ஜெத்தா வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 1000 கார்கள்

ஜெத்தா : ஜனவரி 26 அன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெத்தாவில் ஏற்பட்ட வெள்ளத்தில் பலர் வீடு, வாகனங்களை இழந்து பாதிப்புக்குள்ளானார்கள். அவர்களுக்கு சவூதி இளவரசர் அல் வலீத் பின் தலால் 1000 கார்களை வழங்கினார்.

அல் வலீத் பின் தலால் அறக்கட்டளையின் தலைவரான அல் வலீத் ஜெத்தா மக்கள் எப்போதும் தம் இதயத்துக்கு நெருக்கமானவர்கள் என்றார். இதற்காக தென் கொரிய கார் நிறுவனத்திடம் 1000 கியா கார்கள் வாங்க சிறப்பு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

மேலும் 10,000 குடும்பங்களுக்கு வீட்டுக்கு தேவையான வீட்டு பொருட்களும், ஏர் கண்டிஷனர்கள், வாஷிங் மெஷின்கள், Buy Lasix குக்கர்கள், ப்ரிஜ் போன்றவையும் விநியோகம் செய்யப்பட்டன என்றார். மேலும் இப்பொருட்களை உரியவர்களிடம் சேர்ப்பிக்க உலக முஸ்லீம் இளைஞர்கள் சபையுடன் இணைந்து செயல்பட்டதாகவும் அல் வலீத் பின் தலால் அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

Comments

comments

Add Comment