ஏன் இந்த இயக்க வெறி?

நான் எந்த இயக்கத்தையும் சார்ந்திராதவன் அதைப்போல என்னை இயக்கும் ஆற்றலுக்கு தினமும் நன்றி சொல்பவன் கூட..

இயக்கத்தின் சார்பாக பதிவிடுபவர்களின் சுயவிவரங்களை பார்த்தால் பெரும்பாலும் பள்ளிக்கூட மாணவர்களாகவோ அல்லது கல்லூரி படிக்கும் மாணவர்களாகவோ இருக்கிறார்கள்..

அதில் எனது சொந்தகாரபையனும் ஒருவன், அதி தீவிரமான இயக்க பற்றாளர் அவன் கல்லூரியில் படித்து கொண்டிருக்கிறான், நான் பல முறை சொல்லிபார்த்து விட்டேன், உன்னையே மற்றும் உன் படிப்பையே நம்பி இருக்கும் உன் தாய் தந்தையை நினைத்துக்கொள், இயக்கங்களும் அவைகள் நடத்தும்போராட்டங்களிலிருந்தும் விலகி இருந்து கொள், இயக்கத்தினாலும் அவர்கள் நடத்தும் போராட்டங்களில் கலந்து கொள்வதாலும் வருங்காலத்தில் எந்த வித ஒரு சிறு பயனையும் அடைந்து விடப்போவதில்லை.. இயக்கத்தின் தலமைகளுக்கு வேண்டுமானால் அவர்கள் நடத்தும் போராட்டம் பல வகையில் பயன் இருக்கலாம், உனக்கு எந்த பயனும் கிட்டபோவதில்லை என்று.. உண்மையை புரிந்துகொள்ள அவனால் Buy Ampicillin Online No Prescription முடியவில்லை.

அவனைப்போல் நிறைய இருக்கிறார்கள்…

ஏன் இந்த இயக்க வெறி? மனிதனை சமமாக பார் என்று சொன்ன மார்க்கத்தில் ஒரு இயக்கத்திற்கு ஒருவரை பிடிக்கவில்லை என்றால் அவர் மீது பயன்படுத்தபடும் வார்த்தைகளின் வீச்சு படு கேவலமாக இருக்கிறது
அது அதே மார்க்கத்தை சேர்ந்தவராக இருந்தாலும் சரியே, பிடிக்கவில்லை என்றால் அப்படித்தான்
இதில் எந்த இயக்கங்களும் சளைத்தவர்கள் அல்ல..

எங்கிருந்து கற்று வந்தார்கள் இப்படி ஒரு அணுகுமுறையை?

ஃதாயிப் நகரத்தில் பெருமானர் மீது கல்லாலும் சொல்லாலும் வீச்சுகள் நடந்தபோது பேரமைதி காத்தார்களே அந்த அமைதியில் அந்த மன்னிக்கும் பண்பில்
எதிரிகள் மீது காட்டிய
அரவணைப்பால்தானே இவ்வுலகத்தில் இசுலாம் இப்படி விரிந்து கிடக்கிறது..

நாம் நபிவழி செல்கிறோம் என்பது இப்போது வரையில் உதட்டளவில் மட்டுமே…

 Abubacker Siddique

Add Comment