பொது நலன் கருதி…- அப்துல் வதுத்

பொது நலன் கருதி…
———////———-
ஓட்ட மாத்துங்க நாம் படும் 
பாட்ட மாத்துங்க எந்த கட்சிக்கும் 
நோட்ட மாத்தாதிங்க!

தேர்தல் கடமைய ஓட்டு
போடும் உரிமைய நூறு சதமுன்னு
பதிவுபண்ணுங்க!

இலவசங்கள நாம
எதுக்கு வாங்கனும் புழுவ போட்டுத்தான் 
மீன் புடிக்குவானுங்க!

நம்ம மக்களே நம்ம
நாட்ட ஆளனும் நல்ல ஒருவர
தலைவன்ஆக்குங்க!

வாய்ப்பு மறுபடி நம்ம
வாசல் தட்டுது அறிவுகண்ணயும்
திறக்கவேனுங்க!

குடிக்கும் தண்ணில உணவு
கரண்ட்டு, கல்வினு ஒன்னுவிடலங்க
ஊழல் தானுங்க!

பழைய அமைச்சரே பதவி
ஓய்வு கொள்ளுங்க! இளைய புலிகட்கு 
இருக்கை தாருங்க!

அம்மா ஆண்டாலும் பெரிய
அப்பா ஆண்டாலும் தப்பா ஆண்டாக்க
தலையில் குட்டுங்க!

கள்ள ஓட்டுல பினாமி
கருப்பு பணத்துல பதுங்கபாக்குற
நரிய விரட்டுங்க!

மக்கள் வரிப்பணம்
தக்க வகையிலே மக்கள் நன்மைக்கே
சட்டமாக்குங்க!

நாட்டு வளங்கள பெரிய
கார்பரேட்டுக்கு தாரவார்ப்பத
தட்டிக்கேளுங்க!

வாழ தெரிந்தவன் கையில்
வாழ்க்க இருக்குது; அட ஆளதெரிந்தவர் 
ஆட்சிசெய்யுங்க!

நினைச்சு பாக்கனும் மக்க
நிலைம மாறனும் அஞ்சுவருசமா 
ஏன் online pharmacy without prescription அவதிப்படனுங்க?
– அப்துல் வதுத்

Add Comment