்கி சூட்டில் 4 பேர் காயம்

ரியாத்: வளைகுடா நாடெங்கிலும் பரவி Buy Doxycycline வரும் ஆர்ப்பட்டங்கள் தற்போது சவூதியிலும் பரவ ஆரம்பித்துள்ளது.

சவூதி அரேபியாவின் கிழக்கு மாகாணத்தில் நேற்று வியாழக்கிழமை அன்று ஆர்பாட்டகாரர்கள் கும்பல் ஒன்றை கலைக்க கண்ணீர்புகை குண்டுகள் மற்றும் துப்பாக்கி சூடும் நட்த்தப்பட்டது. இதில் சுமார் நான்கு பேர் காயமடைந்துள்ளதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்.

சம்பவத்தை நேரில் கண்ட ஒருவர் கூறியபோது சவூதி காவல்துறையினர் 200 க்கும் மேற்பட்ட ஆர்பாட்டகாரர்களை கலைக்க கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். மேலும் துப்பாகி சூடு நட்த்தப்படும் சப்தமும் கேட்டதாக தெரிவித்தார். மேலும் அவர் துப்பாக்கி சுடும் சப்தம் கேட்டது ஆனால் அது எங்கு சுடப்பட்டது என்பதை தாம் பார்க்கவில்லை என்றும் கூறினார்

ஆர்பாட்டத்தில் பங்கு பெற்ற ஒருவர் கூறும்போது இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 4 பேர்கள் காயம் அடைந்ததாக கூறினார்.

Add Comment